For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மனைவியின் சந்தேக புத்தியால் வாழ்க்கையே போச்சு! my story #240

இயல்பு வாழ்க்கைக்கும் சினிமாவிற்கும் கண்டிப்பாக வேறுடுகள் உண்டு. அதனை தன் வாழ்க்கை அனுபவம் மூலமாக ஒருவர் பகிர்ந்திருக்கிறார்.

|

வாழ்க்கையில் எல்லாருக்கும் ஒரே மாதிரியான இடம் கொடுக்கிறோமா? என்றால் இல்லை என்பது தான் பதிலாக இருக்க முடியும். நமக்கு நெருக்கமானவர்களுக்கு ஒரு மாதிரியும் நம்மிடையே மனக்கசப்பை ஏற்படுத்தியவர்களுக்கு வேறு மாதிரியும் தான் நடத்துகிறோம் நடத்தப்படுகிறோம். இது மனித இயல்பு.

இப்படி இயல்பான ஓர் விஷயத்தால் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்களை சந்திக்க வேண்டியிருக்கும் தெரியுமா? நிம்மதியாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் முக்கியத்துவம் கொடுப்பதில் ஏற்பட்ட பிரச்சனை இன்று பலரது வாழ்க்கையை ஆம், என்னுடையது மட்டுமல்ல பலரது வாழ்க்கையுமே சிதைத்திருக்கிறது.

இதில் நீ செய்தது தவறு, நான் செய்தது தான் சரி என்று விதண்டாவாதம் பேச நேரமில்லை, மாறாக நாம் சிறிதும் யோசிக்காமல் முடிவெடுத்துவிடுகிற நேரங்களில் எல்லாம் நிதானமாய் சிந்திக்கவும், அவ்வளவு எளிதாக நாம் நேசிப்பவரை சந்தேகப்பட்டுவிடக்கூடாது என்பதையும் இந்த கதை உங்களுக்கு உணர்த்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திருமணம் :

திருமணம் :

ஐந்து வருடங்களாக பெண் தேடி உள்ளூரில் அமையாமல் வெளியூரிலிருந்து எனக்கு பெண்ணை தேர்ந்தெடுத்திருந்தார்கள். பெண் அமையாததற்கு காரணங்களாக நாங்கள் நினைத்துக் கொண்டது சொந்த வீடு இல்லை, உடன் பிறந்தவர்கள் நான்கு பேர்....அதில் மூன்று பேர் பெண்கள்.

பெரிதாக சொல்லிக் கொள்ளும் படிப்போ அல்லது மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலையோ கிடையாது. அம்மா முப்பது பவுன் மற்றும் ஐந்து லட்சம் வரை வரதட்சனை எதிர்ப்பார்த்தார்.

போதுமான அளவிற்கு வருமானம் வந்து கொண்டிருந்தது இவை அத்தனைக்கும் மேலாக நான் தான் அந்த வீட்டின் மூத்தமகன்.

காரணங்கள் :

காரணங்கள் :

வரதட்சனை கேட்கலாமா? அதுவும் முப்பது சவரன் கூடவே ஐந்து லட்சம் வேறு என்று கொடி பிடிக்காதீர்கள். என் கதைக்கு வருவோம்.... ஒரு சிலர் காரணத்தை சொன்னார்கள் சிலர் ப்ரோக்கரிடம் சொல்லும் போதே தங்களுடைய கண்டிஷன்களுக்கு ஒத்து வந்தால் வந்தால் தான் ஜாதகத்தையே வாங்குகிறார்கள்.

மாப்ள படிக்கல,வருமானம் பத்தல,சொந்த வீடில்ல என்ற பொருளாதார காரணங்களைச் சொன்னதாகவே ப்ரோக்கர் எங்களிடம் சொன்னார். ஆனால் என்னுடைய நண்பர்கள் தான் வீட்டில் எனக்கிற பொறுப்புகளால் தான் உனக்கு வரன் அமைய தாமதமாகிறது என்றார்கள்.

மனைவியானவள் :

மனைவியானவள் :

ஒரு வழியாக ஐந்து வருட தீவிரமான தேடுதலுக்குப் பின் அமுதா என் மனைவியானாள். வரதட்சனை எல்லாம் அப்படியே சொன்னபடி கொடுத்தால் தான் தாலி கட்டுவேன் என்றெல்லாம் முரண்டு பிடிக்காமல் அமைதியாக தாலியைக் கட்டி எங்கள் ஊருக்கு அழைத்து வந்தேன்.

