For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தன்னிடம் தகாத முறையில் நடந்த சிறுவனுக்கு தக்க பாடம் கற்பித்த நடிகை!

நடிகையிடம் தகாத முறையில் நடந்துக் கொண்ட 15 வயது சிறுவன் - வியப்பில் ஆழ்த்திய நடிகையின் ரியாக்ஷன்!

By Staff
|

நம் நாட்டில் என்று மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளிலும் தினம், தினம் ஏதோ ஒரு வகையில் சினிமா துறையில் பணியாற்றி வரும் நடிகைகள் தகாத பார்வை, தீண்டல் நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டு தான் வருகிறார்கள்.

நமது ஊர்களில் நடிகைகளை நகைக்கடை, துணிக்கடை திறப்பு விழாக்களுக்கு அழைப்பது என்பது ஃபேஷனாக இருக்கிறது. இது போன்ற தருணங்களிலும், விருது வழங்கும் விழாக்களுக்கு வந்து செல்லும் போதும் ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் அவர்களை தவறாக தீண்ட முயற்சிப்பதும் உண்டு.

எத்தனை பாதுகாவலர்கள் சுற்றி இருந்தாலும் கூட, அந்த கூட்டத்தில் எப்படியாவது சிலர் தங்கள் சிற்றின்ப ஆசையை தீர்த்துக் கொள்கிறார்கள். பெரும்பாலான நடிகைகள் இதை வெளிப்படையாக காட்டிக் கொள்வதில்லை. சில நடிகைகள் இது போன்ற நிகழ்வுகளின் போது சட்டென்று ரியாக்ட் செய்து பளார் என்று கண்ணத்தில் அறைந்த நிகழ்வுகளும் நாம் பார்த்திருக்கிறோம்.

ஆனால், சமீபத்தில் நடிகை சுஷ்மிதா சென் தனக்கு நேர்ந்த இப்படியான நிகழ்வு ஒன்றினை பகிர்ந்திருக்கிறார். ஆனால், அங்கே அவர் ரியாக்ட் செய்த விதம் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புதுமை பெண்!

புதுமை பெண்!

சுஷ்மிதா சென் பிரபஞ்ச அழகி, இந்திய சினிமாவின் பெரும் நடிகை என்பதை தாண்டி தனது சொந்த வாழ்க்கை மூலமாகவும் மற்ற பெண்களுடன் ஒப்பிடுகையில் தனித்து விளங்குகிறார். இவர் திருமணம் செய்துக் கொள்ளாமலேயே இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வளர்கிறார்.

எப்பேர்ப்பட்ட பெண்ணாக இருந்தாலும், இந்த சமூகத்தில் வாழ ஒரு ஆண் துணை வேண்டும் என்ற பிம்பத்தை உடைத்து சுக்குநூறாக்கி பெண் தனியாகவும் வாழ முடியும், வெற்றிகரமாக குழந்தைகளை வளர்த்து பெரியாளாக்க முடியும் என்பதற்கு சுஷ்மிதா சென் ஓர் சிறந்த உதாரணம்.

விருது வழங்கும் விழா

விருது வழங்கும் விழா

இந்த நிகழ்வு ஆறு மாதங்களுக்கு முன் ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்துக் கொண்ட போது நடந்ததாக சுஷ்மிதா சென் குறிப்பிட்டுள்ளார்...

"நான் விருது வழங்கும் விழாவிற்கு சென்றிருந்தேன்... அப்போது திடீரென யாரோ ஒரு நபர் என் பின்னால் நின்று தகாத முறையில் என்னை தீண்டுவதை நான் உணர்ந்தேன். அந்த கூட்டத்தில் தான் சிக்க மாட்டேன் என்று நினைத்து அந்த நபர் என்னை தீண்டியிருக்க வேண்டும். அந்த நபர் என்னை தீண்டிய மறு நொடி அவனது கையை பிடித்து இழுத்து திரும்பி பார்த்த போதுதான். எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது."

15 வயது சிறுவன்!

15 வயது சிறுவன்!

