For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோவில் மணியில் இருக்கும் அறிவியல் உண்மைகள்!!

கோவில் மணி ஓசைக்குப் பின் இருக்கும் அறிவியல் உண்மைகளை இந்த கட்டுரையில் காணலாம்.

By Ambika Saravanan
|

பல மதங்களிலும் கோவில்களில் மணிகளை கட்டும் பழக்கம் இருந்து வருகிறது. இந்துக்கள் வீட்டிலும் இறை வழிபாட்டில் மணியின் பங்கு இருக்கிறது. இறைவனுக்கு தீபாராதனை காட்டும்போது மணி அடிப்பது வழக்கமாக நடைபெறுகிறது. இந்த மணி அடிக்கும் சடங்கு எதற்காக தொடங்கப்பட்டது என்பதையும் மணி அடிப்பதால் ஏற்படும் மாற்றங்களின் அறிவியல் பூர்வமான தெளிவையும் அடைய இந்த பதிவு உங்களுக்கு உதவும்.

கோவில் மணியின் அமைப்பு:

கோவில் மணி ஏதோ ஒரு உலோகத்தால் செய்யப்படுவது கிடையாது. ஏழு உலோகங்களின் கலவையால் செய்யப்படுவது தான் இந்த மணி. கேட்மியம் , லெட் , ஜின்க் , நிக்கல் , குரோமியம் மற்றும் மாங்கனீஸ் ஆகியவை இந்த 7 உலோகங்கள். மணியின் தயாரிப்பில் ஒவ்வொரு உலோகத்தின் சேர்க்கை அளவின் விகிதம் உண்மையான வியக்கத்தக்க அறிவியலாகும்.

ஆகம சாஸ்திரத்தின் படி மணிகள் பஞ்ச லோகத்திலும் தயாரிக்கப்படுகின்றன. அவை, தாமிரம், வெள்ளி, தங்கம், வெண்கலம் மற்றும் இரும்பு. இது பஞ்ச பூதங்களை குறிப்பிடுகிறது.

Surprising science behind Temple Bell

ஆச்சர்யம்:

மனித மூளை வலது , இடது என்று பிரிக்கப்பட்டது. இரண்டும் இரு வேறு செயலாற்றல் தன்மைகளை கொண்டது. இந்த இரண்டையும் ஒன்றாக இணைக்கும் தன்மை கோவில் மணியில் இருந்து எழும் ஒலிகளுக்கு உண்டு. அத்தகைய விதத்தில் தான் இந்த மணி தயாரிக்கப்படுகிறது. இது முதல் ஆச்சர்யம்!

நாம் கோவில் மணியை அடித்தவுடன், அதிலிருந்து ஒரு பலத்த ஒலி எழும்புகிறது. அந்த மணியின் ஓசை எதிரொலியுடன் கூடிய ஆழ்ந்த, இடைவிடாத ஒலியாக உரக்க ஒலிக்கும் .

ஒலியின் முடிவில் கேட்கும் எதிரொலிகள் நம் காதுகளில் 7 வினாடிகள் நீடிக்கிறது. இது மனித உடலின் 7 சக்கரங்கள் எனப்படும் சக்தி மையங்களை தாக்குகிறது . அந்த ஏழு சக்கரங்கள், மூலாதாரம், சுவாதிஷ்டனா, மணிபுரம், அனாகதம், விசுத்தம், ஆக்கினை , சகஸ்ராரம் ஆகியன .

ஓம் எனும் மந்திரம்:

மணியில் இருந்து வரும் ஓசையில் நாம் "ஓம் " என்ற மந்திரத்தை உணர முடியும். கர்பகிருகத்தில் இருக்கும் மணியை, இறைவனுக்கு தீபாராதனை காட்டும்போது, இறைவனுக்கு அபிஷேகம் நடக்கும்போது, உணவு படைக்கும் போது என்று சில நேரங்களில் மட்டும் அடிப்பதுண்டு . ஒவ்வொரு கோயிலிலும் கர்பகிருகத்தில் உள்ள மணியை அடிப்பதற்காக ஒவ்வொரு சாஸ்திரம் பின்பற்றப்பட்டுவருகிறது.

