For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏர் இந்தியா விமான பணிப்பெண் லெட்டரில் வெளிப்பட்ட பகீர் உண்மைகள்!

6 வருடமாக மேலதிகாரியால்... ஏர் இந்தியா விமான பணிப்பெண் லெட்டரில் வெளிப்பட்ட பகீர் உண்மைகள்!

|

பெயர் வெளியிடப்படாத ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தில் கடந்த பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் ஒரு பெண்... தனக்கு தொடர்ந்து ஆறு ஆண்டு காலமாக மேலதிகாரியால் நேர்ந்த செக்ஸுவல் கொடுமைகளை ஒரு லெட்டரில் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.

Air India Stewardess Shares Her Me Too Experience in a Chilling Letter!

அந்த மேலதிகாரி மிகுந்த சக்தி வாய்ந்த பொறுப்பில் இருக்கிறார். அவர் ஏர் இந்தியா எக்சிகியூட்டிவ்களுடன் நெருக்கமாக பழக கூடியவர் என்று கூறியிருக்கும் அந்த பெண், அந்த மேலதிகாரி தன்னை செயல், பார்வை, பேச்சு போன்ற பல வகையில் செக்சுவலாக துன்புறுத்தியுள்ளார் என்று அந்த லெட்டரில் பதிவு செய்துள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒற்றை நபர்!

ஒற்றை நபர்!

ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தில் பணிபுரியும் அந்த பெண் ஒரு சிங்கிள் மதர். தான் மட்டுமின்றி பிற பெண்களும் அந்த மேலதிகாரியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறியிருக்கிறார்.

தனக்கு நேர்ந்த கொடுமைகளை மிக விவரமாக இரத்தம் உறையவைக்கும் வகையிலான ஒரு கடிதத்தில் எழுதி அதை சுரேஷ் பிரபு, ஜெயந்த் சின்ஹா மற்றும் நரேந்திர மோடி க்கு அனுப்பியுள்ளார் அந்த பெண்.

பிரதமரை நம்புகிறேன்!

பிரதமரை நம்புகிறேன்!

இங்கே பலரும் கூறும்... "இந்திய பெண்களை பாதுகாப்போம்" என்ற வார்த்தையை மட்டுமே தனது கடைசி நம்பிக்கையாக கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கும் அப்பெண். நான் நமது பிரதமர் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன். அவர் எப்போதும் தான் பேசும் போது பெண்களின் பாதுகாப்பு அவசியமானது என்று கூறுவார். பெண் கல்வி அவசியம் என்று கூறுவார்.

பெண் கல்வி மட்டுமின்றி, பெண் படித்து முடித்து வேலைக்கு செல்லும் இடத்திலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடம் சுடுகாடாக மாறிவிடக் கூடாது என்று தனது லெட்டரில் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

வேண்டுகோள்!

வேண்டுகோள்!

தான் எழுதிய கடிதத்தில் அந்த ஏர் ஹோஸ்டஸ் பெண் சில வேண்டுகோள்களை முன்வைத்துள்ளார்.

இந்த கடிதத்தை சாதரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இதற்கான தீர்வுக்கு உடனடியாக கவனம் செலுத்துங்கள். ஒருதலைப்பட்சமாக இன்றி பொதுவான கமிட்டி ஒன்றை விசாரிக்க உருவாக்குங்கள். அதிகாரமும், ஆதிக்கமும் கொண்ட அந்த விலங்கை (பாலியல் துன்புறுத்தல் அளித்து வரும் அந்த அதிகாரி) விட்டுவிடாதீர்கள். கமிட்டி முடிவு வெளிவரும் வரை எந்த பெண்ணுடனும் அவனை வேலை செய்ய அனுமதிக்காதீர்கள், என்று அந்த பெண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

--- "ஏர் இந்தியாவின் சிஎம்டி (CMD) உடனடியாக இதை அட்ரஸ் செய்ய வேண்டும். தேவை என்றால் உடனடியாக இன்னொரு கமிட்டியை உருவாக்குங்கள்" என்று பிரபு ட்வீட் செய்திருக்கிறார்.

