For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சயிண்டிஸ்ட் நித்தியானந்தாவின் ஆரம்பக் கால வாழ்க்கை எப்படி இருந்தது தெரியுமா?

|

சமீப தினங்களாக இன்டர்நெட்டில் இந்தியர்கள் நார்த் இந்தியா, சவுத் இந்தியா என்ற பிரிவினை இல்லாமல் ஒன்று சேர்ந்து ட்ரால் செய்து ட்ரெண்ட் செய்து வரும் வீடியோ #NithiSwag. ஆமாம், ஐன்ஸ்டீன் கூறிய E = Mc2 என்ற கூற்று தவறு என்று ஒரு பெரும் விளக்கவுரையை கூறி ட்ரெண்ட் லிஸ்டில் நுழைந்தார் நித்தியானந்தா.

அதுவரை அட்மின் பயலே என்றே டெம்ப்ளேட் வைத்து துவைத்துக் கொண்டிருந்த மீம் கிரியேட்டர்களும் பழைய பேஷண்டை டிஷ்சார்ஜ் செய்துவிட்டு, இந்த புதிய பேஷன்ட்டுக்கு அடிமிஷன் போடுங்க என்று வேட்டியை மடிச்சுக் கட்டிக்கொண்டு களம் புகுந்துள்ளனர்.

Lesser known facts and Early life of Paramahamsa Nithyananda.

Image Source: tapatalk

சர்ச்சை மேல் சர்ச்சை எழுந்தாலும்... எதையுமே சட்டைசெய்து கொள்ளாது... ஆட்டோ கேப்பில் ஒரு சயிண்டிஸ்ட் ஆகியிருக்கிறார் நித்தியானந்தா...

யாரு சாமி இவர்... இவரு ஆரம்பக் காலத்துல என்னப்பண்ணிட்டு இருந்தார்... அத தெரிஞ்சுக்கிட்டே ஆகணும்னு நினைக்கிற ஆள் நீங்களா இருந்தா... வாங்க.. இது உங்களுக்கான தகவல்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிறப்பு!

பிறப்பு!

1978ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதி, சிவனின் ஜோதி வடிவமாக கருதப்படும் திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழ்ந்து வந்த அருணாசலம் மற்றும் லோகநாயகி எனும் தம்பதியினருக்கு இரண்டாவதாக பிறந்த குழந்தை தான் நித்தியானந்தா.

ராஜசேகரன்!

ராஜசேகரன்!

நித்தியானந்தாவின் இயற்பெயர் ராஜசேகரன் என்று அறியப்படுகிறது. ராஜசேகரன் தனது இளம் பருவத்தில் ராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் ரமண மகரிஷி போன்றவர்களை தனது மானசீக குருவாக பாவித்துக் கொண்டார் என்றும் இவரது இணையதள குறிப்புகள் மற்றும் இவரது சீடர்கள் மூலம் அறியப்படுகிறது.

12 வயதில்!

12 வயதில்!

ராஜசேகரன் தனது 12வது வயதிலேயே குண்டலினி சக்தி எழுதும் ஆற்றம் பெற்றார் என இவரது வாழ்க்கை வரலாற்று புத்தகங்களில் கூறப்படுகின்றன. இவர் ஒருமுறை ரஞ்சிதா முதலிய தனது அயல்நாட்டு சீடர்கள் எல்லாம் வைத்துக் கொண்டு தரையில் இருந்து குதித்து காற்றில் பறக்கிறேன் என்றெல்லாம் முயற்சி செய்தவர் என்பதை நாம் மறந்துவிடவில்லை என்பதை இங்கே குறிப்பிட கடமை பட்டிருக்கிறோம்.

பாதயாத்திரை!

பாதயாத்திரை!

