For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருணாநிதியின் நிறைவேறாத ஆசை இதுதானாம்...

கருணாநிதி தன்னுடைய எல்லா ஆசைகளையும் ஏறக்குறைய நிறைவேற்றிக் கொண்டார். அவருடைய நிறைவேறாத ஆசை ஒன்று மட்டும் உள்ளது. அது என்ன என்று பார்ப்போம்.

|

கருணாநிதி தான் எண்ணத்தில் நினைத்ததை மட்டுமின்றி பெரியாருடைய சமூகப் புரட்சி வித்துக்களையும் தன்னுடைய மனதில் கொண்டு, அதை தன்னுடைய பொறுப்புகளின் வாயிலாக அரசியல் திட்டங்களாக மாற்றிக் காட்டினார். எப்போதும் மக்களுக்காகவே உழைத்துக் கொண்டிருந்த அவர் தனக்கென ஒரு ஆசை வைத்திருந்தாராம். அது என்று தெரியுமா?...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அண்ணாவின் இதயம்

அண்ணாவின் இதயம்

1969 ஆம் ஆண்டு அண்ணாதுரை இறந்த போது, அனைத்திந்திய வானொலியில் கருணாநிதி அவர்கள் வாசித்த அஞ்சலி கவிதையின் சிறப்பு பற்றி இன்றளவும் எல்லோரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர் அந்த கவிதையில், உங்களுடைய நெஞ்சுரம் மிக்க இதயத்தை எனக்கு தாருங்கள் அண்ணா. நான் உங்களை மீண்டும் வந்து சந்திக்கிற பொழுது,அந்த இதயத்தை பத்திரமாக உங்களிடம் திருப்பித் தந்து விடுகிறேன் என்று. அப்படியே ஆனது கருணாநிதி இறந்த பின் எல்லா ஊடகங்களும் கருணாநிதி அண்ணாவின் இதயத்தைத் திரும்பிக் கொடுக்க புறப்பட்டுவிட்டார். ஒப்படைத்தார் என செய்திகள் வெளியிட்டன.

பெரியாரும் கருணாநிதியும்

பெரியாரும் கருணாநிதியும்

பெரியாரின் வழியில் அண்ணா சென்றார். அவரைத் தொடர்ந்து கருணாநிதியும் பெரியாரைப் பின்பற்றினார். பெரியாருடன் இணைந்து, பெரியார் நடத்திய பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். அந்த சமயத்தில் பெரியாரை நன்கு உள்வாங்கிக் கொண்ட அவர், பெரியார் செய்ய நினைத்த சமூகப் புரட்சிகளை வெறுமனே புரட்சியாக மட்டும் நிறுத்தி விடாமல் தான் முதல்வரான பின், அவற்றை சட்ட வடிவமாகவே மாற்றி விட வேண்டும் என்று அசைப்பட்டார். அப்படி செய்து முடித்தது தான் பெரியாருடைய கோவில் கருவறை நுழைவு போராட்டம் என்பது எல்லா சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்னும் செயல் வடிவமாக வந்தது. பெரியாரின் பெண் சுயமரியாதை, பொருளாதார முன்னேற்றம் ஆகியவை தான் பெண்ணுக்கான சரி சமான சொத்துரிமை சட்டமாக மாறியது என்று கூறலாம்.

இறுதி வாசகம்

இறுதி வாசகம்

30 ஆண்டுகளுக்கு முன்பாக எப்போதோ கருணாநிதி சொன்னாராம். நான் இறந்த பின் அந்த இடத்தில், ஓய்வே இல்லாமல் உழைத்தவன் இங்கு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறான் என்று எழுதி வைக்க வேண்டும் என்று. இதேபோல் அவருடைய நல்லடத்தின் போது, அடக்கம் செய்யப்பட இருந்த சந்தனப் பேழையில் அந்த வசனம் பொறிக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அந்த ஆசையை நிறைவேற்றி வைத்தார்கள்.

நிறைவேறாத ஆசை

நிறைவேறாத ஆசை

இப்படி தான் நினைத்தவை, தன்னுடைய முன்னோடிகள் நினைத்த அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றிக் கொண்டார். ஆனால் அவருடைய மிகப்பெரிய ஆசை என்ன தெரியுமா? அவருகு்கு பெரியாரை விட அதிக நாட்கள் உயிர் வாழ வேண்டும் என்று ஆசையாம். ஆம். பெரியார் இந்த மண்ணில் 94 வருடம் 99 நாட்கள் வாழ்ந்து இறந்து போனார். கலைஞரோ 94 வருடம் 66 நாட்கள் வாழ்ந்து இந்த மண்ணுலகை விட்டு பிரிந்து போயிருக்கிறார். அதாவது இன்னும் 33 நாட்கள் கூடுதலாக உயிர் வாழ்ந்திருந்தால், இந்தியாவிலேயே அதிக நாட்கள் வாழ்ந்த உயிர் வாழ்ந்த அரசியல் தலைவர் என்ற புகழையும் சாதனையையும் கூட அவர் தன் வசப்படுத்தியிருப்பார். அவருக்கு இருந்த அந்த ஒரு ஆசை மட்டும் நிறைவேறவில்லை. யாரும் அதை இனி நிறைவேற்றி வைக்கவும் முடியாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

karunanidhi's Incomplete Desire

karunanidhi had some desires for his life, almost all its fullfill. but only one desire is not complte in his life. details here.
Desktop Bottom Promotion