முதல் மூன்று மாதங்கள் அமைதியாகச் சென்றது.

சொந்தக்காரங்க இருக்காங்களே.... :

சொந்தக்காரங்க இருக்காங்களே.... :

மனைவி வழி உறவினருக்கு திருமணம் வந்தது. ஊருக்கு போக வேண்டும் என்றாள் அடுத்த வாரம் தம்பி மகளுக்கு விஷேசம் அதனால போகக்கூடாது என்றார் அம்மா. மனைவி என்னிடம் அடம் பிடித்தாள். இருவரையும் சமாதானப்படுத்த முடியவில்லை இறுதியில் மனைவியே வென்றாள். அதிலேயே அம்மாவுக்கு கோபம்.

விஷேச நாளில் சொந்தபந்தங்கள் எல்லாம் மனைவியை விசாரித்திருக்கிறார்கள். ஊருக்குப் போயிருக்கிறாள் என்று சொன்னதும் ஒவ்வொருவரும் தங்கள் அனுபவக் கதையை சொல்லி அம்மாவை ஏதோ மிகப்பெரிய குற்றம் செய்தவர் போல மிரட்டியிருக்கிறார்கள். இப்படியே போனா அவ்ளோ தான் உன் மருமக உன்னைய வீட்டே அனுப்பிருவா.... இப்பவே உன் புள்ள பொண்டாட்டி பக்கம் சாஞ்சுட்டானா கூடிய சீக்கிரம் தனிக்குடித்தனம் போய்டுவான் பாரு.....

பத்திரகாளி :

பத்திரகாளி :

ஆரம்பப்புள்ளி வைத்த பிறகு கோடு எந்த பக்கத்திலிருந்து எவ்வளவு நீளத்திற்கு இழுக்கப்பட்டால் என்ன கவலை என்று நினைத்துக்கொண்டு வீட்டில் மாமியார் மருமகள் பிரச்சனை தினம் தினம் எழ ஆரம்பித்தது.

கூடவே என் அக்காக்களும் சேர்ந்து கொண்டார்கள். பெரிய சண்டையென்றால் கூட பரவாயில்லை இரண்டு முறை குழம்பு ஊற்றி சாப்பிட்டால், ஊர்ல இருந்து பெரியப்பா வராரு ஒண்ணுமே சொல்லாம அதுபாட்டுக்கு உள்ளுக்க போறா, ரெண்டு சட்டைய ஒரு மணி நேரம் துவைக்கிறா? , பாத்திரம் கழுவ நின்னா குழாய மூடவே மாட்றா இப்படியான புகார்கள் மனைவி மீது விழும்.

உங்க அம்மா மட்டும் என்னவாம் ? :

உங்க அம்மா மட்டும் என்னவாம் ? :

இதைப் பற்றி தப்பித் தவறிக்கூட மனைவியிடம் வாய் திறந்துவிடக்கூடாது மீறித் தொறந்தால் அம்மாவே பராவாயில்லை போலவே என்றாகிவிடும். உங்க தங்கசிங்களுக்கு மட்டும் செய்றாங்க என்னக்கு என்ன செஞ்சாங்க எப்பவும் உங்க குடும்பத்துக்கு ஆக்கி கொட்டதான் இங்க வந்தேனா? ஒரு நல்ல நாளு கிழமன்னு புது சேல எடுத்து கொடுத்திருப்பீங்களா? வெளிய தான் கூட்டிட்டு போயிருப்பீங்களா..... இப்படி அம்மா மீதான கோபம் அப்படியே என் பக்கம் சாய்ந்திடும்.

5 வருடம் :

5 வருடம் :

மனஸ்தாபங்களுடன் ஐந்து வருடம் கடந்தது. உடன் பிறப்புகள் எல்லாம் தனித்தனியாக செட்டில் ஆனார்கள் நாங்களும் சற்று பெரிய வீட்டிற்கு மாறியிருந்தோம். ஓரளவுக்கு சகஜ நிலைக்கு திரும்பியிருந்தோம். ஆனால் எங்களுக்கு இருந்த ஒரே குறை இன்னமும் எங்களுக்கு குழந்தை பிறக்கவில்லை என்பது தான்.

இதனால் வெளியில் எவ்வளவு அவமானத்தை,உதாசீனத்தை மனைவி சந்திக்கிறாள் என்பதை உணர்ந்தே இருந்தேன். அதனாலேயே விஷேச வீட்டிற்கு வரவில்லை என்றால் நான் வற்புறுத்த மாட்டேன்.