ராஜசேகரன் பாதயாத்திரை மேற்கொண்டு நாட்டில் உள்ள அனைத்து ஆன்மீக மடங்களுக்கும் சென்று அவர்களுடைய செயற்பாடுகளை ஆராய்ந்து வந்தார் என்றும், இமயமலைக்கு சென்று கடுமையான தவங்கள் எல்லா மேற்கொண்டார் என்றும் இவரை குறித்து எழுதப்பட்டிருக்கும் சில புத்தங்களில் இருந்து அறிந்துக் கொள்ள இயல்கிறது.

Most Read: ஜாதகத்துல மொத்தமே இந்த 4 வகைதானாம்... அதுல நீங்க எதுல பிறந்தீங்கன்னு தெரிஞ்சிக்கோங்க...

பெயர்மாற்றம்!

பெயர்மாற்றம்!

மேலும், இமயமலையில் இருந்து ஒரு பெரிய சாமியார் தான் ராஜசேகரனுக்கு பரமஹம்ச நித்தியானந்தா என்ற பெயரை சூட்டினார் என்றும் கூறுகிறார்கள். ராஜசேகரன் நித்தியானந்தாவாக பெயர் மாற்றம் கொண்ட பிறகு தான், காவிரி நதிக்கரை அருகே அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்க துவங்கினாராம். இதைத்தொடர்ந்து தான் கர்நாடகத்தில் இருக்கும் தனது ஆசிரமம் ஒன்றையும் துவங்கி இருக்கிறார் நித்தியானந்தா.

முக்தி!

முக்தி!

இந்தியா முழுக்க தான் மேற்கொண்ட ஆன்மீக பயண பாதயாத்திரையின் போது ராஜசேகரன் இரண்டாயிரம் மைல்களுக்கும் மேல் கால்கடுக்க நடந்து சென்றதாக இவரது வரலாறு கூறுகிறது.

மேலும், இமயமலையில் கடுமையான தவ நிலைகள் மேற்கொண்ட பயனாக ராஜசேகரன் ஞான அனுபூதி முக்தியை 2000ம் ஆண்டு ஜனவரி 1ம் நாள் பெற்றதாகவும் அந்த சுய வரலாற்று தகவல்கள் கூறுகின்றன.

நித்திய ஆனந்தம்!

நித்திய ஆனந்தம்!

தனது தவ நிலைகளினால் பெற்ற நித்திய ஆனந்தத்தை, தன்னுள் நிகழும் அந்த அற்புதத்தை மனித ஜீவராசிகள் அனைவருக்கும் அளிக்க வேண்டும் என்பதற்காக தான் தியான பீடம் என்ற சேவையை துவங்கினாராம் நித்தியானந்தா.

கிளைகள்!

கிளைகள்!

நித்தியானந்தா துவங்கிய ஆன்மீக நிறுவனம் 33 க்கும் மேற்பட்ட நாடுகளில் 1200க்கும் மேற்பட்ட கிளைகளுடன் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. சில குறிப்புகள் 21 நாடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளைகளுடன் இயங்கி வருவதாக தெரிவிக்கின்றன.

Most Read: குளிர்காலத்தில் தம்பதியர்கள் செக்ஸ் கொண்டால் நடக்கும் நன்மை அறிவீர்களா?

சர்ச்சைகள்!

சர்ச்சைகள்!

திருவண்ணாமலையில் லிங்க பிரதிஷ்டை, ஆயிரக்கணக்கான அயல்நாட்டு பக்தர்களின் வருகை என நித்தியானந்தாவின் வாழ்க்கை ஜோராக தான் போய் கொண்டிருந்தது. அப்போது தான் நித்தியானதாவும் ரஞ்சிதாவும் ஒன்றாக கலவியில் ஈடுபடும் காணொளிப்பதிவு ஒன்று பிரபல செய்தி தொலைக்காட்சியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்களும் எந்தவிதமான சென்சார் கட்டும் இல்லாமல் அதை அப்படியே ஒளிப்பரப்பினார்கள்.

அட்மின்?!

அட்மின்?!

