For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஃபீஸ் கட்ட முடியாததால் தவறான பாதைக்கு திரும்பிய சட்டக் கல்லூரி மாணவி - # Her Story

By John
|

கார்டி பி, அம்பர் ரோஸ் மற்றும் லேடி காகா போன்றவர்கள் ஸ்ட்ரிப்பராக பணியாற்றுவது ஒரு துறையில் வெற்றியாளராக மாற தடையானது அல்ல என்று ஏற்கனவே நிரூபித்தவர்கள்.

Blondie Became a Stripper To Pay Her College Fee!

Image Source: Blondie_Australia / Youtube

இப்போது அதே துறையில் மற்றுமொரு இளம் பெண் காலடி எடுத்து வைத்து பிரபலமாகியும் இருக்கிறார். அடல்ட் எண்டர்டெயின்மென்ட் துறையில் மிக இளம் வயதில் வந்தவர் என்று இந்த 19 வயது இளம்பெண்ணை குறிப்பிடுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிளண்டி!

பிளண்டி!

பிளண்டி, மாபெரும் ரசிகர் கூட்டத்தை தன் பின்னே வைத்திருக்கும் டூர் ஷோ கேர்ள் என்று அடல்ட் எண்டர்டெயின்மென்ட் துறையினர் கூறிவருகிறார்கள்.

பொதுவாக, பணத்திற்காகவும் ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவிக்கவும் அடல்ட் எண்டர்டெயின்மென்ட் துறைக்குள் பெண்கள் நுழைவதுண்டு. ஆனால், அந்த சமயத்தில் இவர்கள் தங்கள் குடும்பம் மற்றும் நட்புகளை இழந்துவிடுவார்கள்.

Image Source: blondie_australia / Instagram

உதவி!

உதவி!

இங்கே வியப்பு என்னவெனில், ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் பிளண்டி எனும் இந்த இளம்பெண்ணுக்கு அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்களே உறுதுணையாக இருந்து, அவருக்கான பல ஏற்பாடுகளை செய்துக் கொடுத்து வருகிறார்கள்.

பிளண்டி பல்கலைகழகத்தில் சட்டம் பயின்று வரும் மாணவி. தான் படித்து பட்டப் படிப்புக்கு ஃபீஸ் கட்டவும், இதர செலவுகளை சமாளிக்கவும் தான் பிளண்டி இந்த ஸ்ட்ரிப்பர் துறைக்குள் காலடி எடுத்து வைத்தார்.

Image Source: blondie_australia / Instagram

விளம்பரம்!

விளம்பரம்!

ஒரு நாள் டிவி பார்த்துக் கொண்டிருந்த போது லோக்கல் ஸ்ட்ரிப் கிளப்பில் இளம்பெண்கள் தேவை என ஒரு விளம்பரத்தை கண்டு, அதன்மேல் ஏற்பட்ட திடீர் ஈர்ப்பால் அதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முடிவு செய்திருக்கிறார் பிளண்டி.

Image Source: blondie_australia / Instagram

மெல்பேர்னில்...

மெல்பேர்னில்...

ஒருமுறை மெல்பேர்ன் சென்ற பொழுது, ஒரு டாக்ஸியில் இருந்த விளம்பரத்தை வேடிக்கை பார்த்தவாறு நின்றுக் கொண்டிருந்திருந்தேன். அப்போது அந்த கிளப்பில் இருந்து ஷிப்ட் முடிந்து வெளியே வந்த பெண் ஒருவர், சாலையில் வீடின்றி வசித்து வரும் ஹோம்லெஸ் நபர் ஒருவருக்குள் ஐம்பது ஆஸ்திரேலிய டாலர்களை உதவியாக கொடுத்து சென்றார்.

ஒருவேளை தானும் இந்த வேலையை செய்தால், இப்படியாக உதவும் அளவிற்கு உயரலாமோ என்று கருதினேன், என்று தன்னுள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வை குறிப்பிடுகிறார் பிளண்டி.

Image Source: blondie_australia / Youtube

இணைந்தேன்..

இணைந்தேன்..

மறுநாளே அந்த கிளப்பிற்கு சென்று, தன்னை இணைத்துக் கொண்டேன் என்று பிளண்டி குறிப்பிடும் இந்த நிகழ்வு நடந்து ஓராண்டு காலம் ஆகிறது. இந்த ஓராண்டு காலத்தில் பிளண்டி ஸ்ட்ரிப் கிளப்ஸ், க்ரூஸ் கப்பல்களில் நடக்கும் விழாக்கள், ப்ரைவேட் நிகழ்வுகள் மற்றும் கேளிக்கை விருந்துகளில் கலந்துக் கொண்டு ஷோ-கேர்ளாக வேலை செய்திருக்கிறார்.

