Just In
- 8 hrs ago
இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...!
- 20 hrs ago
நீங்கள் செய்யும் இந்த செயல்கள் சனிபகவானின் கோபத்தை அதிகரிக்கும் தெரியுமா?
- 22 hrs ago
ஆண்குறி வடிவில் பீச்சில் கரை ஒதுங்கிய அரிய வகை மீன்கள்… எங்கு தெரியுமா?
- 23 hrs ago
போரடிக்கிற செக்ஸ் வாழ்க்கையை மீண்டும் சூப்பராக மாத்துறது எப்படினு தெரியுமா?
Don't Miss
- Movies
ஜவஹர்லால் நேரு குடும்பம் குறித்து சர்ச்சை கருத்து... பிரபல நடிகை அதிரடி கைது! பரபரப்பில் பாலிவுட்!
- News
தாறுமாறாக பைக்கில் மோதிய கார்.. டயரில் சிக்கியவரை தரதரவென இழுத்து சென்ற கொடூரம்.. பகீர் வீடியோ!
- Finance
பஞ்சாப் நேஷனல் வங்கியின் பரிதாப நிலை.. !
- Sports
10வது முறை.. வெஸ்ட் இண்டீஸ் அணியை புரட்டிப் போட இந்தியா ரெடி!
- Automobiles
காருக்கு ஃபாஸ்ட் டேக் வாங்குவதற்கான வழிகள் மற்றும் ரீசார்ஜ் செய்யும் முறைகள்
- Technology
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.!
- Education
DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்! ஊதியம் ரூ.56 ஆயிரம்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கொடூர அணுவுலை விபத்தால் சின்னாபின்னமாகி, உலகில் தனித்துவிடப்பட்ட நகரின் கோரமான படங்கள்!
சோவியத் ஒன்றியத்தின் உக்ரைனில் இருந்த பிரிப்யாட் (Pripyat) எனும் இடத்தின் அருகாமையில் அமைந்திருந்த செர்னோபில் அனுவுலையில் ஏற்பட்ட விபத்து உலகில் யாராலும் மறக்க முடியாதது.
கடந்த 1986ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ம் நாள் இந்த அணுவுலை விபத்து ஏற்பட்டது. இதுவரை உலகில் நேர்ந்த அபாயமான அணுவுலை விபத்துகளில் ஒன்றாக இது காணப்படுகிறது.

பழுது!
Image Source and Coutesy: placessuffering
இங்கே நான்கு அனுவுலைகள் இயங்கி வந்தன. அவற்றில் ஒரு அனுவுலையின் நீர் குளிர்ச்சி செய்யுன் இயந்திரன் பழுதடைந்து செயற்படாமல் போன காரணத்தால் வெப்பம் அதிகரிக்க துவங்கியது.

வெப்பம்!
Image Source and Coutesy: placessuffering
வெப்பம் அதிகரிக்க, அதிகரிக்க, அனுவுலையின் மையம் உருக துவங்கியது. சரியாக 1986, ஏப்ரல் 26ம் தேதி அதிகாலை 01:23 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. ஏறத்தாழ மூன்று மணி நேரம் நீடித்த இந்த வெப்பத்தின் காரணமாக அணுவுலை முற்றிலும் பாதிக்கப்பட்டு தீவிபத்து ஏற்பட்டது.

கதிர்வீச்சு!
Image Source and Coutesy: placessuffering
ஏறத்தாழ 20 வகையிலான கதிர் வீச்சு பொருட்கள் இப்பகுதியின் காற்று மண்டலத்தில் கலந்தனர். இதனால், அப்பகுதியின் நிலம் மற்றும் சுற்றி மக்கள் வசித்து வந்த இடத்தில் பெரும் தாக்கம் உண்டானது. இந்த தாக்கத்தின் அளவு பத்து ஹிரோஷிமா குண்டுகளுக்கு இணையானது என்று கணக்கெடுப்புகள் கூறுகின்றனர்.

