மணப்பெண், மணமகன், விருந்தினர் என அனைவரும் பிறந்த மேனியாக கலந்துக் கொண்ட திருமணம்!

மணப்பெண், மணமகன், விருந்தினர் உட்பட அனைவரும் பப்பி ஷேமாக கலந்துக் கொண்ட திருமண விழா!

பல் மருத்துவர் அன்கா அர்செனா (29) தனது மென்பொருள் மேம்பாட்டாளர் காதலரான வேலன்டைனை (34) பர்த்டே சூட்டில் சர்டினா பீச்சில் திருமணம் முடித்து, சர்வதேச ஊடங்களில் தங்கள் திருமண விழா இடம்பெற வழிவகை செய்திருக்கிறார்.

Dentist Anca Arsene got married completely naked - along with her groom and guests!

Image Source: PA REAL LIFE

இதில் கூடுதல் சிறப்பு என்னவெனில், இவர்கள் திருமண விழாவில் கலந்துக் கொண்ட விருந்தினர்களும் பிறந்தமேனியாக தான் கலந்துக் கொண்டனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிறந்தமேனியாக!

பிறந்தமேனியாக!

திருமணம் என்றவுடன் மணமகன் / மணமகள் தேர்வுக்கு பிறகு அனைவருக்கும் சிக்கலாக அமைவது திருமண நாளில் என்ன உடை உடுத்துவது என்பது. பலருக்கும் இது வாழ்வில் ஒரே ஒருமுறை நடக்கும் நிகழ்ச்சி. ஆகவே, அதில் சிறப்பாக தோன்ற வேண்டும் என்ற ஆவல் அதிகமாக இருக்கும்.

இத்தாலியில்...

இத்தாலியில்...

ஆனால், இந்த பல் மருத்துவர், மென்பொருள் மேம்பாட்டாளர் ஜோடியோ வித்தியாசமாக பிறந்த மேனியாக திருமணம் செய்து, உலக செய்திகளில் இடம்பிடித்துள்ளனர். மேலும், இவர்களது திருமணம் இத்தாலியன் தீவான சர்டியான் கடற்கரையில் நடைப்பெற்றது. இவர்கள் தங்கள் திருமணம் தீர்மானத்தையும் பிறந்தமேனியாக முன்மொழிந்துள்ளனர்.

அற்புதமான உணர்வு!

அற்புதமான உணர்வு!

மணப்பெண்ணான அன்கா ஒரு இயற்கை ஆர்வலர் என அறியப்படுகிறார். இவரை இந்த இயற்கை ஆர்வலராக மாறியதே இவரது காதலர் வேலண்டைன் தான் என்றும் கூறுகிறார்கள். இவர் தங்கள் திருமண வைபவத்தின் போது நிர்வாணமாக இருந்தது ஒரு அற்புதமான உணர்வு என்று கூறி இருக்கிறார். அது அமைதியான மற்றும் மனநிறைவான சூழலாக இருந்தது என்றும் தெரிவித்திருக்கிறார்.

தூய்மை!

தூய்மை!

இது புனிதமானது, தூய்மையானது மற்றும் மிகவும் நெருக்கமாக உணர வைத்தது. நாங்கள் ஒருவரை ஒருவர் உண்மையாக ஏற்றுக் கொண்டோம். அதில் எங்களை மறைக்கவோ, தடுக்கவோ எதுவும் இல்லை, என்று மேலும் தங்கள் திருமண நாளை பற்றி உணர்சிப்பரவசமாக கூறி இருக்கிறார் அன்கா.

விருந்தினர்களும்!

விருந்தினர்களும்!

அன்கா மற்றும் வேலண்டைன் என்று மட்டுமின்றி, இவர்களது திருமணத்திற்கு இரண்டே இரண்டு நண்பர்களை மட்டும் விருந்தினர்களாக அழைத்திருந்தனர். அவர்கள் இருவரும் கூட இந்த திருமண வைபவத்தில் நிர்வாணமாக தான் பங்கெடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வேண்டுகோள்!

வேண்டுகோள்!

