கணவனின் வாயில் சூலத்தை குத்தி இரத்தம் குடித்து கொன்ற கொடூர மனைவி!

Posted By:
Subscribe to Boldsky

இன்னும் இந்தியாவில் சூனியம் வைக்கும் வழக்கம் இருக்கிறதா? என சிலர் கருதலாம். முக்கியமாக படித்து முடித்து ஐ.டி வேலையில் இருப்பவர்களுக்கு இந்த சந்தேகம் அதிகமாகவே இருக்கும். ஆனால், இந்தியாவின் பல பகுதிகள் இன்னும் வளர்ச்சி அடையாமல் தான் இருக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.

இந்த சம்பவம் கொஞ்சம் விசித்திரமாகவும், வினோதமாகவும் தான் இருக்கிறது. தினமும் ஏதோ சடங்கு என்ற பெயரில் தனது கணவரின் வாயில் சூலத்தை குத்தி இரத்தம் குடித்து வந்துள்ளார் சபித்திரி எனும் இந்த பெண்மணி.

ஆரம்பத்தில் திடீர் மரணமாக கருதப்பட்ட சபித்திரியின் கணவரின் மரணம். ஊர் மக்கள் மற்றும் உறவினரின் குற்றச்சாட்டுக்கு பிறகு போலீஸ் கைகளுக்கு சென்றுள்ளது. விசாரணை நடத்திய போலீசார் அச்சத்தில் உறைந்துபோயுள்ளனர்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யார் இவர் ?

யார் இவர் ?

சபித்திரி எனும் இந்த பெண்மணி பெங்காலின் பிர்பும் அருகே இருக்கும் சைரைபூர் எனும் பகுதியில் வசிப்பவர். இவரிடம் திடீரென இரத்தம் மீதான கவர்ச்சி அதிகமானது. அதனால், தனது கணவர் அபிஜித்தின் வாயில் இருந்து இரத்தம் குடித்து வந்துள்ளார்.

தினமும்!

தினமும்!

ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் சபித்திரி தனது கணவர் அபிஜித்தின் நாக்கில் திரிசூலத்தை குத்தி அவரது வாயில் இருந்து வரும் இரத்தத்தை குடித்து வந்துள்ளார். இதை இவர் ஒருவிதமான சடங்கு போல பின்பற்றி வந்துள்ளார்.

மாமியார்!

மாமியார்!

சபித்திரியின் மாமியார், தனது மருமகள் ஒவ்வொரு நாளும் தன் மகனின் (அபிஜித்தின்) நெஞ்சின் மீது அமர்ந்து அவனது வாயில் இருந்து இரத்தத்தை உறுஞ்சி குடித்து வந்தாள் என்ற தகவலை கூறியுள்ளார்.

அக்கம் பக்கத்தினர்...

அக்கம் பக்கத்தினர்...

சபித்திரியின் வீட்டருகே வசித்து வந்தவர்கள்,"இவர் எப்போதுமே சற்று விசித்திரமாக தான் நடந்துக் கொள்வார். அவரது ஒவ்வொரு செயலும் காண வித்தியாசமாக தான் இருக்கும். நாங்கள் அவரை சூனியக்காரி என்று தான் கருதினோம்." என கூறியிள்ளனர். மேலும், சபித்திரியின் கணவரின் திடீர் மரணத்தில் தங்களுக்கு சந்தேகம் இருந்ததாகவும் கூறியுள்ளார்.

மரணம்!

மரணம்!

சபித்திரியின் இந்த விசித்திர பழக்கத்தால், இவரது கணவரின் உயிர் பிரிந்தது. அவருக்கு உடலில் இரத்த பற்றாக்குறை இருக்கிறது என அறியப்பட்டுள்ளது. இதற்காக மருத்துவமனை சென்று மூன்று பாட்டில் இரத்த ஏற்றியும் உள்ளனர்.

ஆனாலும், தொடர்ந்து சபித்திரி தினமும் அவரக்கு ஏதோ சடங்கு செய்து இரத்தம் குடித்து வந்ததால், அவர் உடலில் போதியளவு இரத்தம் இன்றி இறந்துள்ளார்.

சூனியம்?

சூனியம்?

சபித்திரி எனும் இந்த பெண்ணின் கணவர் அபிஜித்தின் உறவினர், சபித்திரி சூனியம் வைப்பார் என்று கூறுகிறார்கள். ஆனால், சபித்திரியின் உறவினர்கள், அபிஜித் ஏதோ உடல்நலம் சரியில்லாமல் இறந்திருக்கிறார். அதை மறைக்கவும், எங்கள் மகளை சாடவும் இப்படி குற்றம் சாட்டுகிறார்கள் என கூறியுள்ளனர்.

சபித்திரியின் வீட்டார் ஊருக்குள் வந்தபோது, ஊர் மக்கள் அவர்களை உள்ளே அனுமதிக்காமல் விரட்டியுள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Real-life Stories: Woman Who Sucked Her Husband's Blood Every Night!

Real-life Stories: Woman Who Sucked Her Husband's Blood Every Night!