For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இளம் பெண்ணை வாட்டி எடுத்த நெட்டிசன்கள், நடிகையின் விளையாட்டால் ஏற்பட்ட விபரீதம்!

இளம் பெண்ணை வாட்டி எடுத்த நெட்டிசன்கள், நடிகையின் விளையாட்டால் ஏற்பட்ட விபரீதம்!

|

சென்ற வாரத்தில் இன்டர்நெட்டில் மிகப்பெரிய வைரலானது ஒரு ட்வீட் தொகுப்பு. அந்த ட்வீட் தொகுபில், விமானத்தில் புதியதாக அறிமுகமாகிக் கொண்ட இளம் ஆணும், பெண்ணும், எத்தனை சீக்கிரமாக நெருக்கமாக பழகினார்கள், தங்கள் குடும்ப புகைப்படங்கள் மற்றும் சுய விருப்ப, வெறுப்புகள் பற்றி பேசிக் கொண்டார்கள் என, அவர்கள் அடுத்தடுத்து கழிவறை சென்று வந்தது வரையிலும் விவரமாக விமர்சனம் செய்யப்பட்டிருந்தது.

அந்த ட்வீட் தொகுப்பு கேலியாக தான் இருந்தது என்றாலும், ரோஸ் ப்ளேர் என்ற பெண்மணி (அந்த ட்வீட்களை பதிவிட்டவர்) தான் பதிவு செய்த அந்த நபர்களிடம் முன்பே ஒப்புதல் வாங்கி எல்லாம் ட்வீட் செய்யவில்லை. தன் பொழுதுப்போக்கு மற்றும் தனது பின்தொடர்பாளர் எண்ணிக்கை அதிகரிக்க அவர் இந்த ட்வீட் தொகுப்பை பயன்படுத்திக் கொண்டார் என்பதே உண்மை.

Plane bae, How Internet Viral Affects Your Personal Life

அவரது கேலியான ட்வீட்கள் பெரும்பாலும் ரசிக்கும்படியாக இருந்தாலும், சிலர் ட்வீட் தொகுப்பில் இடம்பெற்றிருந்த அந்த பெண்ணின் கதாபாத்திரத்தை திட்டியும், விமர்சித்தும் கருத்துகள் பதிவு செய்திருந்தனர்.

சில நெட்டிசன்கள், அந்த பெண்ணை சமூக தளங்களில் தேடிப்பிடித்து போய் ஆபாசமாகவும், நீ மோசமானவள், குறுகிய காலத்தில் எப்படி ஒரு ஆணுடன் இப்படி பழக முடியும் என்றெல்லாம் கூறி #PlaneBae என்று இன்டர்நெட்டில் அறியப்படும் அந்த பெண்ணை மிகுந்த மனவுளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர்.

இதனால், அந்த பெண் தன் அனைத்து சமூக தளங்களையும் டீ-ஆக்டிவேட் செய்துவிட்டார். இதற்கு எல்லாம் முழு காரணம் ரோஸ் ப்ளேர் எனப்படும் அந்த நடிகை தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Plane bae, How Internet Viral Affects Your Personal Life

This is the dark side of internet virality. No one knows about how becoming internet viral will affect your personal life. and Unknown persons will start commenting on your personal life. It is really bad and Privacy is became quesionable in this digital era.
Desktop Bottom Promotion