அதிகரித்து வரும் செக்ஸ் பொம்மை பிராத்தல் - என்ன தான் நடக்கிறது அங்கே?

Posted By: Staff
Subscribe to Boldsky

பாலியல் தொழிலில் பெண்களை உட்படுத்துவது தவறு, இதை முற்றிலும் உலகில் இருந்து நீக்க வேண்டும் என்பதை பலதரப்பட்ட அமைப்புகள் பல காலமாக முன்வைத்து வரும் கோரிக்கை. இதுகுறித்த உலகளவில் பல விவாதங்கள் நடந்துள்ளன.

இதற்கு ஒரு தீர்வு காணப்படும் என்று காத்திருந்த தருணத்தில் தான் கடந்த சில ஆண்டுகளாக செக்ஸ் பொம்மைகளின் உற்பத்தி அதிகரிக்க துவங்கியது. செக்ஸ் பொம்மை கருவிகளாக இருந்தவை, இப்போது முழு செக்ஸ் பொம்மைகளாக உருமாறத் துவங்கிவிட்டன.

அதாவது, வைப்ரேட்டர் போன்ற செக்ஸ் பொம்மை கருவிக்கு அடுத்தக் கட்டமாக, பெண் போலவே உருவ அமைப்புக் கொண்டிருக்கும் செக்ஸ் ரோபாட் பொம்மைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஒருபுறம், இது பெண்களுக்கு எதிரான பாலின கொடுமைகளுக்கு ஒரு தீர்வாக இருக்கும் என்று கருதினாலும், மறுபுறம் இது மனித உறவு சங்கலியை சீரழித்துவிடும் என்ற அச்சமும் இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விபச்சாரம்!

விபச்சாரம்!

உலகின் முதல் செக்ஸ் பொம்மை விபச்சாரம் பார்சிலோனாவில் துவக்கப்பட்டது என்று அறியப்படுகிறது. இது ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்டது. பார்சிலோனாவில் இருந்து ஒரு விபச்சாரவிடுதியில், அங்கிருந்த பெண்களுக்கு பதிலாக, செக்ஸ் பொம்மை ரோபாட்டுகள் கொண்டுவரப்பட்டன. இவை ஆண்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பையும் பெற்றது.

லூமி டால்ஸ்!

லூமி டால்ஸ்!

பார்சிலோனாவில் விபச்சாரத்தில் உட்படுத்தப்பட்ட அந்த செக்ஸ் பொம்மைகள் லூமிடால்ஸ் ஆகும். இந்த பொம்மைகளை பாலியல் தொழிலுக்கு எனவே சிறப்பம்சங்களுடன் தயாரிக்கப்பட்டவை ஆகும். லூமி டால்ஸ் விபச்சாரத்தில் ஒரு புரட்சி ஏற்படுத்த தயாரிக்கப்பட்டது என அதன் தயாரிப்பு நிறுவனம் கூறுகிறது.

Image Source: Lumidolls.com

முதல்!

முதல்!

செக்ஸ் டால்ஸ் தயாரிப்பில் இவர்கள் தான் முதலானவர்கள் என்றும் அறியப்படுகிறது. இவர்கள் முடிந்த வரை ரியலஸ்டிக் செக்ஸ் பொம்மைகளை உருவாக்கி வருகிறார்கள். இந்த பொம்மைகளுக்கு மனிதர்கள் போன்ற மூட்டுகள், சருமம் மற்றும் ஆண்கள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Image Source: Lumidolls.com

இன்பம்!

இன்பம்!

ஒரு பெண்ணுடன் உறவுக் கொண்டால் ஆண்களுக்கு எத்தகைய இன்பம் கிட்டுமோ, அதில் எந்த ஒரு குறையுமின்றி கிடைக்கும் அளவில், ஆண்களின் கற்பனைக்கு ஏற்ப இந்த லூமி டால்ஸ் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த லூமி டால்ஸ் விபச்சாரத்திற்கு வாடகைக்கும் விடப்படுகின்றன, தனிப்பட்ட நபர்களுக்கு சொந்தமாகவும் விற்கப்படுகின்றன.

Image Source: Lumidolls.com

வகைகள்!

வகைகள்!

லூமி டால்ஸ் வி.ஆர், பிராண்டி, கென் (ஆண் செக்ஸ் பொம்மை), எலக்டிரா, யோகோ, அர்வேன், டெபோரா, கண்டா, காடி (ஐரோப்பிய வகை) மற்றும் லில்லி (ஆசிய வகை)என பத்து வெவ்வேறு வகையிலான லூமி டால்ஸ் செக்க்ஸ் பொம்மைகளை தயாரித்து விற்பனைக்கும், வாடகைக்கும் கொடுத்து வருகிறது இந்த நிறுவனம்.

Image Source: Lumidolls.com

ஒரு மணி நேரத்திற்கு!

ஒரு மணி நேரத்திற்கு!

