For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுஜாதா எனும் எழுத்து அரக்கன் பற்றி பலரும் அறியாத சுவராஸ்யமான உண்மைகள்!

எழுத்தாளர் சுஜாதா ரங்கராஜன் பற்றி நாம் அறிந்துக் கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான உண்மைகள் மற்றும் விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் கூறப்பட்டுள்ளது.

|

நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்கள், 250க்கும் மேற்பட்ட சிறு கதைகள், தமிழில் அறிவியல் கலந்த கதைகளை புகுத்திய ஆசான். கவிதை, கட்டுரை, திரைக்கதை என தமிழ் இலக்கியத்திற்கு பெரும் பங்களிப்பு அளித்த இருபதாம் நூற்றாண்டின் ஆகச்சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர்.

ஆனந்த விகடன், குமுதம், கல்கி போன்ற இதழ்களில் தனது பங்களிப்பை அளித்தவர். இயக்குனர் ஷங்கரின் திரைக்கதைக்கு பெரும் தூணாக துணை நின்றவர்...

எஸ். ரங்கராஜன் என்கிற எழுத்தாளாராக சுஜாதா..., இன்று மே 3, இந்த எழுத்து அரக்கனின் 83வது பிறந்த நாள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுவாரஸ்யமான நிகழ்வு!

சுவாரஸ்யமான நிகழ்வு!

இது 1950களில் நடந்த சம்பவம்... மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் அப்போது தமிழில் அறிவியல் குறித்து எழுத வேண்டிய போட்டி ஒன்று வருகிறது. அப்போது ஒரே பேட்ச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் அதில் பங்கெடுக்கிறார்கள். ஒருவர் எலக்ட்ரானிக்ஸ் மாணவர், மற்றொருவர் ஏரோ ஸ்பேஸ் மாணவர். இவர்களும் அந்த போட்டியில் பரிசு வெல்கிறார்கள்.

சிறிது காலம் கழித்து இருவர்களுமே அவர்களுக்கு பிடித்தமான துறையில் இந்திய அளவில் பெரும் பிரபலமாக உருவாகிறார்கள். ஒருவர் மின்னணு வாக்கு இயந்திரத்தை வடிவமைக்கிறார். மற்றொருவர் இந்தியாவின் மிஸைல் மனிதன் என்று புகழப்படுகிறார்.

அந்த போட்டியில் பங்கெடுத்து பெரிசு வென்ற எலக்ட்ரானிக்ஸ் மாணவர் சுஜாதா. ஏரோ ஸ்பேஸ் மாணவர் கலாம் அவர்கள்.

கலாமின் தோழன்!

கலாமின் தோழன்!

திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் இவர் இயற்பியல் படித்தார். இவர் வகுப்பில் உடன் படித்த இவரது நண்பர் யார் தெரியுமா? அப்துல் கலாம். பிறகு இவர்கள் இருவரும் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் சேர்ந்தனர். கலாம் அவர்கள் ஏரோஸ்பேஸ் பொறியியல் தேர்வு செய்தார். சுஜாதா என்கிற ரங்கராஜன் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் தேர்வு செய்தார். இவர்கள் இருவருமே இளமை காலத்தில் இருந்தே சிறந்த நண்பர்களாக இருந்தனர்.

மின்னணு வாக்கு இயந்திரம்!

மின்னணு வாக்கு இயந்திரம்!

பலருக்கும் சுஜாதா என் இனிய இயந்திரா என்ற புத்தகத்தை எழுதியுள்ளார் என்று தெரியும். ஆனால், இன்னும் சிலருக்கு தெரியாத உண்மை. இந்தியா எனும் உலகின் மாபெரும் ஜனநாயக நாட்டிற்கு மின்னணு வாக்கு இயந்திரத்தை உருவாக்கிய பொறியியலாளர் குழுவை தலைமை தாங்கியவர்களில் இவரும் ஒருவர்.

