For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆசைக்கு ஒத்துழைக்காத மாணவியின் வாழ்க்கையை சீரழிக்க முயன்ற பேராசிரியர் - My Story #290

ஆசைக்கு ஒத்துழைக்காத மாணவியின் வாழ்க்கையை சீரழிக்க முயன்ற பேராசிரியர் - My Story #290

By Staff
|

இந்த சம்பவம் நடந்து 2 ஆண்டுகளுக்கு மேலாகி இருக்கும். ஆனால், எனக்கு வாழ்க்கை என்றால் என்ன? மனிதருக்கு தேவையான தைரியம் எங்கிருந்து பிறக்கிறது, யாரிடம் இருந்து கிடைக்கிறது என்பதை எல்லாம் கற்பித்த காலக்கட்டம் அது.

நான் அப்போது மருத்துவ கல்லூரி ஒன்றில் ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தேன். அது இரண்டாம் ஆண்டின் துவக்கம் என்று கருதுகிறேன். அவ்வருடம் எனக்கு பாடம் எடுக்க வந்த மருத்துவ பேராசிரியர் ஒருவர் அவருடன் டேட் செய்ய அழைத்தார். அவருக்கும் எனக்கும் ஒரு 13-15 வருடங்கள் வயது வித்தியாசம் இருக்கும்.

Real Life Story: My Professor Asked for date. When I Disagreed, He Started Ruin My Life

அவரை பார்த்தால் யாராக இருந்தாலும் பிடிக்கத்தான் செய்யும். பார்க்க அழகாக தான் இருப்பார். அதற்காக யார் அழகாக இருந்தாலும் டேட் செய்துவிட முடியுமா? அதிலும் திருமணமாகி குழந்தைகள் பெற்ற, என்னை விட 13 வயது அதிகமானவர் என்பதை எல்லாம் தாண்டி.. அவர் எனக்கு பாடம் கற்பிக்கும் ஆசான்.

இப்படி அவரது டேட்டிங் அழைப்பை தவிர்க்க என்னிடம் பல காரணங்கள் கொட்டிக் கிடந்தன. "சாரி! சார் என்னால டேட்டிங் எல்லாம் பண்ண முடியாது...". இந்த வாக்கியத்தை நான் கூறியதன் விளைவாய் என் பெயர், மானம், மன தைரியம் இழக்க நேரிட்டது... அந்த கதையை தான் இன்று உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள போகிறேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
2ம் ஆண்டு!

2ம் ஆண்டு!

அப்போது நான் இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்து சில வாரங்களே இருக்கும். எப்போதும் போல ஒரு புதிய செமஸ்டர், புதிய வருடம்.. கல்லூரி விடுமுறை எல்லாம் முடிந்து ஒரு புது உணர்வுடன் வகுப்பிற்குள் நாங்கள் நுழைந்திருந்தோம். அவர் எங்களுக்கு புதியதாக பாடம் எடுக்க வந்த உதவி பேராசிரியர். பார்ப்பதற்கு அழகாக தான் இருப்பார். அவர் மீது சிலருக்கு க்ரஷ் இருக்கிறது என்று நானே காதுப்பட கேட்டிருக்கிறேன்.

வழிமறிப்பு!

வழிமறிப்பு!

அவர் எங்களுக்கு வகுப்பெடுக்க ஆரம்பித்து ஓரிரு வாரங்கள் இருக்கும் என்று கருதுகிறேன்...

ரெகுலர் மாணவர்கள் கிளம்பிவிட்டாலும், ஹாஸ்டலில் தங்கி படிக்கும் நாங்கள் சிலர் வகுப்பறை, லேப், டிப்பார்ட்மெண்ட் ரூம் என கல்லூரியில் எங்காவது உலாவிக் கொண்டிருப்போம். இல்லையேல் இருக்கவே இருக்கிறது காலேஜ் கேண்டீன்.

அப்படியாக ஒரு நாள் நான் ஹாஸ்டல் சென்று உடை மாற்றிக் கொண்டு கேண்டீன் நோக்கி சென்றுக் கொண்டிருந்த போது தான், அவர் என்னை வழிமறித்தார்.

டேட்டிங்!

டேட்டிங்!

அவருக்கு அன்று குட் ஈவ்னிங் சொன்ன பிறகு சில காலம் என் வாழ்வில் குட் காணாமல் போனது. சிரித்தார்... சிரித்தேன். டேட்டிங் வரியா என்று கேட்டார். எனக்கு புரியல சார்.. என்ன சொல்றீங்க என்றேன். என்னுடன் டேட் செய்ய வெளிய வரியா என்று கேட்டார். மனதில் பதட்டம், பயம், ஏதேதோ எண்ணங்கள். அவரிடம் நான் இதை ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. சற்றும் தயங்காமல். இல்ல சார்! எனக்கு இஷ்டம் இல்ல, என்று சொல்லி கிளம்பிவிட்டேன்.