கோவில் வாசலில் கட்டும் மணி:

பொதுவாக கோயில் வாசலில் மணியை கட்டியிருப்பதை நாம் பார்த்திருப்போம். உள்ளே நுழைந்ததும், அதனை இழுத்து ஓசை எழுப்புவோம். கோயிலுக்குள் நுழையும்போது நமது ஆழ் மனதை விழிக்க செய்வதற்காகவே இந்த ஒலியை எழுப்புகிறோம்.

உடலால் தூங்குபவர்களை ஓசையின் மூலம் எழுப்புவது போல், மனதையும் எழுப்பவே இந்த முறையை பின்பற்றுகிறோம். இந்த ஒலியால் மனமும் உடலும் விழிப்படையும் நேரம் கோயிலில் இருந்து வரும் நறுமணமும் விளக்கின் ஒளியும் நம்மை மேலும் ஊக்குவிக்கின்றன.

கோவில் மணி ஒலியின் விளைவுகள்:

கோவில் மணியின் ஒலியை கூர்ந்து கேட்பது ஒரு வகையில் தியானம் செய்வதை போன்றதாகும். கோவில் மணியில் இருந்து ஒலி எழும்பும் அந்த நேரம் நம் மூளையில் உள்ள நினைவுகள் அழிக்கப்படுகின்றன. நாம் தன்னிலை இழந்த நிலைக்கு செல்ல தயாராகிறோம். மனம் விழிப்பிணர்ச்சி அடைகிறது. இந்த நிலையில் இருந்து மீண்டு வர உங்களுக்கு சிறிது அவகாசம் தேவை படும்.

கோயில் மணிகளை அதன் தண்டை இழுத்து அடிப்பதால், அதன் ஒலி பல அலைவரிசைகளை வெளியேற்றுகிறது. இது வளி மண்டலத்தில் பரவுகிறது. ஒலிகள் வெளிப்படும்போது அதனுடன் சேர்த்து புனிதமான கதிர்களும் வெளி வருகின்றன . இவை வளி மண்டலத்தில் உள்ள தீய ஆற்றல்களை அழிகின்றன.

வீடுகளில் மணியோசை:

பொதுவாக இந்துக்களின் வீடுகளில் பூஜையின் போது மணியோசை எழுப்பி இறைவனை வணங்குவது ஒரு வழக்கம். மணியோசையால் இறைவனை அழைப்பதும் ஒரு வழக்கமாக இருந்து வருகிறது.

மணியோசையின் ரீங்காரத்தால் தீய சக்திகள் வீட்டிலிருந்து நீங்கி விடும் என்பதும் ஒரு எண்ணமாகும். இறைவனை வணங்கும்போது எந்த கெட்ட வார்த்தைகளும், கேட்டக்கூடாத ஓசைகளும் செவிகளில் விழக் கூடாது என்பதற்காக இந்த ஒலியை எழுப்பி இறைவனை வணங்குவர்.

நமது முன்னோர்களின் காலம் முதல் இன்றைய காலம் வரை மணியின் பயன் இருந்து வருகிறது. முன்னோர்கள் எல்லாவற்றையும் அர்த்தத்துடன் மற்றும் ஆரோக்கியத்திற்காக செய்தனர் என்பது இன்று அறிவியல் பூர்வமாக விளக்கப்படும்போது தான் நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. அதனால், அவர்களின் பழக்க வழக்கங்களை மாற்றாமல் பின்பற்ற முயற்சிப்போம். நிச்சயம் அது நமக்கு நன்மையை தரும்.

English summary

Surprising science behind Temple Bell

Surprising science behind Temple Bell
Story first published: Thursday, September 7, 2017, 16:02 [IST]
Desktop Bottom Promotion