பார்சிலோனாவில் இந்த லூமி டால்ஸ் கொண்டு நடத்தப்பட்டு வரும் விபச்சார விடுதியில், இந்த பொம்மைகளுடன் உறவுக் கொள்ள ஒரு மணி நேரத்திற்கு 80 அமெரிக்க டாலர்கள் வசூலிக்கப்படுகிறது. இன்றைய இந்தியப் பண மதிப்பில் இது 5,200 ரூபாய் ஆகும்.

தன்மை!

தன்மை!

இந்த லூமிடால்ஸ் செக்ஸ் பொம்மைகள் கவர்ச்சியான உடைகள் அணிந்து வரிசைப்படுத்தப் பட்டுள்ளன. இவை வெஜினா, ஏனல் மற்றும் ஓரல் செக்ஸ் வைத்துக் கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த செக்ஸ் பொம்மைகளின் உடல் சிலிக்கான் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மற்றும் பிறப்புறுப்பு பகுதிகள் வைப்ரேட் ஆகும்படி அமைத்துள்ளனர்.

உலக நாடுகளில்...

உலக நாடுகளில்...

பார்சிலோனாவில் கண்ட வரவேற்பை தொடர்ந்து ஜெர்மனியிலும், சமீபத்தில் பாரிஸிலும் துவங்கப்பட்டது. ஆனால், பாரிஸ் நகரில் இந்த செக்ஸ் பொம்மை பிராத்தலுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு கூறி வருகிறார்கள்.

இது கற்பழிப்பு குற்றங்களை அதிகரிக்கும் என்று மக்கள் கூற, இது லீகல் தான் என்று போலீஸ் கூறிவருகிறது.

போராட்டம்!

போராட்டம்!

பாரிஸில் பல பகுதிகளில் இதை தடை செய்ய கூறி சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண்ணியவாதிகள் அமைப்புகள் போராட்ட கொடி தூக்கியுள்ளன. இந்த செக்ஸ் பொம்மை விபச்சாரத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளனர்.

ஏமாற்றுதல்!

ஏமாற்றுதல்!

ஒருவேளை, கணவன் கட்டிய மனைவி இருக்கும் போது விபச்சாரம் சென்று வந்தால், வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தால் அதை ஏமாற்றுதல், துரோகம் என்கிறோம். இதனால் பிரிந்த, விவாகரத்து பெற்ற குடும்பங்கள் எண்ணற்றவை. காரணம் அந்த உறவில் வேறு ஒரு நபரின் கலப்பு உண்டாகிறது, அதனால் அதை துரோகம் என்கிறோம்.

துரோகம்!

துரோகம்!

ஒருவேளை ஓர் ஆண் லூமி டால் போன்ற செக்ஸ் பொம்மையுடன் உறவு வைத்துக் கொண்டலோ, அல்லது வீட்டில் வாங்கி வைத்துக் கொண்டாலோ, அதை ஏமாற்றுதல் என்று கூற முடியுமா? நிச்சயம் ஆண்கள் உயரட்ட பொருள் தானே என்று நியாயம் கோருவார்கள். ஆனால், உறவு வைத்துக் கொள்வது என்பது தவறு தான், இதுவும் துரோகம் தான்.

உறவு சங்கலி!

உறவு சங்கலி!

இத்தகைய நேரத்தில்... ஒரு ஆணுக்கு பெண் துணை வேண்டாம் என்ற எண்ணம் எழலாம். ஏன், பெண்களுக்குமே கூட ஆண் துணை வேண்டாம் என்ற எண்ணம் எழ வாய்ப்புகள் உண்டு. பிறகு, இதன் தாக்கத்தால் செக்ஸ் மட்டும் தான் வாழ்க்கை என்ற தாக்கம் உண்டாகிவிட்டால்? ஒரு கட்டத்தில் பிள்ளை பெற்றுக் கொள்ள மட்டும் மனைவி போதும், அதன் பிறகு விவாகரத்து பெற்றுக் கொள்ளலாமே என்ற நிலை ஏற்படலாம்.

இச்சை எண்ணம்!

இச்சை எண்ணம்!

இதுப் போன்ற செக்ஸ் டால்கள் நிச்சயம் மனிதர்கள் மத்தியில் இச்சை எண்ணத்தை தான் அதிகரிக்க செய்யும். உதாரணமாக, ஒரு பொருள் அல்லது விஷயம் அரிதாக இருக்கும் வரை தான் அதன் பயன்பாடு குறைவாக இருக்கும். அந்த பொருள் எளிதாக கிடைக்கிறது, எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்த எதுவாக இருக்கிறது எனில், நிச்சயம் அதை பயன்படுத்த நாம் தயங்க மாட்டோம்.

எனவே, லூமி டால்ஸ் போன்ற இத்தகைய செக்ஸ் பொம்மைகள் சமூகத்திற்கும், மனித உறவுகளுக்கும் ஒரு கேடு என்பதை யாராலும் மறுக்க முடியாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

World First Sex Doll Brothel Lumidoll

Men's Interest Towards Sex Increases Day by Day. In recent years manufacturing sex toys and sex dolls raised a lot. And as a result few countries have started their own first sex doll brothel industry.