For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மனநல மருத்துவமனையில் இருந்தவர்கள் சுய அனுபவம் குறித்து கூறிய பகீர் வாக்கு மூலங்கள் - இரகசிய டைரி!

மனநல மருத்துவமனையில் இருந்தவர்கள் சுய அனுபவம் குறித்து கூறிய பகீர் வாக்கு மூலங்கள் - இரகசிய டைரி!

By Staff
|

இது... ஏதோ ஒரு காரணத்தால்... ஒருசில நாட்கள், ஓரிரு மாதங்கள்... சில வருடங்கள் மனநல மருத்துவமனையில் தங்கியிருந்தவர்கள். அந்த உலகிற்கும், வெளியுலகிற்கும் இருக்கும் வித்தியாசம் என்ன, அங்கே அவர்கள் பெற்ற அனுபவம், அவர்களுக்கு கிடைத்தவை, இழந்தவை... இழைக்கப்பட்ட அநீதி... கற்றுக் கொடுக்கப்பட்ட நல்லவை, கெட்டவை குறித்து வெளிப்படியாக கூறியிருக்கும் வாக்கு மூலங்கள்.

மனநல மருத்துவமனை என்றால்... பாழடைந்த கட்டிடங்கள்... பச்சை நிற உடை அணிவித்து, சங்கிலியால் கட்டிப்போட்டு, துன்புற வைத்திருப்பார்கள் என்ற பார்வை தான் நம்மிடையே இருக்கிறது. இது முற்றிலுமான உண்மை அல்ல. சில மருத்துவமனைகளில் அவர்கள் நிம்மதி பெறுகிறார்கள்... சில மருத்துவமனைகளில் அவர்கள் வெளியே சொல்ல முடியாத கொடுமைகளை அனுபவிக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மனைவி!

மனைவி!

நான் என் மனைவியை முதல் முறையாக கண்டது ஒரு மனநல மருத்துவமனையில் தான். நானும் அதே மருத்துவமனையில் தான் சில காலமாக தங்கி சிகிச்சை பெற்று வந்தேன். இதில், கவலை என்னவெனில், நாங்கள் இருவருமே தற்கொலைக்கு முயற்சி செய்து மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள். பிறகு, நாங்கள் இருவருமே திருமணம் செய்துக் கொண்டோம்.

 நூறு சதவிதம்!

நூறு சதவிதம்!

நான் ஒரு மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். என் வயது 23. இந்த 23 ஆண்டு காலத்தில் நான் சௌகரியமாக உணர்ந்த முதல் நாள், முதல் நேரம்.... நான் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் தான். என்னை நூறு சதவிதம் அதற்கு முன் யாருமே ஏற்றுக் கொண்டதில்லை. அங்கு இருந்தவர்கள் தான் என்னை, என் வாழ்வில் முதன் முதலாக நூறு சதவிதம் ஏற்றுக் கொண்டனர்.

நிம்மதி!

நிம்மதி!

நேர்மையாக உண்மையை கூற வேண்டும் எனில்... நான் மருத்துவமனையில் இருந்த நாட்கள் vs வெளியுலகில் இருக்கும் நாட்கள்... இதில் எது நிம்மதியாக, நான் விரும்பும் வகையில் இருந்தது என யாராவது என்னிடம் கேள்வி கேட்டால்.. நான் நிச்சயம் மனநல மருத்துவ மனையில் இருந்த நாட்களை தான் கூறுவேன். அங்கே என்னைப் போலவே என்னுடன் இருந்தவர்களும் உண்மையாக இருந்தனர்.

கற்பழிப்பு!

கற்பழிப்பு!

நான் முதல் முறையாக போதை மாத்திரை எடுத்துக் கொண்டதும்... சிகரட் புகைத்ததும்... கஞ்சா பயன்படுத்தியதும்... என் கற்பை இழந்ததும் மனநல மருத்துவ மனையில் தான். வெளியுலகம் பார்க்கும் மனநல மருத்துவமனை வேறு... உள்ளே இருந்து மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் காணும் மனநல மருத்துவமனை வேறு. உங்கள் மனநலம் சரியானாலுமே கூட... அதை சரியாக விடாமல் பார்த்துக் கொள்ளும் மனநல நிலையங்கள் சிலவன இருக்கின்றன.

மிஸ் செய்கிறேன்

மிஸ் செய்கிறேன்

நிஜத்தை கூற வேண்டும் என்றால்... நான் நிறையவே என் மனநல மருத்துவ மனையை மிஸ் செய்கிறேன். அங்கே நான் இருந்த நாட்கள் மிகவும் மன நிறைவை அளித்தது. நான் கடந்து செல்லும் நரகத்தை அனைவரும் அறிவார்கள். அங்கே நாங்கள் அனைவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தோம். உலகில் இழைக்கப்படும் அநீதி அங்கே இல்லை.

