Latest Updates
-
பங்குனி மாத ராசி பலன் 2026 - இந்த ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...!
உயிரை பணயம் வைக்கும் தம்பதிகள், ஜப்பான் புகைப்பட கலைஞரின் விபரீத முயற்சி!
உயிரை பணயம் வைக்கும் தம்பதிகள், ஜப்பான் புகைப்பட கலைஞரின் விபரீத முயற்சி!
இப்போதெல்லாம் நிச்சயதார்த்தம், திருமணம், திருமணம் வரவேற்ப்பு படங்களுடன், சினிமாட்டிக் ரேஞ்சில் கேண்டிட் போட்டோஷூட், சினிமாட்டிக் வீடியோ ஷூட் எடுப்பதில் புதுமண தம்பதிகள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
வாழ்க்கையில் ஒருமுறை நடக்கும் நிகழ்வு என்பதால் அதை பெரிய நினைவு பெட்டகமாக உருவாக்கிக் கொள்ளவே இந்த போட்டோஷூட்கள் எடுக்கப்படுகின்றன. இதற்காக அதிக செலவு செய்பவர்களும் இருக்கிறார்கள். வெளியூர், வெளிநாடு செல்வது, கடலுக்கு அடியே, வானத்தில் என வித்தியாசமாக போட்டோஷூட்கள் எடுத்துக் கொள்பவர்களையும் நாம் காண முடியும்.
ஆனால், ஹருஹிகோ காவாகுச்சி எனும் ஜப்பானிய புகைப்பட கலைஞர் திருமணத்திற்கு முன்னர் புதுமணத் தம்பதிகள் எடுத்துக்கொள்ளும் ப்ரீனப் போட்டோ-ஷூட்டில் வித்தியாசம் காட்டுகிறேன் என விபரீத செயலில் ஈடுபட்டு வருகிறார்...

கருவறை நிலை!
ஹருஹிகோ காவாகுச்சி ஜப்பானின் டோக்கியோ பகுதியில் வசித்து வருபவர். இவர், கருவறையில் சிசு எந்த நிலையில் இருக்குமோ, அந்த நிலையில் திருமணம் செய்துக் கொள்ள போகும் ஜோடியை படம் எடுக்கிறார்.
Image Credit : Haruhiko Kawaguchi

பிளாஸ்டிக் பைகள்!
ஆனால், கருவறை சிசுவின் நிலையில் தம்பதிகள் ஒரு பிளாஸ்டிக் பையை கொண்டு மூடப்படுகிரார்கள். அவர்களை மூடிய பிறகு, அந்த பையில் இருந்து மொத்த காற்றும் வெளியேற்றப்படுகிறது. இந்த நிலையில் அவர்கள் மூச்சு விட மிகவும் சிரமப்படுவார்கள். காற்று முற்றிலுமாக அகற்றப்பட்டவுடன் ஒருசில நொடிகளில் இவர் படத்தை எடுத்துவிடுவார்.
Image Credit : Haruhiko Kawaguchi

கருத்து!
இந்த போட்டோஷூட்டில் ஒருவரை ஒருவர் இறுக்கமாக கட்டியணைத்தபடி புதுமண ஜோடி இருப்பார்கள். காற்று முற்றிலும் நீக்கப்பட்ட பிறகு, அவர்கள் மத்தியில் ஏற்படும் இறுக்கம், மரணத்தின் அருகாமையில் அவர்கள் சென்று வரும் தருணம், வாழ்நாள் முழுக்க அவர்களுக்குள் இணைப்பிரியா அன்புடன் இருக்க உதவும் என இந்த விபரீத போட்டோஷூட்டிற்கு பின்னே அமைந்திருக்கும் கருத்தை கூறுகிறார் ஹருஹிகோ காவாகுச்சி.
Image Credit : Haruhiko Kawaguchi

உடைகள்!
சில தம்பதிகள் விசித்திரமான உடைகள் அணிந்து வந்து இந்த போட்டோஷூட் எடுத்துக் கொள்கிறார்கள். சில தம்பதிகள் நிர்வாண நிலையில் இந்த போட்டோஷூட் படங்களை எடுத்துக் கொள்கிறார்கள். இந்த போட்டோஷூட் தங்களுக்குள் திருமணத்திற்கு முன்பே பெரிய இறுக்கம் உண்டாக, எங்கள் உறவை முற்றிலும் உணர உதவுகிறது என படம் எடுத்துக் கொள்ளும் ஜோடிகள் தெரிவிக்கின்றனர்.
Image Credit : Haruhiko Kawaguchi

பிரபலம்!
ஜப்பானின் டோக்கியோவில் இப்போது ஹருஹிகோ காவாகுச்சியின் இந்த மூச்சை சிறைப்பிடிக்கும் போட்டோஷூட் மிகவும் பிரபலம். பல புதுமண தம்பதிகள், ஏற்கனவே திருமணம் செய்துக் கொண்டவர்கள், காதலர்கள் இந்த போட்டோஷூட் எடுத்துக் கொள்ள மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
Image Credit : Haruhiko Kawaguchi

பத்து வினாடிகள்!
ஆண், பெண் இருவரும் பிளாஸ்டிக் பையில் முழுமையாக சென்றவுடன், காற்று வெளியேற்றப்படுகிறது. முற்றிலுமாக காற்று வெளியேற்றப்பட்டவுடன் பத்து வினாடிக்குள் இந்த படத்தை எடுத்து விடுகிறார் ஹருஹிகோ காவாகுச்சி. இல்லேயேல் அவர்கள் அவர்கள் மிகவும் சிரமப்படுவார்கள். ஏதேனும் அபாயம் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது என ஹருஹிகோ காவாகுச்சி கூறுகிறார்.
மேலும், போட்டோ எடுக்கும் முன்னரே அந்த ஜோடியின் மூச்சி திறன் பாட்டையும் பரிசோதனை செய்துக் கொள்கிறார்கள்.
Image Credit : Haruhiko Kawaguchi
வீடியோ!
மூச்சை சிறைப்பிடிக்கும் இந்த போட்டோஷூட்டை ஹருஹிகோ காவாகுச்சி எப்படி எடுக்கிறார் என பாருங்கள்!



Click it and Unblock the Notifications