விடாமல்!

விடாமல்!

பிறகு வகுப்பறை, ஹாஸ்டல் வெளியே, கேண்டீன், லேப் என பல இடங்களில், பல வகைகளில் அவர் என்னிடம் டேட்டிங் வர கூறி அழைத்தார். நான் மேலே கூறியது படி பல காரணங்கள் கொட்டிக் கிடந்தன.. அவை அனைத்தையும் கூறி.. முடியாது சார்! எனக்கு இன்ட்ரஸ்ட் இல்ல.. என்று கூறி தவிர்த்து வந்தேன். அப்போது தான், இவருக்கு ஏற்கனவே சில கல்லூரி ஊழியர்களுடன் தொடர்பு இருப்பதும் அறிய வந்தது.

மிரட்டல்!

மிரட்டல்!

நீ டேட்டிங் வராட்டி உன் அட்டண்டன்ஸ்ல கை வைப்பேன் என்று மிரட்டினார். அப்போது தான் முதல் முறையாக என்னுள் அதிகப்படியான பயம் உருவானது. டாக்டர் படிக்க வேண்டியது என் கனவு என்பதை தான் என் வீட்டில் பலரது கனவு. மூன்றாவது செமஸ்டர் நெருங்கிக் கொண்டிருந்தது. வீட்டில் பெற்றோரிடம் கூறினேன். வீட்டில் எப்படி கூறுவது என்று தெரியவில்லை. உடன் வசிக்கும் ஹாஸ்டல் மாணவிகள், வகுப்பு தோழிகளிடம் கூறினேன். அவர்களுக்கு இது கேலி கிண்டலாக தான் இருந்தது.

மிருகம்!

மிருகம்!

நான் மீண்டும், மீண்டும் மறுப்பு தெரிவித்துக் கொண்டே இருக்க.. அவனுள் இருந்த மிருகம் வளர்ந்துக் கொண்டே போனது. நான் எங்கே இருந்தாலும் ஒரு மாதிரி முறைத்து பார்த்துக் கொண்டே இருப்பர். வகுப்பறை, லேப் என யார், எவர் இருக்கிறார் என்ற எந்த கவலையும் இன்றி வெறிக்க, வெறிக்க முறைத்து பார்ப்பார். அப்படி ஒரு கொடூரமான மிருகத்தை அதற்கு முன் நான் பார்த்ததே இல்லை. இனிமேலும், என் வாழ்வில் அப்படி ஒரு மிருகத்தை காண்பேனா என்பது கடினம் தான்.

அச்சம்!

அச்சம்!

நிச்சயம் அவன் பரிச்சையில் ஏதேனும் செய்துவிடுவான் என்ற அச்சம் எனக்குள் இருந்தது. ஆனால், அவன் செய்தது வேறொரு காரியம். மூன்றாவது செமஸ்டர் பரிச்சை முடிந்து நான் கல்லூரி வரும் போது, வகுப்பில் ஏதோ சலசலப்பு... அது வகுப்பை தாண்டி கல்லூரியின் பல இடங்களில் நாம் பார்க்க முடிந்தது.

நான் தான் அவனிடம் ஐந்தாறு முறைக்கும் மேலாக பின்னே தொடர்ந்து காதல் ப்ரபோஸ் செய்து வந்ததாகவும். அவன் தவிர்த்தும் நான் விடுவதாக இல்லை என்பது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்கி இருந்தார். அவனுக்கு தெரிந்த சில மாணவர்கள் மூலம், இதை கல்லூரி முழுக்க பரப்பினான்.

அவமானம்!

அவமானம்!

நான்காவது செமஸ்டர் துவங்கியதில் இருந்து எனக்குள் மன அழுத்தம் அதிகரிக்க துவங்கியது. எங்கேயும் நிம்மதியாக இருக்க முடியாது. வெகு சில தோழிகளை தவிர மற்ற அனைவரும் என்னை ஒரு நடத்தை கெட்ட பெண் போல காண துவங்கினார்கள். ஒரு கட்டத்தில் காலையில் வகுப்புக்கு சென்றால், எப்போது மாலையாகும் ஹாஸ்டலுக்கு சென்று ஒளிந்துக் கொள்ளலாம் என்ற கட்டத்திற்கு தள்ளப்பட்டேன்.

அறிமுகம்!

