நாக பஞ்சமி ஏன் கொண்டாடப்படுகிறது? இதனால் யாருக்கு நல்லது?

By: Balakarthik Balasubramanian
Subscribe to Boldsky

ஷ்ரவண் மாதத்தின் பிரகாசமான இரவில் ஐந்தாம் நாளில் கொண்டாடப்படும் ஒரு திருவிழா தான் நாக பஞ்சமி அல்லது நாகங்களின் திருவிழாவாகும்.

இந்த நாக பஞ்சமி திருவிழாவை கொண்டாட காரணங்கள் பல கூறப்பட, பல கதைகளும் புராணங்களும் கூட இத்திருவிழாவுக்கு உண்டு. இப்பொழுது, இந்த நாக பஞ்சமி புராணங்கள் பற்றி சில சுவாரஷ்யமான தகவல்களை நாம் தெரிந்து கொள்ளலாம்.

விவசாயியும், நாகங்களும்:

ஒரு காலத்தில், ஒரு விவசாயி தன் மனைவியுடன் வாழ்ந்து வந்திருக்கிறார். அவருக்கு இரண்டு ஆண் மகன்களும், ஒரு மகளுமாம். ஒரு நாள், அந்த விவசாயி தன்னுடைய நிலத்தை உழவு செய்ய, அப்பொழுது தற்செயலாக அவர் ஓடிவிட, நாகினியின் (சக்தி வாய்ந்த பெண் பாம்பு) மூன்று குட்டி பாம்புகளை கொன்றுவிட்டார். அந்த நாகினி கடும்கோபமும், கவலையும் கொள்ள, இதேபோல் அந்த விவசாயிக்கும் நேர வேண்டும் என சபதமெடுத்ததாம்.

இரவில், நாகினி திருட்டுதனமாக சென்று, விவசாயியின் மனைவியையும், இரண்டு ஆண் மகன்களையும் கடித்துவிட்டது. ஆனால், அவர் மகளை கடிக்கும் முன் சூரியன் உதித்துவிட்டது.

Legends Associated with Naga Panchami

அடுத்த நாள் இரவில், அந்த பெண் பாம்பு அவர் மகளை கடிக்க வந்திருக்கிறது. இதனை எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்த அவர் மகள், நாகினிக்கு முன்னால் ஒரு பாத்திரத்தில் பாலையும் ஊற்றி வைத்து வணங்கியிருக்கிறாள். அந்த நாளில் நடந்த எதிர்பாராத நிகழ்வாலே நாக பஞ்சமி என அந்நாளை அழைக்கப்படுகிறதாம்.

அந்த பெண் சைகையால் நாகினியை வேண்டிக்கொள்ள, அந்த பெண்ணின் இறந்த தாயும், சகோதரர்களும் நாகினியால் திரும்ப தரப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

அந்த நாள் முதல், பாம்புகளின் கோபத்திலிருந்து தப்பிக்க நாக பஞ்சமியானது ஆண்களால் கொண்டாடப்படுகிறதாம்.

இளைய இளவரசனும், அவருடைய மனைவியும், நாகங்களும்:

ஒரு காலத்தில், ஒரு அரசன், தன்னுடைய மனைவி (அரசி), மற்றும் ஆறு மகன்களுடன் வாழ்ந்து வந்தான். அந்த ஆறு மகன்களுக்கும் திருமணம் ஆகிவிட்டதாம். அவர்களுக்கு குழந்தைகளுமிருக்க, இளைய மகனுக்கு மட்டும் பிள்ளை பாக்கியம் இல்லையாம். இளைய மகனின் மனைவியள் விளையாட்டு தனமாய் இருக்க, கருவுற இயலாதவராய் காணப்பட, அனைவராலும் துரதிஷ்டசாலியாய் அவள் நினைக்கப்பட்டிருக்கிறாள்.

இதனால் மிகவும் மன வேதனை அடைந்திருக்கிறான் இளையமகன், அவளோ, தன்னுடைய மனக்கவலையை தன் கணவனிடம் கூறியும் அழுதிருக்கிறாள். அதற்கு ஆறுதல் வார்த்தை சொல்ல நினைத்த அவன், "குழந்தை பாக்கியம் என்பது விதியின் வழியது. அவரவர் விருப்பத்திற்கு உன்னை பற்றி புறம் பேசினாலும், நான் உன்னிடம் அவ்வாறு நடந்து கொள்ள ஒருபோதும் விரும்பவில்லை. மற்றவர் பேச்சினை காதில் வாங்கிக்கொள்ளாமல் கவலை மறந்து சந்தோஷமாக இரு" எனவும் அவன் கூறி இருக்கிறான்.

Legends Associated with Naga Panchami

நாட்கள் கடக்க, ஷ்ராவனா மாதத்தின் சுக்லா பக்ஷாவின் நான்காவது நாள் வந்திருக்கிறது. அன்று இரவு, இளைய மகனின் மனைவி தூங்கிக்கொண்டிருக்க, ஐந்து நாகங்கள் அவளுடைய கனவில் தோன்றி இருக்கிறது. அவை அவளை பார்த்து நாளை நாக பஞ்சமி எனவும் கூறி இருக்கிறது. நாளைய நாளில் அவள் நாகத்தை வணங்கினால், அவளுக்கு விலைமதிப்பற்ற சிறிய பையன் பிறப்பான் எனவும் கூறி இருக்கிறது. அவள் உடனே எழுந்து தன் கணவனிடம் அவள் கண்ட கனவை கூறியிருக்கிறாள்.