சுஜாதா?

சுஜாதா?

சுஜாதா என்பது இவரது புனைப்பெயர். இது தான் இவரது மனைவியின் பெயரும் கூட. சுஜாதா என்ற பெயர் இவருக்கு வந்ததற்கு பின்னணியில் ஒரு சிறிய கதையும் உண்டு. விகடனில் இவர் எழுதிக் கொண்டிருந்த போது, அங்கே ஏற்கனவே ரங்கராஜன் என்ற பெயரில் ஒருவர் வேலை செய்து வந்ததால். அப்போது விகடனின் ஆசிரியராக இருந்தவர் ரங்கராஜன் என்ற பெயரை மாற்றி சுஜாதா என்ற புனைப்பெயர் வைத்துக் கொள்ள செய்தார் என்று கூறப்படுகிறது. ஆனால், அதுவே அவரது பெரிய அடையாளமாக மாறிவிட்டது.

ஸ்ட்ரிக்ட்!

ஸ்ட்ரிக்ட்!

சுஜாதா பிறந்தது சென்னையில் தான் என்றாலும், படித்தது, வளர்ந்தது எல்லாம் திருச்சியில் தான். அதுவும் தனது ஸ்ட்ரிக்ட் ஆபீசர் பாட்டியிடம் தான் வளர்ந்தார். தனது வாழ்நாளின் பெரும் பங்கை சுஜாதா அவர்கள் சென்னை மற்றும் பெங்களூர் நகர்களில் வாழ்ந்தார். இவரது பல நாவல்கள் மற்றும் கதைகளில் இந்த மூன்று நகரங்கள் இடம்பெறுவதை கவனிக்க இயலும்.

முதல் நபர்!

முதல் நபர்!

தமிழ் கதை, நாவல் மற்றும் கட்டுரைகளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தவர் சுஜாதா. இதற்காக இவர் நிறைய கௌரவ விருதுகள் மற்றும் அரசு மரியாதைகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது பாட்டியிடம் இருந்து இவர் நாலாரிய திவ்ய பிரபந்தம் போன்ற வைஷ்ணவ இலக்கியங்களை கற்றார். இதனால் இவரது சில கதைகளில் ஆழ்வார்கள் குறித்த விஷயங்களும் காண இயலும்.

தனித்தன்மை!

தனித்தன்மை!

சுஜாதா அவர்கள் எழுதிய நாவல்கள், கதைகள், சிறுகதைகள், திரைக்கதைகள் என அனைத்தும் மக்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பு மற்றும் பிரபலம் அடைந்தவை. இவரது தனுத்துவம் தான் இந்த வெற்றிக்கு காரணம்.

பெரும் அரசியல் விஷயங்களை, விமர்சனங்களை சிறிய நகைச்சுவையில் கலந்து அதை ரசிக்க செய்வார். மேலும், இவரது எழுத்தும், ஒரு விஷயத்தை வாசகர்கள் மற்றும் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் விதமும் வித்தியாசமாக இருந்தது.

ஷங்கர்!

ஷங்கர்!

இயக்குனர் ஷங்கரின் பெரும்பாலான படங்களுக்கு திரைக்கதை, வசனத்தில் பெரும் உதவியாகவும், அவருக்கு பக்கபலமாகவும் இருந்தவர் எழுத்தாளர் சுஜாதா அவர்கள். சுஜாதா அவர்கள் கடைசியாக பணியாற்றியது இயக்குனர் ஷங்கரின் எந்திரன் படத்தின் திரைக்கதை, வசன அமைப்பில் தான்.

சுஜாதாவின் மறைவு தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமல்ல, இயக்குனர் ஷங்கருக்கும் கூட பெரிய இழப்பு தான் என்று திரைத்துறையினர், ரசிகர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Interesting Facts and Things To Know About Writer Sujatha Rangarajan!

Interesting Facts and Things To Know About Writer Sujatha Rangarajan!
Desktop Bottom Promotion