For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஜ்பாய் குறித்து கருணாநிதி கூறியது என்ன?

அடல் பிகாரி வாஜ்பாய் குறித்த சில அரசியல் பயணங்கள் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

|

வாஜ்பாயை பிடிக்காத மனிதர்களே இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். பாஜகவினுடைய பரம எதிரிகள் கூட, தங்களுக்கு வாஜ்பாயை பிடிக்காது என்று கூற மாட்டார்.

intresting facts of adal bihari vajpayee

Image Courtesy

அப்படி எல்லோர் மனதையும் ஈர்த்தவர். அப்படி கூறக் காரணம் அவருடைய அமைதியான அதே சமயம் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் தான். திருமணம், குடும்பம் என்றில்லாம் தன்னுடைய வாழ்க்கையை இந்த இந்திய சமூகத்துக்கான அர்ப்பணித்துக் கொண்டவர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடல் நலம்

உடல் நலம்

எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட வாஜ்பாய் தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்

கடந்த பத்து வருடங்களாக பக்கவாதம், மற்றும் டிமென்சியா எனும் நினைவிழப்பு என தொடர்ச்சியாக பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டு, கடந்த 9 வாரங்களாக சிறுநீரக தொற்று நோயாலும், நுரையீரல் சுவாசக் கோளாறினாலும் அவதிப்பட்டு வருகிறார். கடந்த இரண்டு நாட்களாக மருத்துவமனை சார்பில் வெளிவரும் அறிக்கைகள் அவருடைய உடல் நலத்தின் தீவீரத்தை நமக்கு உணர்த்திக் கொண்டுதான் இருக்கின்றன.

படிப்பும் ஆசையும்

படிப்பும் ஆசையும்

Image Courtesy

உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரில் அமைந்திருக்கிற லட்சுமிபா் கல்லூரியில் தான் தன்னுடைய எம்.ஏ பட்டத்தை அரசியல் அறிவியல் துறையில் பெற்றார். இவருடைய தந்தையோ பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் சிறந்த கவிஞர் என்பதால், தான் ஒரு மிகச்சிறந்த பத்திரிகையாளனாக வர வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் ஆர்எஸ்எஸ் மீது அதீத காதல் இவரை அரசியலின் பக்கம் இழுத்து வந்துவிட்டது.

அரசியல் பயணங்கள்

அரசியல் பயணங்கள்

1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார்.

1951 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் தாய்க்கழகமாக பாரதீய ஜன சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்தார்.

1957 ஆம் ஆண்டு மக்களவை உறுப்பினராகவும் 1962 இல் மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1968 இல் தான் எந்த இயக்கத்தில் தன்னுடைய அரசியல் பயணத்தைத் துவங்கி, வெறும் உறுப்பினராகக் காலெடுத்து வைத்தாரோ அதே பாரதிய ஜக சங்கத்தினுடைய தேசிய தலைவராகத் தேர்ந்தெடுக்கபட்டார்.

1975 ஆம் ஆண்டு இந்திராகாந்தி கொண்டு வந்த நெருக்கடி நிலை (எமர்ஜென்சி) போது 2 ஆண்டுகள் சிறை சென்றார்.

1977 ஆம் ஆண்டு ஜனதா கட்சியினுடைய வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

1980 ஆம் ஆண்டில் தான் தற்போது இருக்கும் பாரதீய ஜனதா கட்சி தோற்றம் பெற்றது. அதனுடைய முதல் தலைவராக அடல் பிகாரி வாஜ்பேயி பொறுப்பேற்றார்.

1996 ஆம் ஆண்டு முதன் முதலில் இந்தியாவின் பிரதம மந்திரியாக வாஜ்பேய் பொறுப்பேற்றார். ஆனால் வெறும் 13 நாட்கள் மட்டுமே ஆட்சி நிலைத்தது.

1998 ஆம் ஆண்டு மீண்டும் இரண்டாவது முறையாக பிரதமர் வாய்ப்பைப் பெற்றார். அந்த சமயத்தில் தான் பொக்ரானில் அணுகுண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு, இந்தியாவின பலத்தை உலக நாடுகளுக்கு நிரூபித்தார்.

1999 ஆம் ஆண்டு தான், கார்கிலில் ஆஃபரேஷன் விஜயை வெற்றிகரமாக நடததி முடிக்கப்பட்டது. அப்போது அவர் மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பொறுப்பேற்றிருந்தார்.