புதிய பிரச்சனை :

புதிய பிரச்சனை :

வாழ்க்கை ஓட்டம் இயல்பாகிவிட்டது குழந்தை விஷயத்தை எல்லாம் நாங்கள் மறந்திருந்தோம். எப்போதாவது வீட்டில் பூஜை செய்யும் போதோ அல்லது கோவிலுக்கு செல்லும் போதோ ஆத்தா என் புள்ளைக்கு கருண காட்டக்கூடாத ஒத்த வாரிசா கொடுத்துரு ஆத்தா என்று வேண்டுவாள் அம்மா கை வைத்தியத்தையும், கோவில் குளங்களையும் லிஸ்ட் எடுத்து வந்து அதையெல்லாம் நிறைவேற்றச் சொல்லி அடம் பிடிப்பாள்.

என்னுடைய ஜாதகத்தையும், மனைவியின் ஜாதகத்தையும் தூக்கிக் கொண்டு ஊரில் இருக்கிற அத்தனை ஜோசியர்க்காரர்களையும் சந்தித்திருப்பாள். ஒரு கட்டத்தில் அம்மாவின் இந்த முயற்சிகளும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்ததது. இந்த நேரத்தில் தான் புதிய பிரச்சனை ஒன்று வடிவெடுத்து வந்தது.

தங்கை முறை :

தங்கை முறை :

என் மூத்த தங்கைக்கு திருமணம் செய்து கொடுத்த மச்சானின் அண்ணன் மகள் அவள். தங்கையின் திருமணத்தின் போது பள்ளிச் சிறுமியாக இருந்தாள் இப்போது கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்துவிட்டிருந்தாள். தங்கையுடன் சில முறை எங்கள் வீட்டிற்கும் வந்திருக்கிறாள். இன்னொருவகையில் அவர்கள் அப்பா வழி தூரத்து சொந்தம் என்றும் அம்மா சொல்லியிருக்கிறாள்.

உதவி :

உதவி :

லேப்டாப் தொடர்பாகவும், கல்லூரியில் நடத்தபடுகிற ஸ்காலர்ஷிப் அப்ளை செய்ய, போட்டித் தேர்வு புத்தகங்கள், கேம்ப்பஸ் இண்டர்வியூ,இப்படி பல விஷயங்களை என்னிடம் வந்து கேட்பாள். அடிக்கடி வீட்டிற்கு வர ஆரம்பித்தாள்.

அவளுக்காக புத்தகங்களை ஆர்டர் செய்து வரவழைத்து கொடுப்பது, ஸ்காலர்ஷிப் தொடர்பாக பலரிடம் விசாரித்து அலைந்து திரிவது மனைவிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

சண்டை :

சண்டை :

ஒரு வாட்டி சொல்லல்லாம் ரெண்டு வாட்டி சொல்லலாம் ஒராயிரம் முறை சொல்வாங்களா? இன்னும் எத்தனை நாளைக்கி சின்ன புள்ளன்னு இடம் கொடுக்க போறீங்க அன்னக்கி நீங்க வருவீங்க வருவீங்கன்னு எவ்ளோ நேரம் காத்திருந்தேன்.... மனுஷன் கல்யாண நாள் அனைக்காச்சு பொண்டாட்டியோட சந்தோசமா பேசுவான்னு பாத்தா அப்பவும் அந்த சிறுக்கியோட ஊர் சுத்திட்டு இருக்காரு.

அப்படி என்ன அவசியம் உங்க வேலையை எல்லாம் விட்டுட்டு அந்த புள்ளைக்கு போய் உதவி செய்யணும்னு

நாசூக்காக சொல்லிடு :

நாசூக்காக சொல்லிடு :

கொஞ்சம் கொஞ்சமாக விஷத்தை கக்க ஆரம்பித்தாள். நாளைக்கு அந்த புள்ள வீட்டுக்குள் காலெடுத்து வச்சா? அருவாமனைய எடுத்து ஒரே வெட்டு என்று சொல்லும் அளவுக்கு அவளது கோபம் எகிறியிருந்தது.

அவளிடமும் வீட்டிற்கு வராதே என்று சொல்ல முடியவில்லை அதனால் அம்மாவிடம் சொல்லி நாசூக்கா சொல்லச் சொல்லியிருந்தேன்.

