For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடும் கிராமங்கள்!

பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடும் கிராம மக்கள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது

By Lakshmi
|

தீபாவளி என்றாலே அனைவரது நினைவிலும் முன் நிற்பது பட்டாசு தான். தீபாவளி பட்டாசுகள் பல ஆயிரங்கள் வரை விற்கப்படுகின்றன. கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை எதற்காக கரியாக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் உண்டு தான். ஆனால் பணம் போனால் போகிறது என்று ரோடு நிறைய குப்பைகள் நிறைய பட்டாசுகளை வெடிப்பவர்களும் ஒரு ரகம்...

தனக்கென இல்லாமல் மற்றவர்களுக்குக்காக தனது மகிழ்சியை தியாகம் செய்து வாழும் மக்களை காண்பதே அரிது.. மனிதர்களுக்கு உதவிடும் தன்மையே இறந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கும் அதே வேளையில் ஐந்து அறிவு உயிரினங்களை கூட தொல்லை செய்யக்கூடாது என்று பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடும் மக்களின் உள்ளம் நிச்சயமாக தெய்வம் குடியிருக்கும் கோவில் தான்... இந்த பகுதியில் தமிழகத்தில் எங்கு எல்லாம் பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடப்படுகிறது என்பதை விரிவாக காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கூந்தன்குளம் கிராமம்

கூந்தன்குளம் கிராமம்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள கூந்தன்குளம் கிராமம் இதில் ஒன்று. இங்கு பல காலமாகவே பட்டாசு வெடிப்பதில்லை. தீபாவளிக்குத்தான் என்றில்லாமல் எப்போதுமே இங்கு பட்டாசு சத்தத்தை கேட்க முடியாது. பட்டாசின் நெடி கூட அண்டாமல் இவர்கள் மிகவும் கவனமாக இருக்கின்றனர். விளக்கேற்றி, இனிப்புகள் செய்து, புத்தாடை அணிந்து அமைதியுடன் கொண்டாடுகிறார்கள் இந்த ஊர் மக்கள்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

கூந்தன்குளத்தில் அழகிய பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு பல்வேறு நாட்டுப் பறவைகளும் வந்து செல்கின்றன. தீபாவளி சமயத்தில் இங்கு வரும் பறவைகளுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதற்காக மக்கள் பட்டாசுகளை கையில் தொடுவதில்லை.

5 தலைமுறையாக பட்டாசு இல்லை

5 தலைமுறையாக பட்டாசு இல்லை

அதேபோல புதுவை அருகே உள்ள கழுப்பெரும்பாக்கம் கிராம மக்கள் 5 தலைமுறையாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். வானூர் வட்டத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் தற்போது 1500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 5 தலைமுறையாக பட்டாசுக்கு இந்த கிராமத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு காரணம்,இங்குள்ள ஆலமரத்தின் மத்தியில் மக்களின் எண்ணிக்கைக்கும் அதிகமாக உள்ள வவ்வால்களே.

இரவில் உணவு வேட்டை நடத்தி விட்டு, பகலில் மரக்கிளைகளில் தொங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் பட்டாசு வெடித்தால் வவ்வால்கள் கலைந்து செல்வது மட்டுமின்றி அவைகள் விபத்தில் சிக்கி இறக்கவும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் அதற்காக பட்டாசுகளுக்கு டாட்டா சொல்லி விட்டனர் இந்த கிராம மக்கள்.

 தொந்தரவு செய்ய கூடாது

தொந்தரவு செய்ய கூடாது

இதேபோல சென்னிமலை அருகே வி. மேட்டுப்பாளையம், செல்லப்பம்பாளையம், தச்சன்கரைவழி, செம்மாண்டாம்பாளையம், மீனாட்சிபுரம், புங்கம்பாடி ஆகிய கிராமங்களில் பட்டாசுகளை ஒருபோதும் மக்கள் வெடிப்பதில்லையாம். இதற்கு காரணமும் இங்குள்ள பறவைகள் சரணாலயம்தான். வெள்ளோடு மேட்டுப்பாளையம் பறவைகள் சரணாலயத்தில் பல்வேறு பறவைகள் தங்கி உள்ளன. அவ்வப்போது வெளி நாட்டு பறவைகளும் வந்து செல்கின்றன. அமைதியை தேடி வரும் பறவைகளுக்கு வெடி தொந்தரவாக இருக்கக் கூடாது என்பதற்காக பறவைகள் சரணாலயத்தை சுற்றி உள்ள கிராமங்களில் தீபாவளிக்கு பட்டாசு வெடி வெடிப்பதை மக்கள் தியாகம் செய்துள்ளனர்.

40 ஆண்டாக பட்டாசு இல்லை!

40 ஆண்டாக பட்டாசு இல்லை!

