For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

9 வருஷத்துக்கு முன்ன முள்ளிவாய்க்கால் எப்படி இருந்துச்சு... இத படிச்சு பாருங்க... ரத்த கண்ணீரே வரும்

9 வருடங்களுக்கு முன் ஈழத்தில் நடந்த போரில் மண்ணை காப்பதற்கான இறந்தவர்களுக்கு நினைவு செலுத்தும் இனஅழிப்பு நாள் மே 8 அனுசரிக்கப்படுகிறது.

|

9 வருஷத்துக்கு முன்ன முள்ளிவாய்க்கால் எப்படி இருந்துச்சு... இத படிச்சு பாருங்க... ரத்த கண்ணீரே வரும்... தமிழ் உணர்வுள்ள ஒவ்வொருவருக்கும் இதை படித்தால், அந்த போரின் தழும்புகள் காயங்களாக கண்முன் வந்து போகும்.

ஒரு காலத்துல அவங்களோட வாழ்க்கை அவ்வளவு அழகு. சுற்றித் திரிய வயல்வெளி. அப்படியே பசியெடுத்தால், யாருக்கும் தெரியாம பறிச்சு சாப்பிடறதுக்காகவே காய்ச்சு தொங்குற மாமரங்கள். ஓங்கி வளர்ந்த பனை மரங்கள். அந்த காத்தோட கலந்த மண் வாசம், செம்மண் புழுதி, கூரை வீடுகள், அதுக்கு முன்னாடி டவுசர் போட்டு கிள்ளி தாண்டி விளையாடும் வாண்டுகள், கிணறு, ஆடு, மாடு, அண்ணன், தம்பி, சொந்தம், பந்தமென்று ஒருவேளை சாப்பிட்டாலும் வயிறு மட்டுமில்லங்க. மனசும் சேர்ந்தே நிரம்பியிருந்தது அவர்களுக்கு...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெறும் நினைவுகள்

வெறும் நினைவுகள்

ஆனால் அப்போது தெரியாது அவர்களுக்கு ஒரு காலத்தில் இதெல்லாம் வெறும் நினைவுகளாக மட்டும்தான் இருக்கப்போகிறது என்று.

கடல் கரைகளில் சின்ன சின்ன நண்டுகள் வந்து மணலில் ஓவியங்கள் வரைந்து விளையாடிக் கொண்டிருக்கும். அப்படி விளையாடிக் கொண்டிருக்கும்போது, கடல் அலைகள் வேகமாக வந்து, என்னோடு வா என்று நண்டை தன் போக்கில் அடித்து கடலுக்குள் இழுத்துச் சென்றுவிடும்.

வாழ்க்கை

வாழ்க்கை

வாழ்க்கை என்பது சிலருக்கு வரமாகவும் சிலருக்கு சாபமாகவும் அமைந்துவிடுகிறது என்று யாராவது சொல்லக் கேட்டிருப்போம். அது நமக்கு வரமாக இருந்தால் மகிழ்ச்சிதான்.அதுவே சாபமாக அமைந்துவிட்டால்? இப்போதெல்லாம் இங்கிருப்பவர்களுக்கும் சரி, புலம் பெயர்ந்து போனவர்களுக்கும் சரி... மூன்று வேளை சாப்பிட்டாலும்கூட, வயிறும் நிரம்புறதில்ல... மனசும் நிரம்பறதில்ல... இன்னும் சொல்லப்போனா போருக்குப்பின் உயிரோடு இருக்கும் பலரும் அவர்களுடைய கடந்த கால நினைவுகளால் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இனப்போராட்டம்

இனப்போராட்டம்

ஒரு இனம் கிட்டதட்ட அரை நூற்றாண்டு காலமாக அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த இனம் அந்த ஈழ மண்ணில் கிட்டதட்ட அழிந்து ஒன்பது ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. எத்தனை உயிர்கள்? எத்தனை சொத்துக்கள்? தோட்டம், சொந்தம், பந்தம் என சேர்த்து வைத்த அத்தனை சந்தோஷங்களையும் ஒரே ஒருநாள், இரவோடு காணாமல் போகுமென்று யாருக்குத் தெரியும்?

மனதின் ஏக்கம்

மனதின் ஏக்கம்

ஈழ மண்ணில் கிட்டதட்ட இனமே அழிக்கப்பட்ட பின், வெறும் ஞாபகங்கள் மட்டுமே வாழ்க்கையாகிப் போனது. இவையெல்லாம் வெறும் கனவாக மட்டும் இருந்துவிடக்கூடாதா என அந்த மண்ணில் வெறும் சதைக்கூடுகளாக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிற மக்கள் நினைத்து நினைத்து ஏங்குகிறார்கள். செதுகு்கிய சிற்பங்களே சிற்பியைத் தேடி அலைவது போல, அந்த நிலங்க்ள அத்தனையும் கவனிப்பாரற்றுப் போய் கதறிக் கொண்டிருக்கிறது.

இழப்பை சரி செய்வது எப்படி?

இழப்பை சரி செய்வது எப்படி?

இதற்கெல்லாம் நாம் என்ன செய்யப் போகின்றோம்?... இந்த இழப்புக்களை எந்த வகையில் நாம் சரிசெய்யப்போகிறோம். பிறந்த, தன்னை முத்தமிட்டு வளர்த்தெடுத்த மண்ணுக்காகவே விதையாகிப் போன மறவர்களுக்கு வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் என்ன பதில் சொல்லப் போகிறாம். இதற்கு மேலும் இழப்பதற்கு அவர்களிடம் வேறு என்ன இருக்கிறது? இனிமேல் இழப்பதற்கு இந்த தமிழ்ச் சமூகத்திடம் சக்தியும் இல்லை. ஆனாலும் வாழ்ந்து தானே ஆக வேண்டும். வாழ்க்கை மிகவும் விசித்திரமானது.