Image Source: blondie_australia / Youtube

உலகம் சுற்றும் இளைஞி!

உலகம் சுற்றும் இளைஞி!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிளண்டி ஆஸ்திரேலியா மற்றும் மட்டுமின்றி, கடந்த ஓராண்டு காலத்தில் உலகின் பல்வேறு நாடுகளிலும் ஷோ-கேர்ளாக பணிபுரிந்திருக்கிறார். சென்ற ஆண்டு லண்டன் சென்றதாக கூடும் பிளண்டி, நிறைய அலுவலக கேளிக்கை நிகழ்வுகளிலும் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறேன் என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.

Image Source: blondie_australia / Youtube

விருது!

விருது!

ஒரே ஆண்டில் அடல்ட் எண்டர்டெயின்மென்ட் துறையில் பெரும் பிரபலமாக வளர்ந்திருக்கிறார் பிளண்டி. இவரை பெஸ்ட் ஃபீமேல் ஸ்ட்ரிப்பர் ஆஸ்திரேலியா என்ற விருதுக்கு பரிந்துரை செய்தனர். மேலும், மிஸ் நியூட் வேல்ர்ட் போட்டியில் பங்குபெறும் வாய்ப்பு கிடைக்கும் என்று ஆவலாக காத்திருப்பதாகவும் பிளண்டி குறிப்பிட்டிருக்கிறார்.

Image Source: blondie_australia / Youtube

ஒப்புதல்!

ஒப்புதல்!

மிக இளம் வயதில் இந்த அடல்ட் எண்டர்டெயின்மென்ட் உலகிற்குள் வந்துவிட்டேன். ஆனால், இதை தவறாக நான் கருதவில்லை. இதை எனக்கு தேவைப்படும் பணத்தை சம்பாதிக்க உதவும் வேலையாக மட்டுமே காண்கிறேன் என்றும் கூறி இருக்கிறார் பிளண்டி.

Image Source: blondie_australia / Youtube

சீனியர்கள்...

சீனியர்கள்...

என் வயதொத்த பெண்களும் ஷோ-கேர்ள்களாகவும், ஸ்ட்ரிப்பர்களாகவும் பணியாற்றுகிறார்கள். ஆனால், அவர்கள் ஹோம் கிளப்களில் மட்டுமே வேலை செய்கிறார்கள். என்னை போல டூர் செல்லும் அளவிற்கு ஷோ-கேர்ளாக யாரும் இல்லை. டூர் ஷோ கேர்ளாக இருப்பவர்கள் பெரும்பாலும் ஏழு வருடங்களாவது அனுபவம் இருக்கும் சீனியர்களாக தான் இருப்பார்கள்.

நான் பெரிதும் இப்போது டூர் ஷோ கேர்ள் வேலையை தான் செய்து வருகிறேன். இதனால் எனக்கு நிறைய உண்மையான நண்பர்களும் கிடைத்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார் பிளண்டி.

Image Source: blondie_australia / Youtube

சிட்னி!

சிட்னி!

பிளண்டி சிட்னியை சேர்ந்தவர். இவர் ஒரு இரவு ஷோ-கேர்ளாக செல்ல மூவாயிரம் அமெரிக்க டாலர்கள் வாங்குகிறார். இது இந்திய மதிப்பில் இன்றைய தேதியில் 1,40,461 ரூபாய் ஆகும். இவரை இன்ஸ்டாகிராமில் 91,000 பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள்.

தனக்கு நிறைய பரிசுகளும், திருமண ப்ரபோசல்களும் தினமும் வந்துக் கொண்டே இருப்பதாக பிளண்டி தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் தன் சட்டப்படிப்புக்காக இந்த ஸ்ட்ரிப்பர் துறையில் காலடி எடுக்க வந்த பிளண்டி, எதிர்பாராத அளவில் ஒரு வருடத்தில் ஆஸ்திரேலிய அடல்ட் எண்டர்டெயின்மென்ட் துறையில் பெரும் பிரபலமாக உருவெடுத்திருக்கிறார்.

Image Source: blondie_australia / Youtube

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Blondie Became a Stripper To Pay Her College Fee!

Blondie, is the teenager is at university studying for a law degree and got into stripping after needing some extra money.
Story first published: Thursday, October 4, 2018, 12:00 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more