வோடபோன் விளம்பரத்தில் தோன்றும் இந்த தம்பதி யார்?

வோடபோன் விளம்பரத்தில் தோன்றும் இந்த தம்பதி பத்மபூஷன் விருது வென்றவர்கள்!

நீங்கள் ஐ.பி.எல் போட்டிகள் காணும் போது இவர்களை நிச்சயம் பல சமயம் பார்த்திருப்பீர்கள். வோடபோன் கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியிட்டு சீரீஸ் விளம்பரங்களில் தோன்றி அளப்பரிய லூட்டி செய்தவர்கள் இவர்கள் தான்.

வித்தியாசமான விளம்பரம், புதியமான மாடல்கள் நம் வீட்டு தாத்தா, பாட்டி போன்ற தோற்றம் கொண்டுள்ள இவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. இவர்கள் இந்தியாவின் தலைசிறந்த பரதநாட்டிய கலைஞர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யார் இவர்கள்!

யார் இவர்கள்!

வி.பி. தனஜயன் (78) மற்றும் சாந்தா தனஜயன் (73) இருவரும் பத்மபூஷன் விருது வென்ற பரதநாட்டிய கலைஞர்கள். இவர்கள் சென்னையில் பரதநாட்டியம் கற்பிக்கும் பள்ளியும் நடத்தி வருகிறார்கள்.

வோடபோன் விளம்பரம்!

வோடபோன் விளம்பரம்!

நடனம் சார்ந்த தொழில் செய்து வரும் இவர்கள் இப்போது வோடபோன் விளம்பரங்களில் வீடியோ காலிங், போட்டோ ஷேரிங், மேப் பயன்பாடு போன்றவை பற்றி குறும்புத்தனமாக வெளிப்படுத்தி வருகிறார்கள்.

தனஜயன்!

தனஜயன்!

நிர்வாண ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் எங்களை விளம்பரத்தில் நடிக்க அழைத்தனர். அவர்கள் விரவரித்த விளம்பர மேக்கிங் ஸ்க்ரிப்ட் மிகவும் பிடித்து போனதாலும். வித்தியாசமாக இருந்ததாலும் அதில் நடிக்க ஒப்புக் கொண்டோம் என தனஜயன் அவர்கள் கூறியுள்ளனர்.

விளம்பர தயாரிப்பாளர்!

விளம்பர தயாரிப்பாளர்!

இந்த விளம்பரத்தை உருவாக்கிய நபர், இந்த விளம்பர பிரச்சாரம் இவ்வளவு பெரிய ரீச் பெறும் என நாங்கள் நினைக்கவில்லை. நினைத்ததை விட அதிகமாக பிரபலம் அடைந்துள்ளது என கூறியுள்ளார்.

சிக்கல்கள்!

சிக்கல்கள்!

விளம்பரத்தில் நடிப்பது எளிதாக இருக்கும் என எண்ணினோம். ஆனால், ஸ்கூட்டர் ஓட்ட கற்றுக் கொண்டது. எப்போதும் வேட்டி கட்டிக் கொண்டிருக்கும் நான் ஷார்ட்ஸ் அணிந்துக் கொண்டு நடிப்பது எல்லாம் சற்று கடினமாக இருந்தது என தனஜயன் அவர்கள் கூறியுள்ளார்.

இதற்கு முன்னர்...

இதற்கு முன்னர்...

வோடபோன் மூலம் மிகவும் பலதரப்பட்ட மக்கள் மத்தியில் பிரபலம் ஆகியிருக்கும் இந்த ஜோடி, இதற்கு முன்னர் நேரோலாக் பெயின்ட், குமரன் சில்க்ஸ் மற்றும் சில லோக்கல் விளம்பரங்களில் நடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நடிப்பு!

நடிப்பு!

பரதநாட்டியத்தில் நடிப்பு ஒரு அங்கம் என்பதால், நடிப்பதில் பெரிதாக எந்த சிக்கலும் இல்லை. ஆனால், பாரதத்தில் கொஞ்சம் மிகைப்படுத்தி நடிப்போம், இங்கு இயல்பாக நடிக்க வேண்டியிருக்கிறது என தனஜயன் அவர்கள் கூறியிருக்கிறார்.

திரைப்படம்?

திரைப்படம்?

இந்த அழகான ஜோடியை திரையில் காணும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்குமா? என கேட்டதற்கு. நல்ல கதாப்பாத்திரம் அமைந்தால் நிச்சயம் நடிப்போம் எந்த ஆட்சேபனையும் இல்லை என இவர்கள் கூறுகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, May 23, 2017, 10:47 [IST]
Desktop Bottom Promotion