"அவன் ஒரு 15 வயதுமிக்க சிறுவன். அவன் கழுத்தில் கைப்போட்டு என்னுடன் நடக்க வைத்து அழைத்து சென்றேன். ஒருவேளை நான் இப்போது நினைத்தால்... நீ செய்த தவறை அனைவர் முன்னிலும் சுட்டிக் காட்டினால். உன் வாழ்க்கை இன்றுடன் முடிந்துவிடும் என்று அறிவுரைத்தேன். ஆரம்பத்தில் அவன் தனது தவறை ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், நான் மேலும் கண்டிப்புடன் பேசிய போது... தான் செய்தது தவறு என்றும், மீண்டும் இதுபோன்ற தவறுகளில் ஈடுபட மாட்டேன்", என்று தன்னிடம் கூறியதாக சுஷ்மிதா சென் குறிப்பிட்டுள்ளார்.

தவறென்று அவன் அறிந்திருக்கவில்லை...

தவறென்று அவன் அறிந்திருக்கவில்லை...

நான் நினைத்திருந்தால் அவன் மீது ஆக்ஷன் எடுத்திருக்க முடியும். ஆனால், அப்படி நான் செய்யவில்லை. காரணம் தான் செய்தது தவறு என்றே அவனுக்கு தெரியவில்லை. அவனுக்கு யாரும் அவன் செய்தது தவறு என்று கற்பிக்கவும் இல்லை. இதை கேளிக்கையாக செய்யக் கூடாது என்பதை யாரும் அவனுக்கு எடுத்துக் கூறவில்லை. என்று மேலும் சுஷ்மிதா சென் தான் அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

தனி மனுஷி!

தனி மனுஷி!

சுஷ்மிதா சென் தனி மனிதியாக உயர்ந்து காணப்படுகிறார். நிச்சயம் வேறு ஒரு நடிகையாக இருந்திருந்தால்... சிறுவன் என்றும் பாராமல் ஓங்கி அறைந்திருப்பார்கள், புகார் கூட அளித்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால்,சுஷ்மிதா சென் அந்த சிறுவனை அரவணைத்து அறிவுரை கூறி, இனிமேல் அவன் மீண்டும் அந்த தவறை செய்யாமல் இருக்கவும். அவன் செய்தது எத்தகைய தவறு என்பதையும் உணர்த்தி அனுப்பியுள்ளார்.

சமூகத்தின் குற்றமே!

சமூகத்தின் குற்றமே!

இது நிச்சயம் இந்த சமூகத்தின் குற்றமே. குறிப்பிட்ட வயதுக்கு பிறகு நாம் ஆண், பெண் இருவர் மத்தியில் பெரும் வேறுபாடு காண்பிக்கிறோம். இதன் காரணத்தால் சிறு வயதிலேயே பெண் உடல் மீதான ஈர்ப்பானது ஆண்களிடம் வளர துவங்குகிறது.

நாம் தடைப்போடாத வரையில் அப்படியான எண்ணமே இல்லாத ஒரு உள்ளத்தில்... கூடாது, கூடாது என்று கூற, கூற... அது ஏன் கூடாது என்ற ஆர்வத்திலேயே தவறை தவறு என்று அறியாமலேயே செய்ய மனதளவில் தூண்டப்படுகிறார்கள்.

மனதளவிலும், உடலளவிலும் ஆண் பெண்ணையும், பெண் ஆணையும் அறிந்துக் கொள்ள வேண்டியது இயற்கையின் விதி. இது மறுக்கப்படுவதால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான்.

24 வருடங்கள்!

24 வருடங்கள்!

42 வயதான சுஷ்மிதா சென் இந்தியாவிற்காக முதல் பிரபஞ்ச அழகி பட்டம் வென்று சரியாக நேற்றுடன் 24 வருடங்கள் நிறைவுற்றது. இதை நினைவு கூறும் வகையில்... என்னுள் இருக்கும் பிரபஞ்சத்தில் நான் இன்னும் மிஸ் தான்... என்ற கருத்து தெரிவித்து தனது சமூக தள முகவரியில் பதிவிட்டிருந்தார்.

மேலும், வருடங்கள் மட்டுமே மாறியிருக்கின்றன. என்னை வாழ்த்திய அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

15 Year Old Boy Misbehaved With Sushmita Sen, She Recalls an Terrible Incident!

Women Harassment Incident: Sushmita Sen Recalls A Terrible Incident of a 15 Year Old Boy Misbehaved With Her
Story first published: Tuesday, May 22, 2018, 14:12 [IST]
Desktop Bottom Promotion