நிதித்திரட்டல் என்ற பெயரில் பெண்களை சீரழிக்கும் கிழப் பணக்கார முதலைகள்!

Posted By:
Subscribe to Boldsky

உலகில் பல நாடுகளில், பல பகுதிகளில், ஏழை எளிய மக்களுக்கும், உதவியற்றவர்களுக்கும் உதவ நிதித்திரட்டல் நிகழ்வுகள் நடக்கும். இது உலகில் அனைவருக்கும் சமமான நீதியும், வாய்ப்புகளும் அளிக்கும் என உலக மக்களால் நம்பப்படுகிறது.

இப்படியாக தான் லண்டனின் பிரத்தியேக டார்செஸ்டர் ஹோட்டல் (Dorchester Hotel) வளாகத்தில் சமீபத்தில் நடந்த ஒரு நிதித்திரட்டல் நிகழ்வில் சற்றும் எதிர்பார்க்க முடியாத அதிர்ச்சியளிக்கும் சம்பவங்கள் நடந்திருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
33 வருடங்கள்!

33 வருடங்கள்!

"தி பிரெசிடென்ட் கிளப் சார்டபில் டிரஸ்ட்" என்ற நிறுவனம் கடந்த 33 வருடங்களாக நிதித்திரட்டல் நிகழ்வை சிறப்பிக்கும் விதமாக இரவு விருந்து வைப்பது வழக்கம். இதன் மூலம் திரட்டப்படும் பணமானது "Worthy Children Causes" என்ற பெயரில் குழந்தைகளுக்கு செலவிடப்படுகிறது.

பிரபலங்கள்!

பிரபலங்கள்!

கடந்த வாரமும் ஓர் இரவு இப்படி ஒரு இரவு விருந்து பார்ட்டி நடந்துள்ளது. இந்த விருந்தில் பிரிட்டனை சேர்ந்த பல தொழில் அதிபர்கள், நிதி வழங்குபவர்கள், ஃபேஷன் உலகை சேர்ந்தவர்கள், திரைப்படம் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்துக் கொண்டிருந்தனர்.

மேலும், இந்த பார்ட்டியில் ஆண்கள் மட்டுமே பங்குக் கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

130 பெண்கள்!

130 பெண்கள்!

இந்த விருந்தில் கலந்துக் கொள்ளும் பிரட்டனை சேர்ந்த செல்வந்தர்களுக்கு பணிவிடை செய்ய, உணவு பரிமாற 130 பெண் பணியாளர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். இந்த 130 பேர் தான் விருந்தில் கலந்துக் கொள்ளும் 360 பேரை "திருப்திப்படுத்த" வேண்டும் என வாஷிங்டன் போஸ்டில் செய்தி வெளியாகியிருந்தது.

பெண் நிருபர்!

பெண் நிருபர்!

ஃபினன்ஷியல் டைம்ஸ் நிறுவனத்தை சேர்ந்த பெண் நிருபர் மாடிசன் மேரேஜ் என்ற பெண்ணும், அவருடன் மற்றுமொரு பெண்ணும் இந்த நிகழ்வில் என்ன தான் நடக்கிறது என்பதை அறிந்துக் கொள்ள அண்டர்கவர் வேலையில் சென்றிருந்தனர்.

இந்த விழாவில் அந்த 130 பணிப்பெண்களை தேர்வு செய்ய சில நிபந்தனைகள் இருந்தன.

செக்ஸி!

செக்ஸி!

அந்த 130 பெண்களுக்கான பணியிடங்களுக்கு விண்ணப்பம் அளித்து அதன் மூலம் அனுமது பெறலாம். அதற்கு அந்த பெண்கள் 18-23வயதுக்குட்பட்ட நபராக இருக்க வேண்டும். ஸ்லிம்மாக இருக்க வேண்டும், செக்ஸியாக இருக்க வேண்டும்.

அந்த விருந்தின் போது கிட்டத்தட்ட போல் டான்சர் அல்லது ஸ்ட்ரிப்பர் போல கருப்பு நிற ஷூ, கருப்பு நிற உள்ளாடை, மற்றும் இறுக்கமான ஷார்ட் கார்ஸ்ட் (Corset) உடை அணிந்திருக்க வேண்டும். கார்ஸ்ட் (Corset) என்பது பெண்கள் அணியும் இறுக்கமுடைய மார்புக் கச்சு உடையாகும்.

மாடிசன்!

மாடிசன்!

