For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதலிரவு அறையில் இருந்து வெளியேறினார்... என் மீது அவருக்கு துளியளவும் ஈர்ப்பு இல்லை... #Her Story

ஜி.எம்.பி. ஆகாஷ் எனும் வங்காள தேச புகைப்படக் கலைஞர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்த உண்மை சம்பவத்தின் தமிழாக்கம்...

By Staff
|

என் தலைவிதியில் என்ன எழுதியுள்ளது என்று எனக்கு தெரியவில்லை. நான் என்ன செய்தாலும், எப்படி உடை அணிந்தாலும்... அவருக்காக என்னை எப்படி தயார் செய்துக் கொண்டாலும்.. அவர் என்னை ஏறெடுத்தே பார்ப்பதில்லை. அவருக்கு என் மீது துளியளவு கூட ஈர்ப்பு இல்லை என்பதை நான் நன்கு அறிவேன். அவர் என்னுடன் பேசுவார் என்ற எண்ணத்துடன் ஒவ்வொரு தருணத்திலும் காத்திருக்கிறேன்.

திருமணமான முதல் நாளில் இருந்து அவருக்கு என் மீது விருப்பம் இல்லை. என்னை தனியே என் வீட்டில் விடுத்து, எங்கள் முதலிரவு அறையில் இருந்து வெளியேறிவிட்டார். பிறகு சில நாட்கள் கழித்து என் பெற்றோர் அவர் வீட்டுக்கு அழைத்து சென்றனர். அவர் ஏற்கனவே திருமணமானவர் என்பதை அறிந்து தான் நான் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டேன்.

அவரது முதல் மனைவி மரணமடைந்துவிட்டார். அவரது இரண்டு குழந்தைகளை கவனித்துக் கொள்ள ஒரு நபர் வேண்டும் என்பதற்காக தான் அவர் என்னை திருமணம் செய்துக் கொள்ள ஒப்புக் கொண்டார் என்பதையும் நான் அறிந்தேன். அவருக்கு மனைவி தேவையில்லை, அவரது குழந்தைகளுக்கு ஒரு தாய் தான் தேவை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மிகுந்த அன்பு!

மிகுந்த அன்பு!

அவரது குழந்தை மீதோ, இறந்த மனைவி மீதோ எனக்கு எந்த கோபமும், பிரச்சனையும் இல்லை. திருமணத்திற்காக என் கைகளில் இட்ட மருதாணி காய்வதற்கு முன்னரே, எங்கள் குழந்தைகள் மீது நான் அக்கறை செலுத்த துவங்கிவிட்டேன். அவர்களை பார்த்துக் கொள்ள வேண்டியது என் கடமை என்பதை நான் நன்கு உணர்வேன்.

என் கணவருக்காகவும், எங்கள் குழந்தைகளுக்காகவும் என்ன செய்ய வேண்டும் என்றாலும் நான் செய்ய தயாராக இருக்கிறேன். குழந்தைகள் இருவருமே மிகவும் சிறியவர்கள். வெகு சில நாட்களிலேயே நான் அவர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டேன். அவரது குழந்தைகள் என்பதை தாண்டி, அவர்களை என் குழந்தைகளாக கருதியே வளர்த்து வருகிறேன்.

குழந்தைகளும்...

குழந்தைகளும்...

நான் அவர்கள் மீது எத்தனை அன்பு வைத்திருக்கிறேனோ... அதற்கு ஈடாக குழந்தைகளும் என் மீது அளவு கடந்து அன்பு வைத்துள்ளனர். ஆனால், என் கணவருக்கு மட்டும் தான் என்னை பிடிக்கவில்லை. ஒருமுறை கூட அவர் என்னை ஆசையாக பார்த்தது இல்லை, பேசியது இல்லை.

கடந்த ஒரு வருடமாக இந்த சூழல் மிகவும் கடினமாக மாறியது. ஒரு கட்டத்தில் என் பெற்றோருக்கு என் வாழ்க்கை குறித்த உண்மைகள் தெரிய வந்தது. மீண்டும் என் வீட்டுக்கே என்னை அழைத்து செல்லவிருப்பதாக கூறினார்கள்.

விருப்பமில்லை!

விருப்பமில்லை!