7வது நிலை!
Image Source and Coutesy: placessuffering
அனைத்துலக அணு ஆற்றல் நிகழ்வு அளவீடு சார்ந்து பார்த்தால், இது 7வது நிலையை எட்டிய ஒரே ஒரு பெரும் விபத்து என்றும். இதன் விளைவு தான் உலகம் கண்ட அணுவுலை விபத்துகளில் மிகவும் மோசமானது என்றும் கூறப்படுகிறது. இதனால், 30 இறந்தனர் என்று கணக்கெடுப்பு கூறினும், ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பதே உண்மை.

மோசமான விபத்து!
Image Source and Coutesy: placessuffering
இந்த மோசமான அணுவுலை விபத்து காரணமாக இரத்தப்போக்கு, இரத்தக்குழாய் பாதிப்பு, தோல் புற்றுநோய், கதிர்வீச்சு நௌ, முடி கொட்டுதல், கண்புரை, உறுப்பு சிதைவு போன்ற பக்கவிளைவுகளை மக்கள் எதிர்கொண்டனர். மேலும், இந்த பகுதியின் நீர், காற்று, தாவரங்கள், இதர உயிரினங்கள் என அனைத்தும் இந்த விபத்தால் பாதிக்கப்பட்டது.

கவனக்குறைவு!
Image Source and Coutesy: placessuffering
சரியாக வடிமைக்காத அணுவுலை, வேலை செய்து வந்தவர்களின் கவனக்குறைவு போன்றவை தான் இந்த மோசமான அணுவுலை விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. மேலும், விபத்துக்குள்ளான கருவி பழுதடைந்தது குறித்து முன்பே எச்சரிக்கை செய்யாத பணியாட்களின் மெத்தனம் தான் பல உயிர்கள் மரணிக்கவும், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தது மட்டுமின்றி, மோசமான உடல்நிலை கோளாறுகளால் அவதிப்படவும் காரணமாக அமைந்தது என்று ஆய்வறிக்கைகள் கூறுகின்றனர்.

விபத்திற்கு முன்...
Image Source and Coutesy: placessuffering
இனி, 1986ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25,26ம் தேதிகளில் நடந்தது இந்த அணுவுலை விபத்து. இதற்கு முன் 1986ம் ஆண்டு ஜனவரி மாதம் எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்கள் வைத்து அந்த நகரம் எப்படி இருந்தது என்பதை தொடர்ந்து காண்போம்...

மக்கள்தொகை!
Image Source and Coutesy: placessuffering
மக்கள்தொகை: 49,400 பேர் அந்த இடத்தில் வசித்து வந்தனர். இவர்களது சராசரி வயது 26 என கணக்கிடப்பட்டிருந்தது. இவர்கள் வசித்து வந்த ஒட்டுமொத்த இடத்தின் பரப்பளவு 658,700 மீட்டர் சுற்றளவு ஆகும்.

குடியிருப்புகள்!
Image Source and Coutesy: placessuffering
இங்கே மொத்தம் 160 அடுக்குமாடி கட்டிடங்களில் 13,414 குடியிருப்புகள் இருந்தன. 18 ரெசிடென்ஸ் ஹால்களில் திருமணமாகாத 7,621 ஆண், பெண்களும், 8 ரெசிடென்ஸ் ஹால்களில் திருமணமான தம்பதிகளும் தங்கி இருந்தனர் என்று அந்த கணக்கெடுப்பு தகவல்கள் மூலம் அறியப்படுகிறது.

கல்வி நிலையங்கள்!
Image Source and Coutesy: placessuffering
இங்கே மொத்தம் 15 பால்வாடி பள்ளிக்கூடங்கள் இருந்தன. அவற்றில் 4,980 சிறார்களும், 5 இடைநிலைப் பள்ளியில் 6,786 மாணவர்களும் படித்து வந்தனர்.