Me Too

Me Too

ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டைன் மீது செக்ஸுவல் புகார்கள் எழுந்த போது சமூக தளங்களில் #Me Too என்ற ஹாஷ்டக் உடன் பல பெண்கள் தங்களுக்கு நேர்ந்த செக்ஸுவல் பிரச்சனைகளை முன்வைத்தனர். இதை பல இந்திய நடிகைகளும் பயன்படுத்தி தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை பகிர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளுக்கு, நாள் இந்த Me Too ஹாஷ்டாக் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. அதாவது, இதுநாள் வரை பொறுத்திருந்த பெண்கள், இப்போது தங்களுக்கான நியாயம் கேட்டு போராட குரலை தைரியமாக எழுப்பி வருகிறார்கள்.

இது பாராட்டத்தக்க விஷயம் எனிலும்... இவர்களுக்கான நியாயம், நீதி நிச்சயம் கிடைக்க வேண்டும். அப்போது தான் வரும் நாட்களில் யார் ஒருவரும் இப்படியான தவறை செய்ய முயல மாட்டார்கள்.

தெலுங்கு நடிகை!

தெலுங்கு நடிகை!

காஸ்டிங் கவுச் என்ற பெயரில் இந்திய திரை உலகில் நடிகைளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குகிறார்கள் என்று சமீபத்தில் தெலுங்கு திரைப்பட நடிகை ஒருவர் போராட்டத்தில் குதித்தார்.

ஒரு கட்டத்தில் திரையுலகமே இவருக்கு எதிராக திரும்ப, தனது ஆடைகளை கழற்றி நிர்வாண போராட்டத்திலும் இறங்கினார் அவர். பிறகு தன்னுடன் நெருக்கமாக பழகிய நடிகர்கள், திரை பிரபலங்களின் படங்களை வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி பல்கலைக்கழகம்!

டெல்லி பல்கலைக்கழகம்!

டெல்லியின் ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழகத்தை சேர்ந்த சில மாணவர்கள் ஒன்று சேர்ந்து தங்களுக்கு ஒரு பேராசிரியர் செக்ஸுவல் டார்ச்சர் தருகிறார் என்று போர்க்கொடி தூக்கினார்கள்.

இது மட்டும் தானா, நிர்மலா தேவி என்ற பேராசிரியர் வெளிப்படையாக போன் செய்து பேசி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த அவலமும் நமது நாட்டில் தான் நடந்தது. ஐபிஎல் மற்றும் தூத்துக்குடி கலவரத்தில் இந்த ஜோக்கர் அரசாங்கம் அதை மூடி மறைத்துவிட்டது.

எண்ணற்றவை...

எண்ணற்றவை...

இவை மட்டும் தானா... எட்டு வயது குழந்தையில் இருந்து மூதாட்டி வரை பாலியல் பலாத்காரத்திற்கு பலியாகும் கொடுமையும் நமது நாட்டில் நாள்தோறும் நடந்து வருகிறது. இந்தியாவில் மட்டும் தான் இத்தகைய விஷயங்கள் நடக்கிறது என்றில்லை...

ஆனால், ஒப்பிட்டு பார்க்கும் போது நம் நாட்டில் இப்படியான தவறுகளுக்கு தகுந்த, கடுமையான தண்டனைகள் இல்லையோ, அதனால் தான் இந்த தவறுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறதோ என்ற அச்சமும், கேள்வியும் இந்திய மக்களின் மனதில் எழுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Air India Stewardess Shares Her Me Too Experience in a Chilling Letter!

She says he sexually propositioned her, abused her, spoke of "sexual acts" with her and other women in her presence -- and in office -- and discriminated against her for rejecting his overtures.
Desktop Bottom Promotion