அதில் எனக்கு கொஞ்சமும் விருப்பமில்லை. ஒருவேளை நான் என் வீட்டுக்கு திரும்ப சென்றுவிட்டால்... யார் எனக்கு எண்ணிலடங்காத முத்தங்களை மாறி, மாறி தருவார்கள். என் சோகமான தருணத்தில் என்னை இருக்க கட்டியணைத்து கொள்ள என் குழந்தைகளை தவிர எனக்கு வேறு யாரும் இல்லை. வேலை முடிந்து சோர்வாக வீடு திரும்பும் போது என்னை ஓடி வந்து கட்டிக்கொள்ள வேறு யாரும் இல்லையே. என் குழந்தைகள் தான் என் வாழ்க்கை. அவர்களை விட்டு எங்கேயும் என்னால் செல்ல இயலாது.

காணாமல் போனார்...

காணாமல் போனார்...

என் பெற்றோர் என்னை அழைத்து செல்ல விரும்புவதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது. கடைசி ஆறு மாதங்களாக என் கணவர் எங்கே சென்றார், எங்கே இருக்கிறார் என்ற எந்த தகவலும் எனக்கு தெரியாது. எங்கோ காணாமல் போய்விட்டார் என்று மட்டும் அறிவேன். காணாமல் போனாரா? என்னை பிடிக்காமல் குழந்தைகளை என்னிடம் விட்டு சென்றாரா? என்பதெல்லாம் எனக்கு தெரியாது.

பிரிக்க முயற்சி!

பிரிக்க முயற்சி!

என் கணவர் காணாமல் போன செய்தி அறிந்த என் மாமனார் என் குழந்தைகளை அவர்களுடன் அழைத்து செல்ல விருப்பம் தெரிவித்தார். ஆனால், என்னைவிட்டு செல்ல என் குழந்தைகளுக்கும் விருப்பமில்லை. அவர்கள் இல்லாமல் எந்நாளும் என்னால் வாழ இயலாது. கடந்த வாரம் ஒரு நாள் இரவு திடீரென எங்கள் வீட்டு கதவை யாரோ தடதடவென தட்டினார்கள். எனக்கு மட்டுமே தெரியும் நிச்சயம் அது அவராக தான் இருக்கும் என்று. நான் வேண்டிய கடவுள்கள் யாரும் என்னை கைவிடவில்லை. அவரே தான்.

கம்மல், சங்கிலி!

கம்மல், சங்கிலி!

அவரிடம் எந்த ஒரு மாற்றமும் இல்லை. உள்ளே வந்தவர் என் முகத்தையும் பார்க்க்கவில்லை. என்னிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை. ஆனால், என் கையில் ஒரு கவரை கொடுத்து திணித்தார். திறந்து பார்த்தேன்... வியந்தேன்... எனக்காக ஒரு கம்மலும், சங்கிலியும் வாங்கி வந்திருந்தார். என் கணவருடன் நான்கு ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறேன். எங்கள் இருவருக்கும் என தனியாக குழந்தைகள் இல்லையே என ஒருநாளும் நான் வருந்தியதே இல்லை. அவரை நான் மிகவும் விரும்புகிறேன்.

நம்பிக்கை!

அவர் என்னுடன் பேசாமல் இருப்பதற்கும், என்னை பார்க்காமல் இருப்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அவர் தனது முதல் மனைவியை மிகவும் விரும்புகிறார். ஆனால், அவர் தான் இறந்துவிட்டாரே. முதல் மனைவி மீது எந்த பொறாமையும் எனக்கு இல்லை. எனக்கு வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்று தான். அவருடைய காதல்.

ஒவ்வொரு முறையும் என்னை பார்க்க வரும் போதெல்லாம், தங்களுடன் வந்துவிடுமாறு எனது பெற்றோர் கேட்டுக் கொண்டே தான் இருக்கிறார்கள். அதை நான் காதில் வாங்கிக் கொள்வதே இல்லை. அவரையும், என் குழந்தைகளையும் நான் மிகவும் விரும்புகிறேன். ஒரு நாள் அவரது இதயத்தில் எனக்கொரு இடம் கிடைக்கும் என்பதை நான் ஆழமாக நம்புகிறேன்.

- பில்கிஸ்

ஜி.எம்.பி. ஆகாஷ் எனும் வங்காள தேச புகைப்படக் கலைஞர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்த உண்மை சம்பவத்தின் தமிழாக்கம்...

நன்றி: ஜி.எம்.பி. ஆகாஷ் | Courtesy: GMB Akash

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Real life Story: I Am His Second Wife. And He is Not Showing Any Interest on Me

I Am His Second Wife. And He is Not Showing Any Interest on Me. I have tries so many things. and the result is zero. We did not had any physical relationship in this 4 years of marriage life. But, what i need is not sex. Just Love.
Desktop Bottom Promotion