 என் தவறு :

என் தவறு :

எனக்கே தெரிந்திருந்தது உறவுக்கார தங்கைக்கு பல இடங்களில் முன்னுரிமை கொடுத்திருந்திருக்கிறேன். மூன்று அக்காக்களுடன் பிறந்ததினால் அதே பாசத்துடன் தான் அந்த தங்கையையும் அணுகியிருந்தேன்.

நம்ம தான செய்யணும் என்று ஆரம்பம் முதலே பழக்கப்பட்டிருந்ததால் அந்த அண்ணன் தங்கை உறவு இன்னமும் தொடர்ந்தது. ஆனால் அது வெளியிலிருந்து பார்க்கிற யாவருக்கும் தவறாகவே தெரிந்திருக்கிறது.

என்னடி பண்ணி வச்சிருக்க :

என்னடி பண்ணி வச்சிருக்க :

அன்று வழக்கம் போல எட்டு மணிக்கு வீட்டிற்கு திரும்பினான். வழக்கத்தை விட எதோ வித்யாசமாக பட்டது. வீட்டில் நிறைய ஆட்கள் இருந்தார்கள். வெளியில் உறவுக்கார பெண்ணின் ஸ்கூட்டி நின்றிருந்தது.

ஐயையோ சொன்னமாதிரி எதாவது பண்ணி தொலச்சுட்டாளா? என்று பதறியடித்துக் கொண்டு உள்ளே ஓடினேன்.

நான் போறேன் :

நான் போறேன் :

வாங்க மச்சான்.... என்று வரவேற்றார் தங்கையின் கணவர் தங்கை,தங்கையின் கணவர் குடும்பம் என ஒரு பட்டாளமே வந்திருந்தது. ஹாலில் மனைவியைக் காணவில்லை அம்மாவை தனியாக அழைத்தேன். என்னாவாம்? எதுக்கு வந்திருக்காங்க அவ எங்க?

உன் பொண்டாட்டி தான் போன் போட்டு வர சொல்லியிருக்கா என்னுன்னு கேளு என்று கிசுகிசுத்தார்.

கணவன்கள் எல்லாம் பாவம் பாஸ் :

கணவன்கள் எல்லாம் பாவம் பாஸ் :

ஐந்து நிமிடம் கதவைத் தட்டிய பிறகு அறையின் கதவைத் திறந்தாள். என்ன பைத்தியம் பிடிச்சு போச்சா ஏன் இப்டி பண்ற அம்மாட்ட சொல்லி சொல்ல சொல்லிருக்கேன்னு சொன்னேன்ல அப்பறம் எதுக்கு இந்த தேவையில்லாத வேலையெல்லாம் பாக்குற....

உங்களுக்கு நான் முக்கியமா அவ முக்கியமா? என்னடி இது கேள்வி.... அது யாரு நம்ம வீட்டுப் புள்ள அதுக்கு எதாவது ஒண்ணுனா நாம தான் போய் நிக்கணும். அப்போ உங்களுக்கு நான் வேண்டாம்ல அப்போ நான் போறேன் அவள ரெண்டாந்தாரமா கட்டிட்டு சந்தோசமா இருங்க நான் போறேன் என்று பெட்டியை தூக்கினாள்.

சினிமா :

சினிமா :

கீழே ஆட்கள் எல்லாம் உட்கார்ந்திருக்க மேல் அறையில் இப்படி கத்துவது அப்படியே கேட்டிருக்கும்.... ஆனால் என்ன செய்ய எதுவும் சொல்ல முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அவள் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்திருக்கிறாள்.

குழந்தை இல்லை என்ற காரணத்தை சொல்லி எங்கே கணவர் தன்னை விட்டுச் சென்று விடுவோரா என்று பயம் கொஞ்சம் கொஞ்சமாய் அவளை கொன்றிருக்கிறது. சினிமா பானியில் கட்டியணைத்து சமாதானம் சொல்லவோ அல்லது என் வாழ்க்கையை இனி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று டேக் இட் ஈஸி பாலிசி போல அமுதா என்னிடமிருந்து விலகிச் செல்லவோ முடியவில்லை.

என்ன செய்வதென்று தெரியமால் அவளது கூச்சலை கட்டுப்படுத்த அறைந்துவிட்டேன். அதன் பிறகு அமுதா எழுந்தறிக்கவேயில்லை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Husband Shares His Marriage Life

Husband Shares His Marriage Life
Story first published: Monday, April 23, 2018, 16:03 [IST]
Desktop Bottom Promotion