இப்போது போல, அது நான் அல்ல, என் அட்மின் என சொல்லிக்கொள்ளும் சொல்லாடல் வழக்கம் அப்போது இல்லாத காரணத்தால், அது மார்ஃபிங் என்று கூறி தன் தரப்பு நியாத்தை நீதிமன்றத்தில் எடுத்துரைத்தார் நித்தியானந்தா. ஆனால், அதுவும் பொய்... அந்த வீடியோ உண்மையானது தான் மார்ஃபிங் எதுவும் செய்யப்படவில்லை என்று சமீபத்தில் தான் நிரூபணம் ஆனது.

 வெர்ஷன் 2.O

வெர்ஷன் 2.O

இப்போது... இன்னும் ஃபாரின் கஸ்டமர்களை அதிகம் ஈர்க்க வேண்டும் என்பதால் நித்தியானந்தா ஐன்ஸ்டீன் போன்ற அறிவியலாளர்களின் கூற்றுகள் தவறு என்றும், நானே பிரபஞ்சம்.. எல்லாரும் என்னை பின்தொடர்ந்து வாருங்கள்... சிங்கம், புலியை சமஸ்கிரதம் பேச வைக்கிறேன்... ஆகாயத்தில் பறக்க வைக்கிறேன் என்று கூறிக் கொண்டு வருகிறார்.

சயின்ஸ் மட்டுமின்றி நித்தியானந்தா ஒரு ஃபேஷன் ஃப்ரீக் என்பதையும் நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டும். எனவே, தொடர்ந்து நித்தியின் இந்த பல்வேறு கெட்டப்புகளையும் கண்டுகளியுங்கள்.

#1

#1

டெக்னோ சாமியார் என்று சொன்னால் தகும் தானே.... கையில் மொபைல் போனுடன் அடக்க முடியாத அளவிற்கு அப்படியொரு ஆனந்தம்.

#2

#2

எல்லாமே மேட்சிங்காக இருக்க வேண்டும் என்ற மறைமுக கட்டளை இருக்கும் போல. உடைக்கு மேட்சிங்காக தலைப்பாகை. அதிலிருக்கும் டாலர் கூட. லைட் கலரில் உடை இருப்பதால் டார்க் நிறத்தில் கழுத்துக்கான மாலையை தேர்ந்தெடுத்திருக்கிறார்.

இதில் வித்யாசத்தை காட்ட வேண்டும் என்பதற்காக எப்போதும் ருத்ராட்சை மாலையுடன் காட்சியளிக்கும் நித்யானந்தா இந்த முறை சற்று பட்டையான வடிவத்தில் மாலை அணிந்திருக்கிறார்.

#3

#3

இது தான் நார்மல் டேஸ் கெட்டப். அள்ளி முடிந்து கொண்டை போட்டுக் கொண்டு ஒரேயொரு ருத்ராட்சை மாலையுடன் பெரும் புன்னைகையுடன்.

#4

#4

அமைதி அமைதி அமைதிக்கெல்லாம் அமைதி என்று நம்மை சாந்திபடுத்தும் லுக். இந்த கெட்டப் போடும் போது இளவயது என்பதால் ஃப்ரீ ஹேர் போலும்!

#5

#5

அடுக்கடுக்கான ருத்ராட்சை, புலித்தோலில் சிம்மாசனம்,கம்பீர பார்வையுடன் உட்கார்ந்திருக்கும் நித்யானந்தாவின் தலைப்பாகை தான் இதில் ஹைலைட். அருகில் அவர் படம் பொறித்த டீ கப்பும், செங்கோலும் இருப்பதை பாருங்கள்.

#6

#6

புலித்தோலை சிம்மாசனத்தில் மட்டும் ஏன் போட வேண்டும் இதோ என் உடலிலும் போட்டுப்பார்க்கிறேன் என்று களத்தில் இறங்கிய போது.