அறிமுகம்!

அப்போது தான் முகநூல் மூலமாக ஒரு புதிய நட்பு எனக்கு கிடைத்தது. எங்களுக்குள் நட்பு மிக வேகமாக வளர்ந்தது. ஆனால், அது நட்பாக மட்டுமே தான் நிலைத்து. அவனுக்கு குடி, போதை போன்றவற்றில் நாட்டம் அதிகம். மனதில் பட்டதை ஆண், பெண் வேறுபாடு இல்லாமல் கூச்சப்படாமல் பேசுவான்.

இதை எல்லாம் பார்த்து, அவன் மோசமாக நடந்துக் கொள்கிறான் என்று நான் நினைத்தது உண்டு. ஆனால், மது, போதை பழக்கம் இருந்தாலும், பெண்களை தவறாக அவன் நினைத்ததோ, அவர்களிடம் தவறாக பேசியதோ இல்லை.

ஆனால், இவனுக்கு நேரேதில் அந்த பேராசிரியர். சமூகத்தில் ஒரு நல்ல மருத்துவராக இருந்துக் கொண்டு மாணவிகளை டேட்டிங் செய்ய அழைத்து வந்தான். அப்போது தான் அறிந்துக் கொண்டேன் இங்கே முகமூடி அணிந்து வாழும் நல்லவர்களே அதிகம் என்று.

பாடம்!

பாடம்!

என் முகநூல் நண்பன் எனக்கொரு பாடம் கற்றுக் கொடுத்தான். மனதில் பட்டதை பயப்படாமல், தைரியமாக பேச வேண்டும், செயல்ப்படுத்த வேண்டும் என்று. அந்த பேராசிரியர் என் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கத்திற்கு பல முறை அவனை பொதுவெளியில் வைத்து பளார் என்று அறைய வேண்டும் என்று நினைத்தது உண்டு. ஆனால், அதை செய்ய இயலாது. அவன் என் பரிச்சையில், படிப்பில் கைவைத்துவிட்டால் என்ன ஆகுமோ என்ற அச்சம் நிறையவே இருந்தது.

முதல் அடி!

முதல் அடி!

கிட்டத்தட்ட நான்காவது செமஸ்டர் எக்ஸாம் வருவதற்கு சில வாரங்களே இருந்தன. அவன் லேபில் இருந்தான். சில மாணவ, மாணவிகள் மட்டுமே அச்சமயம் லேபில் இருந்தனர். நேராக சென்றேன்.. அவன் கன்னத்தில்ஓங்கி அறைந்தேன். என்னிடம் அப்படி ஒரு வெளிப்பாட்டை அவன் எதிர்பார்க்காவில்லை. மீண்டும் இனிமேல் என் வழியில் குறுக்கே வந்தால்... உன்னை பொதுவெளியில் வைத்து இப்படி அடிக்கும் வாய்ப்புக்கு நீயே காரணமாகிவிடாதே என்று திட்டிவிட்டு நகர்ந்தேன்.

நிம்மதி!

நிம்மதி!

மனதுக்குள் அவ்வளவு நிம்மதி. அவன் என்னை பரிச்சை எழுத விடாமல், அல்லது படிப்பில் கை வைப்பான் என்று கருதினேன். பரிட்சைகள் முடிந்தன. ரிசல்டும் வந்தது. அவனது பேப்பரில் நாம் பாஸாகி இருக்க வாய்ப்பே இல்லை என்று நினைத்தேன். ஆனால், வாழ்வில் அனைத்தும் நாம் நினைப்பது போன்றே நடப்பதில்லை. எனக்கே ஆச்சரியம்.. நான் எழுதியதற்கு.. நான் எதிர்பார்த்த மதிப்பெண்கள் சரியாக பெற்றிருந்தேன்.

என் முகநூல் நண்பனிடம் இருந்து நான் கற்ற இந்த பாடம். இன்று நம் சமூகத்தில் பல பெண்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். பேருந்தில் உரசுபவன், கோயில் என்றும் பாராமல் பின்னாடி நின்று இடிப்பவன். அலுவலகத்தில் புரளி பேசுபவன் என்று பலருக்கும் நாம் இந்த அடியை கொடுத்தால்... அனைவரும் நம்மை விலகி சில அடி நகர்ந்து செல்வார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Real Life Story: My Professor Asked for date. When I Disagreed, He Started Ruin My Life

Real Life Story: My Professor Asked me to date with Him. When I Disagreed, He Started Ruin My Life and Reputation Among the College Students.
Story first published: Monday, August 6, 2018, 15:21 [IST]
Desktop Bottom Promotion