இளைய மகன் அவளிடம், கனவில் கண்ட ஐந்து நாக படங்களை உருவாக்க சொல்ல, சூடான உணவுகளை பாம்புகள் விரும்பாது. ஆதலால் பச்சை பாலை நாகத்துக்கு வைத்து பூஜை செய்யலாம் எனவும் கூறி அவ்வாறே செய்திருக்கிறார். கனவில் கண்டதுபோல், ஆறாவது மகனின் மனைவிக்கு ஒரு பையன் அதன் பிறகு பிறந்து இருக்கிறான்.

பிராமணும், நாக பஞ்சமியும்:

ஒரு காலத்தில் மணிகபுரா என்ற நகரம் காணப்பட்டது. அங்கே கவடா பிராமண் என்ற ஒருவரும் வாழ்ந்து வந்தார். அவர் பிராமணன் என்ற போதிலும், நாக பஞ்சமியை பற்றி ஏதுமே அவருக்கு தெரியவில்லை. அவர், தோண்டுதல், உழவு செய்தல், எரித்தல், பறித்தல், வருத்தல் என பலவற்றை செய்திட, இந்த செயல்களை நாக பஞ்சமி அன்றும் செய்திருக்கிறார்.

அவர் தன்னுடைய நிலத்திற்கு, நாக பஞ்சமி அன்று சென்று நிலத்தை உழுதிருக்கிறார். அவ்வாறு உழும் போது எதிர்பாராதவிதமாக ஒரு நாக குடும்பத்தின் மீது ஏற்றிவிட்டார். அனைத்து பாம்பு குட்டிகளும் இறந்துவிட, தாய் பாம்பு மட்டும் தப்பித்துவிட்டது.

Legends Associated with Naga Panchami

பழிவாங்க நினைத்த தாய் பாம்பு, பிராமண குடும்பத்தின் அனைத்து உறுப்பினரையும் கடித்துவிட, அனைவரும் இறந்துவிட்டனர். இருப்பினும், அவர் மகளை மட்டும் அந்த பாம்பு தீண்டவில்லை. காரணம், அவள் ஒரு நாக வழிபாட்டு பக்தை. அவள் ஒவ்வொரு வருடமும் நாக பஞ்சமியை கொண்டாடுவாள். அதனால், அவளை மட்டும் பாவம் பார்த்து தாய் பாம்பானது விட்டு சென்றது.

ஆனால், அதன்பின்பு, பிராமணனின் மகள், தாய் பாம்பிடம் ஒரு உதவி கேட்டிருக்கிறாள். உடனே தாய் பாம்பு, அவளுக்கு ஒரு மாய அமிர்தத்தை தந்திருக்கிறது. அதனை குடும்பத்தின் இறந்த சடலங்கள் மீது அவள் தெளித்திருக்கிறாள். அப்பொழுது, அனைவரும் நீண்ட தூக்கம் தூங்கியதை போல், இறப்பிலிருந்து மீண்டு எழுந்ததாகவும் நமக்கு புராணங்களின் மூலம் தெரிய வருகிறது.

அதன்பின்னர் அவர்களுடைய மகள், தன் குடும்பத்தினரை நாக பஞ்சமியன்று வணங்குமாறு அறிவுரை கூற, பிராமணும், எரித்தல், தோண்டுதல், உழுதல் போன்றவற்றை விட்டுவிடுவதாக அந்நாளில் உறுதி எடுத்து உள்ளார்.

நாக பஞ்சமியும், சகோதர சகோதரி பாச பிணைப்பும்:

ஒரு காலத்தில், மூத்த சகோதரன் ஒருவன் தன் இளைய சகோதரியுடன் வாழ்ந்து வந்தான். அவனுடைய சகோதரி தீவிர நாக பக்தையாவாள். நாக பஞ்சமி அன்று, தன்னுடைய மூத்த சகோதரனிடம் கேதகி மலரை பறித்து வருமாறு கூறியிருக்கிறாள். நாகங்களுக்கு மிகவும் பிடித்த மலராக கருதப்பட்டது தான் கேதகி மலராகும்.

அவள் சகோதரனும் காட்டின் உள்ளே ஆழத்தில் கேதகி மலரை பறிக்க செல்ல, அவனை பாம்பு தீண்டி இறந்துவிட்டான்.

இதனை தெரிந்து அவன் இளைய சகோதரி துக்கத்தில் வாடியிருக்கிறாள். அவள் நாக தெய்வத்திடம் வேண்டி, தன் சகோதரனை கேட்டு வணங்கியிருக்கிறாள். அந்த நாக தெய்வமும் அவள் முன் தோன்றி, இறந்த சகோதரனின் பின்புறம் தடவுமாறு ஒரு களிம்பையும் தந்திருக்கிறது. அந்த நாக தெய்வத்தின் அறிவுரைப்படி அவள் அந்த களிம்பை அவன் மீது தேய்க்க, சகோதரன் உயிர் பெற்று எழுந்து வந்துள்ளான்.

அந்நாள் முதல், சகோதரன் மற்றும் சகோதரிகளின் பாச பிணைப்புக்காக இந்த நாக பஞ்சமி கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் தெற்கு மாநிலத்தில், பெண்களும், திருமண ஆன மங்கைகளும் சிறிய நெய் அல்லது பச்சை பாலை கொண்டு சகோதரனின் பின்புறமும், தொப்புளிலும், முதுகெலும்பிலும் தேய்க்கின்றனர். இவை அவர்களுடைய கரு பாசத்தை சித்தரிப்பவையாகவும் நினைத்து பகிர்ந்து கொள்கின்றனர். இந்த சம்பிரதாயத்தால், சகோதர-சகோதரி பாசத்தின் பிணைப்பும் வலுவடைவதாக நம்பப்படுகிறது.

English summary

Legends Associated with Naga Panchami

Legends Associated with Naga Panchami
Story first published: Friday, July 28, 2017, 18:30 [IST]
Subscribe Newsletter