For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பல கஷ்டங்களைக் கடந்து தன் திறமையால் திரையுலகில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர்கள்!

By Babu
|

மக்களிடையே பிரபலமாவது என்பது அவ்வளவு கஷ்டம் இல்லை. ஆனால் அவர்கள் மனதில் நல்ல இடத்தைப் பிடிப்பது தான் கஷ்டம். அந்த வகையில் திரையுலகில் ஏராளமானோர் பிரபலமானதற்கு காரணம் அவர்களின் திறமை என்று சொல்லலாம். திறமை இல்லாமல் எப்போதும் ஒருவரால் வெற்றி பெற முடியாது.

நம் தமிழ் நடிகர், நடிகைகளின் செல்லக் குழந்தைகளைப் பார்த்துள்ளீர்களா?

அதேப் போல் ஒருவரின் நோக்கம் உறுதியாக இருந்தால், நிச்சயம் வாழ்வில் சிறப்பான இடத்தை அடைய முடியும். அப்படித் தான் நம் திரையுலகில் பிரபலமாக இருக்கும் பலர் ஆரம்ப காலத்தில் சம்பந்தமே இல்லாத பணியில் இருந்து, பின் தங்களுடைய நோக்கம் மற்றும் கடும் முயற்சியால் தற்போது திரையுலகில் கொடிக்கட்டி பறக்கின்றனர்.

அரசல் புரசலாக கசிந்த தமிழ் திரைப்பட பிரபலங்களின் இரகசிய காதல் கதைகள்!!!

அப்படி பல கஷ்டங்களைக் கடந்து திரையுலகில் தன் திறமையால் கொடிக்கட்டி பறக்கும் நடிகர், நடிகைகளின் ஆரம்ப வாழ்க்கை எப்படி இருந்து என்பது குறித்து தான் நாம் பார்க்கப் போகிறோம்.

தமிழ் சினிமாவில் திடீரென்று தற்கொலை செய்து அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நடிகர், நடிகைகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

பல பில்லியன் மக்களைக் கவர்ந்து உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், ஆரம்பத்தில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார் மற்றும் மேடை நாடகங்களிலும் நடித்து வந்தார். பின் நண்பனின் உதவியுடன் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயின்று, 'அபூர்வ ராகங்கள்' படத்தில் சிறு வேடத்தில் நடத்து பிரபலமானார்.

அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சன்

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் ஆரம்பத்தில் கப்பல் நிறுவனத்தில் சிறிய வேலைகளை செய்து வந்தார் மற்றும் அகில இந்திய வானொலியில் ஏற்றஇறக்கமான குரல் என்பதால் நிராகரிக்கப்பட்டார். ஆனால் அவரது குரல் தான் பல ரசிகர்களைக் கவர்ந்து, தற்போது அவரை மெகா ஸ்டாராக்கியுள்ளது.

மம்மூட்டி

மம்மூட்டி

நடிகர் மம்மூட்டி ஆரம்ப காலத்தில் ஓர் வக்கிலாக இருந்தார். பின் நடிப்பின் மீதுள்ள ஆசையால் திரையுலகில் முயன்று, தற்போது மிகவும் பிரபலமான ஒருவராக உள்ளார்.

அஜித்

அஜித்

நடிகர் அஜித் ஆரம்பத்தில் மெக்கானிக்காக பணியாற்றினார். பின் நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால், தமிழ் திரையுலகில் ஆசை என்னும் படத்தின் மூலம் நுழைந்தார். முக்கியமான விஷயம், இவர் தமிழ் திரைப்படங்களில் நடித்து தான் தமிழ் பேசவேக் கற்றுக் கொண்டார்.

அக்ஷய் குமார்

அக்ஷய் குமார்

நடிகர் அக்ஷய் குமார் முதலில் பாங்காங்கில் தற்காப்பு கலை பயின்றார். பின் இந்தியாவிற்கு வந்து தற்காப்பு கலையை பயிற்றுவித்தார். ஒருநாள் அவரது மாணவர் மாடலிங்கில் முயற்சி செய்யுமாறு பரிந்துரைக்க, அவர் அதனை முயற்சித்து தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக உள்ளார்.

விக்ரம்

விக்ரம்

நடிகர் விக்ரம் கூட பல கஷ்டங்களைக் கடந்து தான் திரையுலகில் பிரபலமானார். இவர் திரையுலகில் காலடி பதிக்கும் முன், சோழா தேநீர், டி வி எஸ் மற்றும் ஆள்வின் போன்ற நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்தார். திரையுலகில் நடிக்க ஆரம்பிக்கும் காலத்தில் பல தொடர் சரிவுகளைக் கண்டவர், மனம் தளராமல் தொடர்ந்து முயன்று இன்று திரையுலகில் நல்ல நிலையில் உள்ளார்.

ரன்வீர் சிங்

ரன்வீர் சிங்

பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங் ஆரம்ப காலத்தில் பிரதி எழுத்தாளராக இருந்தார். இவருக்கு திரையுலகில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும், அதை சரியாக பயன்படுத்தி, தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகராக உள்ளார்.

அரவிந்த் சாமி

அரவிந்த் சாமி

அரவிந்த் சாமி ஆரம்ப காலத்தில் தொழிலதிபராக இருந்தார். பின் மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தின் மூலம் திரையுலகில் காலடி பதித்தார். இவர் அதிக திரைப்படம் நடிக்காவிட்டாலும், இவர் நடித்த படங்கள் அனைத்துமே வெற்றிப்படங்களாக அமைந்தன. தற்போது மீண்டும் திரையுலகில் 'தனி ஒருவன்' படத்தின் மூலம் காலடி பதித்து, முன்னணி நடிகர்களுள் ஒருவராக உள்ளார்.

சித்தார்த் மல்ஹொத்ரா

சித்தார்த் மல்ஹொத்ரா

பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹொத்ராவிற்கு மாடலிங்கில் ஆர்வம் இருந்தது. பின் உதவி இயக்குநராக பணியாற்றினார். தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக உள்ளார்.

மாதவன்

மாதவன்

நடிகர் மாதவன் திரையுலகில் காலடி பதிக்கும் முன், ஆளுமை வளர்ச்சி பயிற்றாளராக இருந்தார். பின் நடிப்பின் மீதுள்ள ஆசையால், திரையுலகில் நுழைந்தார். 'சாக்லேட் பாய்' என்று பெண்களால் அழைக்கப்பட்டார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Indian Celebrities Whose Stories Will Inspire You

There are some celebrities who have become stars and super stars today but they were not so decades ago. They all started small, did some simple jobs but had a vision and a dream inside their hearts.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more