மருத்துவமனை!
Image Source and Coutesy: placessuffering
இந்த இடத்தில் ஒரே ஒரு மருத்துவ மனையும், மூன்று கிளினிக்குகளும் இருந்தனர். இந்த மருத்துவமனையில் 410 நோயாளிகள் தங்குமளவு வசதிகள் இருந்தனர்.

மால்கள்!
Image Source and Coutesy: placessuffering
25 சூப்பர் மார்கெட் மற்றும் மால்களும், 27 காபி மற்றும் உணவருந்தும் நிலையங்களும் அமைந்திருந்தன. ஒரே நேரத்தில் 5,535 பேருக்கு உணவு பரிமாறும் அளவிற்கு கொள்ளளவு இந்த உணவருந்தும் நிலையங்கள் கொண்டிருந்தனர். மேலும், பத்து கிடங்குகள் இருந்தனர். இவற்றில் 4,430 டன் எடையுள்ள பொருட்களை பாதுகாத்து வைக்கும் அளவுற்கு கொள்ளவு இருந்தது.

கலை!
Image Source and Coutesy: placessuffering
கலை மற்றும் கேளிக்கைக்கு என்று இங்கே Palace of Culture Energetik என்ற இடம் இருந்தது. இங்கே சினிமா மற்றும் கலைகள் கற்பிக்கப்பட்டன. அணுவுலை விபத்திற்கு பிறகு மக்கள் யாவரும் இந்நகரை விட்டு வெளியேறிய பிறகு இந்த இடம் அழியும் தருவாயில் இருக்கிறது.

விளையாட்டு!
Image Source and Coutesy: placessuffering
விளையாட்டு மற்றும் பொழுது போக்கிற்காக இங்கே பத்து உடற்பயிற்சி கூடங்கள், மூன்று இன்டோர் நீச்சல் குளங்கள், பத்து ஷூட்டிங் கேலரிகள், மற்றும் இரண்டு விளையாட்டு ஸ்டேடியம்கள் இருந்தனர்.

இளைப்பாற...
Image Source and Coutesy: placessuffering
மேலும், பொழுதுப் போக்கு மற்றும் இளைப்பாற ... இங்கே ஒரு பெரிய பூங்கா, 35 விளையாட்டு திடல்கள், 18,136 மரங்கம், 2,29,247 புதர் இடங்கள் மற்றும் 33,000 ரோஜா செடிகள் உருவாக்கப்பட்டிருந்தன.

தொழிற்சாலைகள்!
Image Source and Coutesy: placessuffering
தொழிற்சாலைகள் என்று எடுத்துக் கொண்டால் இங்கே நான்கு ஃபேக்டரிகள் இயங்கி வந்தன. இவற்றின் வருடாந்திர வருமானம் 47,70,00,000 ரஷ்ய பணமாக இருந்தது. இதுப்போக இங்கே நான்கு ரியாக்டர்கள் கொண்ட ஒரு அணுவுலை இயங்கி வந்தது. இதில் ஏற்பட்ட பெரும் விபத்து காரணமாக தான் இந்நகரமே அழிந்தது.

போக்குவரத்து!
Image Source and Coutesy: placessuffering
போக்குவரத்து: யானோவ் என்ற ரயில்நிளையமும், 167 பேருந்துகளும், அணுவுலை அருகே 400 கார்கள் பார்க் செய்து வைக்கும் வசதியும் இருந்தது.

தொலைதொடர்பு!
Image Source and Coutesy: placessuffering
தொலைதொடர்பு: 2,926 லோக்கல் டெலிபோன் இணைப்புகள் இருந்தன. இதை ப்ரிப்யாத் போன் நிறுவனம் இயக்கி வந்தது. அதுப் போக 1950 பொங்கல் செர்னோபில் பவர் ஸ்டேஷன் அட்மினிஸ்ட்ரேஷன், ஜுபிடர் பிளானட் மற்றும் உள்ளாட்சி மேம்பாட்டு துறை அலுவலகங்கள் இயக்கி வந்தது.