சன்னி லியோன் வக்கிரமாக நடந்தக் கொண்ட 7 நிகழ்வுகள்!?

Posted By:
Subscribe to Boldsky

வரும் புத்தாண்டு மாலையில் கொண்டாட்ட நிகழ்வில் பெங்களூருவில் சன்னி லியோன் பங்கேற்பார் என ஒரு செய்தி வெளியானது. இச்செய்தி வெளியானதில் இருந்து கர்நாடகத்தை சேர்ந்த பல அமைப்புகள் இதற்கு போர்க்கொடி தூக்கின.

அதில் அவர்கள் குறிப்பிட்டிருந்த முக்கிய விஷயமானது., சன்னி லியோன் போன்ற பாத்திரமற்ற (நற்குணங்கள்) நபர் பெங்களூரு வந்து கலந்து கொண்டு நிகழ்சிகளில் பங்கேற்பது உள்ளூர் சிறுவர்களையும், பெங்களூர் கலாச்சாரத்தையும் சீரழித்துவிடும் என கூறியுள்ளனர்.

சன்னி லியோன் பங்கேற்க வந்த இடம் பெங்களூரில் அதிகளவில் பார்ட்டிகள் நடக்கும் எம்.ஜி. சாலையில்.சன்னி லியோனின் வருகை கர்நாடகத்திற்கு எதிரானது என்றும் சில அமைப்புகளின் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அவர்கள் கூறியப்படியே ஒரு காலத்தில் அவர் பார்ன் ஸ்டார் தான். இந்தி திரைப்படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்துள்ளவர் தான். ஆனால், அவர் நற்குணங்கள் அற்றவர் என்பது தான் ஏற்புடையது அல்ல.

அப்படி பார்த்தால்... இதோ! இதுவெல்லாம் தான் சன்னி லியோன் இந்தியாவில் செய்த வக்கிரமான விஷயங்கள்...?!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நன்கொடை!

நன்கொடை!

சன்னி லியோன் மும்பையில் முன்னூறு சிறுவர்கள் படிக்கும் பள்ளி ஒன்றுக்கு குறிப்பிடத்தக்கது பெரிய அளவிலான தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளார். இதுகுறித்து எந்த ஊடகத்திற்கும் செய்து அளிக்கவில்லை சன்னி லியோன். இவரது நெருங்கிய வட்டம் மூலம் தெரியவந்த செய்தி இதுவாகும். மேலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம், அந்த பள்ளியில் படிக்கும் சிறுவர்களின் தேவைகள் அறிந்து பூர்த்தி செய்து வருகிறாராம் சன்னி லியோன்.

தத்து!

தத்து!

சன்னி லியோன் ஒரு சீக்கியர் குடும்பத்தை சேர்ந்தவர். இவரது பெற்றோர் இருவரும் இந்தியர்கள் என்ற போதிலும், இவர் இன்டோ-கனடியனாக தான் இருக்கிறார். இவரது கணவர் ஒரு அமெரிக்கர்.

முன்னோர்கள்!

முன்னோர்கள்!

சீக்கியர்கள் தங்கள் பெற்றோர் மற்றும் முன்னோர்களை கடவுளுக்கு இணையாக வணங்குபவர்கள். சன்னி லியோன் ஒரு வயதான தம்பதியை தத்தெடுத்து அவர்களது வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்கி வருகிறார். ஆனால், இதற்கான காரணம் என்னவென்று தெளிவாக தெரியவில்லை.

தொண்டு!

தொண்டு!

புற்றுநோய் தொண்டு நிறுவனங்களுக்கு புற்று நோயாளிகளுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறார் சன்னி லியோன். மேலும், விலங்குகள் காப்பகம் மற்றும் விலங்குகள் வாழ்வாதாரம் காக்கவும் பல உதவிகள் செய்து வருகிறார் சன்னி லியோன்.

தனது பொருட்களை ஏலம்விட்டு அதன் மூலம் கிடைத்த பணத்தையும் இவர் புற்றுநோய் அமைப்புகளுக்கு வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

பிங்க் லிப்ஸ்!

பிங்க் லிப்ஸ்!

ஒரு முறை பிங்க் லிப்ஸ் என்ற படத்தில் கவர்ச்சி நடனம் ஆட ஒப்பந்தம் ஆகியிருந்தார் சன்னி லியோன். அந்த பாடலுக்கு செட் அமைக்கப்பட்டிருந்த இடத்தில் குழந்தைகள் வாழ்ந்து வருவதை கண்டு. அவ்விடத்தில் தன்னால் கவர்ச்சியாக நடனமாட முடியாது. இது குழந்தைகளின் கண்ணோட்டத்தை, பார்வையை மாற்றும் என கூறு மறுத்துள்ளார் சன்னி லியோன்.

கரீனா?

ஆனால், இந்திய சினிமாவின் முதன்மை நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் கரீனா கபூர் சிங்கம் ரிடர்ன்ஸ் என்ற படத்தில் சிறுவர்கள் முன்னிலையில் ஐட்டம் டான்ஸ் ஆடியிருந்தார். அதை யாரும் எதுவும் கேட்கவில்லை. சொல்லப் போனால், சன்னி லியோனுக்கு இருக்கும் கண்ணோட்டம் கூட கரீனாவிற்கு இல்லையே.

ஆதரவற்ற இல்லம்!

ஆதரவற்ற இல்லம்!

சன்னி லியோன் தனது கணவருடன் பல ஆதரவற்றோர் இலங்களுக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அங்கே சென்று அவர்களை மகிழ்வித்து, தன்னால் முடிந்த உதவிகளையும் செய்து வருகிறார் சன்னி லியோன்.

புகையிலை!

புகையிலை!

தான் எந்த ஒரு புகையிலை விளம்பரங்களிலும் நடிக்க மாட்டேன் என்றும். அதற்கு ஆதரவாக எதுவும் செய்ய மாட்டேன் என்றும் பிராமிஸ் செய்திருக்கிறார் சன்னி லியோன்.

தத்துப்பிள்ளை!

தத்துப்பிள்ளை!

சமீபத்தில் சன்னி லியோன் மற்றும் அவரது கணவர் சேர்ந்த ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்தனர். அவளுக்கான சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுப்போம் என வாக்குறுதி அளித்துள்ளனர் இந்த தம்பதி. அதே, போல இப்போது அந்த குழந்தை சிறந்த வாழ்க்கையை வாழ்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மனைவியாக...

மனைவியாக...

சன்னி லியோன் தனது கணவர் டேனியலை காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்த செய்தி தான். இவர்கள் இருவரும் கொஞ்ச காலம் டேட்டிங் செய்து பிறகு திருமணம் செய்துக் கொண்டனர். இதில், சன்னி லியோன் டேனியலை தவிர வேறு யாருடனும் டேடிங் செய்தது இல்லை என்றும் கூறப்படுகிறது.

காதல்!

காதல்!

எந்த இடத்திலும் டேனியல் மீதான தனது காதலை சன்னி லியோன் வெளிகாட்டவோ, பதிவு செய்யவோ தவறியதில்லை. இருவருமே பார்ன் துறையில் பணியாற்றி இருந்தாலும். கணவன் - மனைவியாக சிறந்து தான் விளங்கி வருகிறார்கள். மேலும், பார்ன் துறையில் பணியாற்றும் போதிலும் கூட குழந்தை பார்ன் வீடியோக்களில் முற்றிலும் தோன்ற மறுத்தவர் சன்னி லியோன் என கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Is This The Way Sunny Leone Spreads Vulgarity?

Is This The Way Sunny Leone Spreads Vulgarity?