2001 ஆம் ஆண்டு தான் அனைவருக்கும் கட்டாயக் கல்வி வழங்க வேண்டும். இந்தியாவின் எழுத்தறிவு சதவிகிதத்தை அதிகரிக்க வேண்டுமென நாடு முழுவதும் சர்வ சிக்ஷான் அபியான் எனும் (அனைவருக்கும் கல்வித் திட்டம்) திட்டத்தைக் கொண்டு வந்தார்.

2004 ஆம் ஆண்டு பாஜக நாடாளுமன்றத் தேர்தலில படுதோல்வி அடைந்தது. 2005 ஆம் ஆண்டு முதலே தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார் வாஜ்பேயி.

சிறப்புகள்

சிறப்புகள்

2009 ஆம் ஆண்டிலேயே பக்கவாதத்தால் பாதிக்கபட்டிருந்தார். 2014 ஆம் ஆண்டு வாஜ்பாய் பிறந்த தினத்தை நல்லாட்சி தினமாகக் கடைபிடிக்கக் கோரி அரசு அறிவித்து அவருக்கு சிறப்பு செய்தது.

அதையடுத்து கடந்த 2015 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருதினை வாஜ்பாய்க்கு வழங்க மத்திய அரசு பரிந்துரை செய்தது. அதை அவர் பெற்றுக் கொண்டார்.

பீகாரில் அவசர சட்டம்

பீகாரில் அவசர சட்டம்

Image Courtesy

அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டத்தில் பீகாரில் மாநில ஆட்சியைக் கலைத்துவிட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வரவேண்டும் என்கிற அவசரச் சட்டத்தை வாஜ்பேயி பிறப்பித்தார். அப்போது குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர். நாராயணன் அதற்கான அவசியம்இல்லை என்றும், தனக்கு பதவி ஆசை பெரிதாக இல்லையென்றும் சொல்லி, அதனைத் திருப்பி அனுப்பி வைத்தார். ஆனாலும் தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்த வாஜ்பேயி பீகாரில் மீண்டும் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தினார்.

திமுக ஆட்சியும் வாஜ்பாயும்

திமுக ஆட்சியும் வாஜ்பாயும்

Image Courtesy

1999 ஆம் ஆண்டு, பாரதிய ஜனதா கட்சி தவறான குறுக்கு வழியில்அரசியல் சாசனச் சட்டம் 356 ஐ பயன்படுத்தி, தமிழகத்தில் இருந்த திமுக அரசைக் கலைக்க வாஜ்பாய் பலராலும் வற்புறுத்தப்பட்டார். ஆனால் ஒருபோதும் அதற்கு வாஜ்பாய் சம்மதிக்கவில்லை. இதனால் ஜெயலலிதா தான் பிஜேபிக்கு கொடுத்த ஆதரவை விலக்கிக் கொண்டதால், பாஜக ஆட்சியை இழந்தது. ஆனாலும் தவறான வழியில் திமுக வை வீழ்த்த நினைக்க மாட்டேன் என உறுதியாக சொன்னார் வாஜ்பாய். இதற்குக் காரணம் கருணாநிதியும் வாஜ்பாயும் ஒருவருக்கொருவர் தங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையும் மரியாதையும் தான் என்று கூறப்படுகிறது.

வாஜ்பாய் பற்றி கருணாநிதி

வாஜ்பாய் பற்றி கருணாநிதி

Image Courtesy

பிஜேபிக்கும் திமுகவுக்கு அடிப்படையில் ஆயிரம் கொள்கை வேறுபாடுகள் இருந்த போதிலும் வாஜ்பாய் தலைமை வகித்த போது, தங்களுடைய கொள்கையில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல், கூட்டணிக்கு சம்மதித்து, வாஜ்பாயை வெற்றி பெறச் செய்வதற்கான எல்லா பணிகளையும் செய்தது திமுக. கருணாநிதிக்கு பொதுவாக வாஜ்பாய் மீது அதிக அன்பும் மரியாதையும் உண்டு.

பிஜேபி கொள்ளை ரீதியாக முற்றிலும் வேறுபட்டிருந்தாலும் தான் வாஜ்பேயியை எவ்வளவு மதிக்கிறேன் மதிக்கிறேன் என்பதற்கு ஒரு சின்ன ஒற்றை வரிக் கவிதையை வாஜ்பாய் குறித்து எழுதினார் கருணாநிதி. அது என்ன தெரியுமா? இதோ...

"பிஜேபி என்னும் கெட்ட மரத்தினில் ஒரு நல்ல கனி தான் அடல் பிகாரி வாஜ்பாய்"

என்னும் வரிகள் தான் அவை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

intresting facts and political history of adal bihari vajpayee

Here are some interesting facts about this erudite politician:
Desktop Bottom Promotion