சிவகங்கை அருகே அரியவகை அயல்நாட்டுப் பறவைகளை பாதுகாப்பதற்காக 40 ஆண்டாக பட்டாசு வெடிக்காத அதிசய கிராமம் ஒன்று உள்ளது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே திருப்பத்தூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கொல்லுகுடிபட்டி கிராமம் உள்ளது. இங்கு அதிகமாக அய‌ல்நாட்டு பறவைகள் கூடுகட்டி வாழ்கின்றன.

வாழ்வு தரும் பறவைகள்

வாழ்வு தரும் பறவைகள்

இதனால், இக்கிராமத்தை சேர்ந்த மக்கள் தீபாவளிக்கு தங்களது பிள்ளைகளுக்கு பட்டாசு வாங்கித் தருவதில்லை. அவர்கள் தீபாவளி என்றால் பட்டாசு என்பதை மறந்து, சப்தமில்லாத தீபாவளியாகக் கொண்டாடி மகிழ்கின்றனர். மேலும், பறவைகள் அதிகம் வந்து தங்கினால் அந்த ஆண்டு மழை பெய்து, விவசாயம் செழிக்கும் என்பது உண்மை என்றும் தெரிவிக்கிறார்கள்.

 வாவ்வால்களை காக்க!

வாவ்வால்களை காக்க!

குடியாத்தம் அருகே பறவைகள் மற்றும் வவ்வால்களுக்காக கிராம மக்கள் கடந்த 50 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடி வருகின்றனர். தீபாவளி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது புத்தாடை மற்றும் பட்டாசுகள் தான்.

தீபாவளியன்று கிராமம் முதல் நகரம் வரை புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்தால்தான் அனைவருக்கும் மனநிறைவு. இவ்வாறு இருக்க கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடும் வழக்கத்தை கடைபிடித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சண்டத்தூர் கிராமத்தில் உள்ள ஒரு தெருவில் ஏராளமான மரங்கள் உள்ளது. மரங்கள் அடர்ந்து இயற்கை சூழலுடன் ரம்மியமாக காட்சியளிக்கும். இங்கு வந்து விட்டால் ஏதோ இயற்கை எழில் சூழ்ந்த வனப்பகுதிக்கோ, மலைச்சாரல் மிகுந்த பகுதிக்கோ வந்துவிட்டதுபோன்ற எண்ணம் ஏற்படும்.

வாய்மொழி கட்டளை!

வாய்மொழி கட்டளை!

இங்குள்ள மரங்களில் பறவைகள் அதிகமாக காணப்படும். முக்கியமாக வவ்வால்கள் அதிக அளவில் தொங்கிக்கொண்டிருக்கும். இவ்வளவு சிறப்புமிக்க எழில்கொஞ்சும் பகுதிக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், பறவைகள், வவ்வால்களுக்கு தொந்தரவு ஏற்படக்கூடாது என்று மக்களும் உதவி செய்து வருகின்றனர்.

அதன்படி தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காமல் இங்கேயுள்ள நூற்றுக்கணக்கான வீடுகளைச் சேர்ந்த மக்கள் இன்றளவும் கடைபிடித்து வருகின்றனர். வாய்மொழியாக சொன்ன கட்டளையை, தலைமுறை, தலைமுறையாக இன்றளவும் பொதுமக்கள் கடைபிடித்து வருவது ஆச்சரியம் அளிக்கும் வகையில் உள்ளது. அதேபோல், குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டையில் வவ்வால் மரம்தெருவில் உள்ள மரங்களில் இதுபோன்று வவ்வால்கள் தொங்கிக்கிடக்கிறது.

புதுமாப்பிள்ளைகள்

புதுமாப்பிள்ளைகள்

இதனால் அந்ததெரு மக்களும் தீபாவளி கொண்டாட்டத்தின்போது பட்டாசுகள் வெடிப்பதில்லை. மேலும், சண்டத்தூர் கிராமத்திலும், காமாட்சியம்மன் பேட்டையிலும், தலை தீபாவளிக்கு வரும் புது மாப்பிள்ளைகள் கூட இந்த விதிமுறையை மீறுவதில்லை.

இதற்காக பெண்ணின் வீட்டார் திருமண நிச்சயதார்த்தத்தின்போதே மணமகன் வீட்டாரிடம் இதுபற்றி கூறிவிடுவது வழக்கம். அதேபோல், திருமணம், திருவிழா, துக்க நிகழ்ச்சிகள் போன்ற எந்த நிகழ்ச்சிக்கும் வெடி வெடிக்காமல் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காற்று மாசுபாடு

காற்று மாசுபாடு

காற்று மாசுபடுவதை கருத்தில் கொண்டு டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்தது. பட்டாசு விற்பனைக்கான லைசென்ஸ் வழங்கவும் உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதேபோல் மும்பை பெருநகர் குடியிருப்பு பகுதிகளில் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுநலன் வழக்கு ஒன்றை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம் இத்தடையை விதித்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Villages which are not celebrate diwali with crackers

Villages which are not celebrate diwali with crackers
Story first published: Friday, October 13, 2017, 12:50 [IST]
Desktop Bottom Promotion