எங்கள் திருமணம் நிர்வாண கோலத்தில் தான் நடக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டோம். மேலும், திருமண விழாவில் பங்கெடுத்துக் கொள்வோரும் நிர்வாணமாக தான் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தோம்.

பிறர்...

பிறர்...

எங்கள் இரு நண்பர்களை தவிர வேறு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இதை சௌகரியமாக உணரவில்லை. ஆகையால், எங்கள் இரு நண்பர்கள் முன்னிலையில் நிர்வாணமாக எங்கள் விருப்பத்திற்கு ஏற்ப திருமணம் செய்துக் கொண்டோம்.

இன்னொரு முறை...

இன்னொரு முறை...

மேலும், பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் சூழ இன்னொரு முறை லீகலாக, நார்மலாக திருமணம் செய்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த ஹேப்பி ஜோடி. ஆனால், அதற்கு முன் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப திருமணம் நடக்க வேண்டும் என்று ஒருமுறை நிர்வாண திருமணமும் செய்திருக்கிறார்கள்.

முதல்முறை...

முதல்முறை...

அன்கா பல் மருத்துவராக இருக்கும் அதே தருணத்தில் இயற்கை மீது பெரும் ஆர்வம் கொண்ட நபராகவும் இருக்கிறார். இவர் naturismதிற்கு அறிமுகமான போது தான் தனது காதலர் வேலண்டைனை சந்தித்திருக்கிறார். அப்போதே அன்காவிற்கு பெரும் ரசிகராக இருந்திருக்கிறார் வேலண்டைன்.

டேட்டிங்!

டேட்டிங்!

தனது மருத்துவ கல்லூரி நண்பர்கள் ஏற்படுத்தியிருந்த ஒரு நிகழ்வில் தான் இவர்கள் முதல் முறை டேட் செய்திருக்கிறார்கள். கடந்த 2008ம் ஆண்டில் இருந்து இவர்கள் உறவில் இருந்து வருகிறார்கள்.

ஆரம்பத்தில் இருந்தே இவர்கள் வீட்டில் நிர்வாணமாக இருப்பதையும், நிர்வாண கடற்கரைகளுக்கு சென்று வருவதையும் வேண்டி, விரும்பி செய்து வந்திருக்கிறார்கள்.

ஆரம்பத்தில்...

ஆரம்பத்தில்...

அன்கா இப்போது பாரிஸில் வசித்து வருகிறார். ஆரம்பத்தில் பொது இடங்களில் நிர்வாணமாக இருப்பதை அசௌகரியமாக இருந்த அன்கா, நாட்கள் செல்ல, செல்ல அதற்கு தன்னை விருப்பத்துடன் உட்படுத்திக் கொண்டார். ஆயினும், எப்போதும் தற்காப்புடன் தான் இருப்பேன் என்றும் தெரிவித்திருக்கிறார் அன்கா.

சிறந்த பகுதி!

சிறந்த பகுதி!

வேலண்டைன் மற்றும் அன்கா ஐரோப்பியாவில் இருக்கும் பெரும்பாலான நிர்வாணமாக உலாவ அதிகாரப்பூர்வ அனுமதி கொண்டிருக்கும் கடற்கரைகளுக்கு சென்று வருகிறார்கள். மேலும், இவர்கள் பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் அயர்லாந்து போன்ற நாடுகள் இதற்கு உகந்த பகுதிகள் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

திட்டமிட்டு!

திட்டமிட்டு!

ஒருக்கட்டதில் இவர்களது நட்புறவு, காதலாக மலர்ந்தது. அதிலிருந்து வேலண்டைன் திருமணம் செய்துக் கொள்ள பிரபோஸ் செய்த போதே, தங்கள் திருமணம் இப்படியாக தான் நடக்கக் வேண்டும் என்று இருவரும் திட்டமிட்டுனர். அதே போல திருமணமும் செய்து இன்டர்நெட்டில் வைரலாகினர் அன்கா வேலண்டைன் ஜோடி.

Image Source: PA REAL LIFE

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion