Latest Updates
-
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
பர்தாவும், பலதரப்பட்ட மக்களின் பார்வையும்!
பர்தா அல்லது வேறு சில பின்பற்றும் முறைகளால் இஸ்லாம் பெண்கள், மற்ற பெண்களுடன் ஒப்பிடும் போது பயனடைகிறார்களா? பயந்து வாழ்கிறார்களா?
பர்தா அணிவது பெண்கள் மூலம் ஆண்கள் சலனப் படாமல் இருக்க இஸ்லாம் பின்பற்றும் முறை. ஆனால், பர்தா அல்லது வேறு சில பின்பற்றும் முறைகளால் இஸ்லாம் பெண்கள், மற்ற பெண்களுடன் ஒப்பிடும் போது பயனடைகிறார்களா? பயந்து வாழ்கிறார்களா?
பலதரப்பட்ட மக்களின் கருத்துகளும், உணர்வு வெளிபாடுகளும்...

ஆண்களுக்கும் பொருந்தும்!
"பர்தா அல்லது புர்கா என கூறப்படும் உடை பெண்கள் உடுத்துவது போல, ஆண்களுக்கும் உண்டு. இதை நீங்கள் பிற இஸ்லாம் நாடுகளில் கண்கூட காண முடியும்.
ஆனால், பிற பகுதிகளில் பெண்கள் மட்டும் தான் பர்தா அணிய வேண்டும். ஆண்களுக்கு எந்த விதிமுறையும் இல்லை என்பது போல தான் இருக்கிறது.
பெண்களால் ஆண்கள் சலனப்பட கூடாது என்பது சரி எனில், ஆண்களால் பெண்கள் சலனப் படக் கூடாது என்பதும் சரி தானே...?"
- பர்வீன்.

நல்லுறவுகள்...
"பர்தா அணிவது ஒருவகையில் நல்லது என்று தான் நான் கூறுவேன். நாம் ஒரு நபரிடம் இரண்டு வகையில் பழகுவோம்.
ஒன்று அவரது நல்ல குணம், பண்புகள் சார்ந்து, மற்றொன்று அவரது உடல் கவர்ச்சி சார்ந்து. உடல் கவர்ச்சி சார்ந்து பழகும் உறவுகள் தான் நம்மை தீய பாதையில் செல்ல, கெட்ட செயல்களில் ஈடுபட வழிநடத்துகிறது.
இவ்வகையில் காணும் போது பர்தா அணிவது ஒரு பெண்ணிடம் கவர்ச்சியின்றி, அவரது அகம் சார்ந்து மட்டுமே ஒரு நல்லுறவில் இணைய உதவும் கருவியாக இருக்கிறது!"
- காஜா.

பெண்களுக்கும் ஆசை உண்டு!
"முன்னர் போல், இப்போது அறுபது, எழுபது வயதுகளிலும் ஆண்கள் உடலுறவில் ஈடுபடுகிறார்களா? என்றால் இல்லை. நாற்பது தொடும் முன்னரே தாம்பத்திய வாழ்க்கைக்குக் முழுக்கு போடும் ஆண்கள் தான் அதிகம் இருக்கிறார்கள்.
இது பெண்களுக்கும் பொருந்தும். ஆனால், மிக சிறு வயதில் பெண்களுக்கு, பெரிய வயது வித்தியாசம் இருக்கும் ஆணுக்கு திருமணம் செய்து வைப்பதால் இருவர் மத்தியிலான ஆசை எழுச்சிகள் ஒரே நேர்கோட்டில் இருக்காது.
இதனால், பல தவறுகள் உறவில் உண்டாக வாய்ப்பிருக்கிறது. மேலும், இதனால் அந்த வயதில் அந்த பெண்ணின் கனவுகள் உடைக்கப்படுகிறது."
- ஜான்ஷா.

உண்மை அழகு!
"ஒரு பெண்ணின் உடல் வடிவம் அல்லது, முக அழகை கண்டு வரும் காதலானது அவற்றை போலவே நிலையற்றது. உண்மையான காதல், பெண் மீது நேர்மையான நேசம் கொள்ள பர்தா உகந்தது தான்."
- இர்பான்.

உருவமற்ற வழிபாடு!
"இஸ்லாமின் அடிப்படையில் உருவமற்ற வழிபாடு தான் பின்பற்ற படுகிறது. இந்த வழியில் திருமணத்தின் போது படம் எடுக்காமல் இருப்பது, வீட்டில் படம் பார்க்காமல், டிவி பார்க்காமல், கேளிக்கை பெரும்பாலும் மறுக்கப்பட்டு இருப்பது சரியா? என்ற கேள்வி எழுகிறது.
பெரும்பாலும் இந்த பிரச்சனை எல்லா இடங்களிலும் காணப்படுவதில்லை எனிலும், இன்றளவும் ஒருசில இடங்களில் இப்படிப்பட்ட தடைகள் இருக்கத்தான் செய்கிறது."
- சிக்கந்தர் பாட்ஷா.

நியூட்டனின் மூன்றாம் விதி!
"அடக்குமுறையின் விளைவு எப்போதும் நியூட்டனின் மூன்றாம் விதியை போல தான் எதிரொலிக்கும்.
நீ இதை செய்ய கூடாது என்று அடக்குமுறைக்கு உட்படுத்தபடும் போது தான், ஒருவருக்குள் அதை மீற வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும்.
இதை ஒரு மதம் சார்ந்து நாம் காண முடியாது. இது பொதுமக்கள் அனைவருக்கும் பொருந்தும். வயது வரம்பின்றி எல்லாரும் இப்படி தான் செயற்படுவர்."
- செல்வா!

பெண்ணுரிமை!
"சிலர் பெண்ணடிமை என்பது ஏதோ இஸ்லாமில் மட்டுமே இருப்பதாக கூறுவது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாத கருத்து. பண்டையக் காலத்தில் எல்லா நாகரீகங்களிலும் பெண்ணடிமை இருந்தது.
அது பாபிலோனியா, கிரேக்கம், எகிப்து, ரோமானியர்கள் என எதில் வேண்டுமானாலும் நாம் காணலாம். இன்றைய உலகில் பெரும்பாலும் பெண்களுக்கான உரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவர்களே அதை எடுத்துக் கொள்கின்றனர். அது அவர்களது பிறப்புரிமை."
- ஜான்!



Click it and Unblock the Notifications