அணிந்திருக்கும் ஆடையை விட இதற்கு பலம் சேர்ப்பது கையில் பிடித்திருக்கும் மணிகள் கட்டிய கம்பும், உடலில் சுற்றிக் கொண்டிருக்கும் மணியும் தான்.

#7

#7

கைலாய மலையிலிருந்து அந்த பரமசிவனே..... இதெல்லாம் போங்கு பாஸ் என்றெல்லாம் சொல்லாமல் படத்தை மட்டும் இரண்டு நொடிகள் உற்றுப்பாருங்கள்.

#8

#8

நாங்க அவுட்டிங் போனா கூட இந்த அவுட்ஃபிட் வோடத்தான் போவோம் மொமண்ட். ப்ளீஸ் யாரும் நித்யானந்தா அணிந்திருக்கும் செருப்பை மட்டும் கவனிக்க வேண்டாம்.

#9

#9

பலே பலே பாகுபலி..... லுக். தலைப்பாகைக்கோ ஹேர் ஸ்டைல் செய்யவோ நேரமில்லாத காரணத்தினால் இன்று ஒரு நாள் நீங்கள் இந்த கோலத்தில் தரிசிக்கலாம்.

#10

#10

மலர்களே.... மலர்களே இது என்ன கனவா என்று மனதில் பாடிக்கொண்டே இந்த படத்தை பாருங்க..... மலர் அலங்காரத்தில் காட்சி தரும் நித்யானந்தா.

மாலை அணிந்தால் மட்டும் போதாது கழுத்தில் இடம் நிறைய மிச்சமிருக்கிறதே என்று பெரிய பெரிய தங்க மாலைகளையும் சேர்த்து அணிந்திருக்கும் அழகைப் பாருங்க மக்கா.....

#11

#11

தரையில் பாய் விரித்து அதற்கு மேல் ஒரு மேடை அதற்கு மேல் சின்ன மெத்தை அதனை காவித் துணியினால் பக்காவாக க்ளோஸ் செய்து தியானம் செய்கிறார். தியானம் செய்யும் போதும் பெரிய ருத்ராட்ச மாலை அவசியம் யாராவது கெக்க பெக்கே என்று சிரித்தால் கமண்டலத்தில் இருக்கும் நீரைத் தெளித்து சாபம் அளித்து விடுவார் ஜாக்கிரதை.

#12

#12

இந்த கண் சாந்தமாகவும் பார்க்கும் கொடூரமாகவும் பார்க்கும். இப்போ லஞ்ச் டைம் இந்த கைய அன்னத்துல தான் கை வைப்பேன் என்று காண்பித்த போது.....

#13

#13

என்ன வாழ்க்கைடா என்று ஆனந்தத்துடன் கேட்ட போது..... மன்னா ஒண்ணு குறைகிறதே....

என்னா?

தலைப்பாகை....

அதான் ஹேர் ஸ்டைலையே தலைப்பாகையே மாற்றிவிட்டோமே இதற்கு மேலும் தலைப்பாகை தேவை தானா?

நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

#14

#14

நித்யானந்தா மட்டுமில்ல நம்ம செல்ஃபி எடுத்தாக்கூட மூஞ்சி இப்டித் தான் இருக்கும். அதுக்குத்தான் ரொம்ப க்ளோஸப் ல வச்சு படம் பிடிக்காதீங்கனு சொல்றது. இப்ப நமக்கே பகீர்னு இருக்கா இல்லையா.

#15

#15

தீப்பிளம்பாக அவதரித்திருக்கும் நித்யானந்தா . ஒரு கையில் சவுக்கு இன்னொரு கையில் உடுக்கையுடன் கூடிய சூலாயுதம். மேக்கப் எல்லாம் ஓகே... அதென்ன உடல் முழுவதும் ஏதோ மூக்குப் பொடி டப்பா போல....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Lesser known facts and Early life of Paramahamsa Nithyananda.

Lesser known facts and Early life of Paramahamsa Nithyananda.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more