இந்த விழாவில் இரகசியமாக ஒரு பணிப்பெண்ணாக கலந்துக் கொள்ள விண்ணப்பித்து அனுமதியும் பெற்றார் மாடிசன். இவருடன் இவரது தோழிக்கும் அனுமதி கிடைத்தது.

அந்த பார்ட்டியில் பிரிட்டிஷ் மற்றும் அயல்நாட்டு தொழிலதிபர்கள், செல்வந்தார்கள், அரசியல் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள், பல முன்னணி நிறுவனங்களும் உயர் அதிகாரிகள் என பலர் கலந்துக் கொண்டிருந்தனர் என மாடிசன் தனது நியூஸ் ரிபோர்டில் அறிவித்திருந்தார்.

காம லீலைகள்!

காம லீலைகள்!

உணவுப் பரிமாற வந்திருந்த பணிப்பெண்களை சுற்றி வளைத்து பல விருந்தினார்கள் ஈ போல மொய்த்துள்ளனர். உணவு பரிமாற அழைத்தும், மதுபானம் எடுத்து வரக் கூறியும், பணிப்பெண்கள் அருகே வந்தவுடன் அவர்களுடன் சில்மிஷம் செய்துள்ளனர். சிலர், தங்கள் இருக்கையிலேயே அந்த பணிப்பெண்களை அமர வைத்து, அவர்களுடன் தகாத முறையில் நடந்துள்ளனர்.

அரைநிர்வாண பெண்கள்!

அரைநிர்வாண பெண்கள்!

மேலும், கேலி கிண்டல் நிகழ்ச்சி செய்யும் பெண்களையும் வரவழைத்து அவர்களை அந்தரங்கள் பாகங்கள் தெரியும்படி உடை உடுத்த செய்து, கேலி நிகழ்வுகளும் அந்த ஹோட்டல் விருந்தில் நடந்தது என்றும் மாடிசன் தனது செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

அந்த நிகழ்வில் 19 வயது பெண்ணுடன் ஒரு 70 வயது ஆண்கள் சல்லாப ஆசையுடன் நெருக்கம் காண்பித்தது அருவருப்பை அளித்தது என்றும் தகவல்கள் கூறப்பட்டிருந்தன.

ஓர் நிகழ்வு...

ஓர் நிகழ்வு...

ஒரு தருணத்தில்... வயதான ஆண் ஒருவர் இளம்பெண்ணை தன்னருகே அழைத்து அந்த பெண்ணின் அந்தரங்க பாகங்களை தழுவி மகிழ்ந்துள்ளார். இந்த செயலுக்கு அந்த பெண்ணை எந்த கூச்சமும் இன்றி சப்தமிட்டு அழைத்துள்ளார்.

அந்த இரவு முழுக்க ஒவ்வொரு டேபிளுலும் ஒவ்வொரு பெண் விருந்தாகி வந்தனர் என்றும், அவர்களை ஆடைகளை அகற்றியும் தகாத முறையில் நடந்து கொண்டனர் என்று மாடிசன் கூறியுள்ளார்.

கழிவறை!

கழிவறை!

இவற்றுக்கு எல்லாம் மேல் நடந்த கொடுமை என்னவெனில், பெண்கள் பயன்படுத்தும் கழிவறையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, அவர்கள் எத்தனை நேரம் அங்கே இருக்கிறார்கள், என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்று வேவுப்பார்த்துள்ளது அந்த ஹோட்டல் நிர்வாகம்.

மேலும், தன்னையும் யாரென்று அறியாத அங்கு வந்திருந்த கிழ விருந்தினர் தகாத முறையில் நடத்தினார்கள் என மாடிசன் தெரிவித்திருந்தார்.

பணம்!

பணம்!

இந்த நிகழ்ச்சிக்கு பெண்கள் தெரிந்தே தான் வருகிறார்கள். இங்கு பணிப்பெண்ணாக வரும் பெண்கள் அனைவரும் நாடகங்களில் நடிக்கும் நடிகைகள், ஃபேஷன் மாடல்கள் மற்றும் இளம் மாணவிகள் ஆவர்.

அவர்கள் எல்லாம் கூடுதலாக பணம் கிடைக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே இங்கே வருகிறார்கள் என்றும் மாடிசன் ஃபினான்சியல் டைம்ஸ் செய்தி கட்டுரையில் தெரிவித்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

London Woman Journalist Madison Marriage was Groped and Molested in Fundraisers Party!

London Woman Journalist Madison Marriage was Groped and Molested in Fundraisers Party!
Subscribe Newsletter