சிறந்த நண்பர்கள்!

சிறந்த நண்பர்கள்!

மனநலம் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தால் எனக்கு சிறுவயதில் இருந்தே நல்ல நண்பர்கள் என்று கூறிக் கொள்ள யாரும் இல்லை. காரணம் என்னுடன் யாரும் அவ்வளவு பெரிதாக பழகியது இல்லை. ஒரு நாள் மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். அங்கே எனக்கு சிலரது அறிமுகம் கிடைத்தது. என்னுடன் அவர்கள் நிறைய பழகினார்கள். இன்றுவரையிலும் என் வாழ்வின் சிறந்த நண்பர்கள் யார் என்று கேட்டால் நான் அவர்களை தான் கை காட்டுவேன்.

சமம்!

சமம்!

என் பதின் வயதில் ஒருவார காலம் மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டேன். அந்த நாட்களை நான் மிகவும் விரும்புகிறேன். அங்கே யார் ஒருவரும் மற்றொருவர் மனம் புண்படும் படி கேலி செய்வதில்லை, கிண்டலடிப்பது இல்லை. அனைவரும், அனைவரையும் தங்கள் உறவாக காண்கிறார்கள். அனைவரும் சமம் என்ற பார்வை கொண்டுள்ளனர். இந்த உலகிற்கு தான் கிறுக்கு பிடித்துள்ளது. அங்கே உள்ளவர்களை நான் மிகவும் மிஸ் செய்கிறேன்.

சோகம்!

சோகம்!

என் மனம் முழுக்க ரணமும், சோகமும் மட்டுமே நிறைந்திருந்தது. அதை யாராலும் வெளி கொண்டு வர முடியவில்லை. ஒரு கட்டத்தில் எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று கருதி ஒரு மனநல மருத்துவமனையில் அனுமதித்தனர். அந்த காலக்கட்டம் தான் என் வாழ்வில் மிகவும் சோகமானது என்று நான் குறிப்பிடுவேன். ஆனால், என் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டது அங்கே தான். அங்கிருந்தவர்கள் தான் என் சோகத்தை போக்கினார்கள். என்னை மீண்டும் ஒரு மனிதியாக ஆக்கினார்கள்.

வெள்ளை!

வெள்ளை!

மனநல பாதிப்பு என்று கூறி ஒரு வாரம் என்னை ஒரு மனநல மருத்துவமனையில் அனுமதிக்க கூறினார் மருத்துவர். ஒருவிதமான அச்சம்.. எப்படி அங்கே ஒரு வாரம் இருக்க போகிறேன் என்ற எண்ணத்தால் உடல் முழுக்க பதட்டம். ஆனால், அங்கே சென்ற பிறகு தான் வாழ்க்கையின் உண்மை நிறத்தை உணர்ந்ந்துக் கொண்டேன்.

நாம் அனைவருமே வாழ்க்கை வண்ணமையமாக அமைய வேண்டும் என்ற ஆசையில்... ஒரு அழகான வெள்ளை தாளில் கையில் கிடைக்கும் வர்ணத்தை எல்லாம் எடுத்து கிறுக்கி தள்ளுகிறோம்.

ஆனால், நம் வாழ்க்கையின் உண்மை நிறம் வெள்ளை. அதை நாம் மறந்துவிடுகிறோம். கடைசி வரை யார் ஒருவர் அந்த காகிதத்தை வெள்ளையாகவே கறைப்படியாமல் வைத்துக் கொள்கிறார்களோ அவர்கள் தான் வெற்றியாளர்கள். இதை நான் அங்கிருந்த ஒரே வாரத்தில் கற்றுக் கொண்டேன்.

சுதந்திரம்!

சுதந்திரம்!

ஸ்பூனில் தான் சாப்பிட வேண்டும். கதவுகளை சாத்த கூடாது... என பல சட்டங்கள் பின்பற்ற வேண்டியிருந்தது. அனைவரும் அதை கடைப்பிடித்து வந்தனர். யார் ஒருவருக்கும் தனது ஸ்பூனை வேறு ஒருவர் எடுத்துவிடுவார் என்ற அச்சம் இல்லை. கதவு சாத்தாமல் வைத்திருந்தால்... யாராவது உள்ளே புகுந்து விடுவார்கள் என்ற எண்ணமே அவர்களிடம் இல்லை. பல சட்டத் திட்டங்களுக்கு நடுவே அவர்கள் சுதந்திரமாக வாழ்ந்து வருவதை கண்ட போதுதான் வாழ்வின் அர்த்தம் புரிந்துக் கொள்ள முடிந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Secret Confession: Shocking Confess of People Who Were Once Stayed in Mental Hosppital

Jaw-Dropping Confessions On What Staying In A Mental Hospital Is Actually Like
Desktop Bottom Promotion