வாழ்க்கை விசித்திரம்

வாழ்க்கை விசித்திரம்

ஒவ்வொரு எதிர்மறையான சூழலுக்கும் நம்முடைய இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்கான ஒரு நேர்மறைச் சூழல் ஒளிந்து கொண்டிருக்கும். அவர்களுடைய நம்பிக்கையும் எண்ணங்களும் மட்டுமே அவர்களுடைய வாழ்க்கையைத் தீர்மானிக்கப் போகின்றன. அவர்கள் எதிர்பார்க்கும் ஒரு வாழ்க்கையும் அதற்கான சூழலும் நாளைக்கே கூட அவர்களுடைய கைகளுக்குக் கிடைக்கலாம்.

தமிழன் என்ற உணர்வு

தமிழன் என்ற உணர்வு

தமிழன் என்ற உணர்வு இருந்தாலே போதும். உலகெங்கிலும் உள்ள ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையும் நம்மால் தூக்கி நிறுத்திவிட முடியும். தவறு செய்யாதவனே இருக்க முடியாது. தவறே செய்யாதவன் மனிதனாகவும் இருக்க முடியாது. உலகில் உள்ள ஒட்டுமொத்த தமிழனுக்குள்ளும் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். எங்களுடைய உரிமைகளை மீட்டெடுக்கும் வரை நாம் தமிழன் என்ற அடையாளத்தின் கீழ் ஒன்றுபட்டு இருக்க வேண்டும்.

மண்ணே பெரிது

மண்ணே பெரிது

உயிரைக் காட்டிலும் மானமே பெரிது, மண்ணே பெரிது என்று தன்னுடைய இன்னுயிர்களைத் தியாகம் செய்த, மான மாவீரர்களின் தியாகங்களுக்கு முன்பாக, வேறு எதுவுமே பெரிதல்ல.

இனமானம்

இனமானம்

எங்களுக்கு என்று ஒரு இனம் இருக்கிறது. அந்த இனத்துக்கென்று ஒரு தன்மானம் இருக்கிறது. ஒரு இனமான எங்களுடைய இலக்குகளைச் சென்றடைந்த பின், எங்களுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் ஆசைகளின் பிரகாசங்களை இந்த உலகமே உற்றுப் பார்க்கத்தான் போகிறது.

மொழி அடையாளம்

மொழி அடையாளம்

ஒரு மொழியை, அதன் அடையாளங்களை அழித்த சந்ததி என்று நம்முடைய அடுத்த சந்ததி நம்மைப் பார்த்து ஏளனமாய் கேள்வி கேட்பதற்கு முன்பாக நாம் விழித்துக் கொள்ள வேண்டும். தமிழன் அதை கண்டுபிடித்தான், இதை கண்டுபிடித்தான் என்று மற்றவர்கள் சொல்லும்போதென்னவோ கொஞ்சம் பெருமையாகத்தான் இருக்கிறது. இப்படியே வெறும் பெருமை பற்றியே மட்டும் பேசிக்கொண்டிருந்தோமானால் நாளைக்கும் வரலாறு தமிழைப் பற்றி பெருமையாகப் பேசுமேயொழிய, தமிழைப் பேசுவதற்கு அன்று யாருமே இருக்க மாட்டார்கள்.

இலக்கு

இலக்கு

நாம் எங்கே செல்ல வேண்டும். எதை அடைய வேண்டும் என்ற இலக்கு இருந்தால் மட்டும் போதாது. அதில் தெளிவும் இருக்க வேண்டும். எத்தனை தடவை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல. வீழ்ந்த ஒவ்வொரு முறையும் மீண்டு எழுந்து வந்தோமா என்பதுதான் முக்கியம். ஏனெனில் அதுதான் நமக்கு அடுத்த வெற்றியை நோக்கிய அசாத்திய திறமையை, நெஞ்சுரத்தை நமக்குக் கொடுக்கும்.

என்ன செய்ய வேண்டும்?

என்ன செய்ய வேண்டும்?

தன்னை தமிழன் என்று மார்தட்டி பெருமை கொள்ளும் ஒவ்வொரு தமிழனின் மனசாட்சிக்கும் தெரியும். மே 18 ஆம் நாளின் மீது ஒழுகி வடியும் ரத்தம் நம்முடையது என்றும் அது உறைந்து போவதற்குள் நாம் உறங்கிவிடாமல் விழித்துக் கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு தமிழனுக்கும் அவன் மனசாட்சிக்கும் தெரியும். மறைந்து போன மானமான தமிழர்களின் கனவுகளை இந்த நொடி முதல் நம் நெஞ்சில் சுமந்து, அதை அடைவதற்கான பயணத்தை தொடர்வோம். அதுவே நாம் அவர்களுக்கு செய்யும் அஞ்சலியாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Facts And Feelings About Mullivaikaal

The events at Mullivaikal mark the climax of the civil war in Sri Lanka, the most vicious of the battles where the lives of poor civilians were totally ignored.
Story first published: Friday, May 18, 2018, 20:09 [IST]
Desktop Bottom Promotion