கன்னி கழியாமல் சந்தோஷமாக வாழும் இந்திய நடிகைகள்!!

Posted By:
Subscribe to Boldsky

திருமணம் தான் ஒருவரது வாழ்வில் நறுமணம் பொங்க வைக்கும் என்று கூறுவார்கள். ஆனால், இதெல்லாம் வேண்டாம் சரிப்பட்டு வராது என்று திருமணத்தை இன்று வரை தவிர்த்து வரும் நடிகைகள் பலர் இருக்கின்றனர்.

பாலியல் சார்ந்த நோய்களினால் பாதிக்கப்பட்ட பிரபலங்கள்!!!

இதில் வேதனை என்னவெனில் இவர்கள் அனைவரும் இவர்களது இளம் வயதில் பல ஆண்களின் மனதை கொள்ளையடித்த நடிகைகள். அழகையும், கவர்ச்சியையும் பாலும், தேனுமாய் காட்டி, ஊட்டி ரசிகர்களை உசுப்பேற்றிவிட்டு பின் திருமணத்திற்கு மட்டும் "நோ" சொல்லிவிட்டனர் இவர்கள்.

தன் படத்தில் நடித்த நடிகைகளை உஷார் பண்ணிய இயக்குநர்கள்!

இப்படி கன்னி கழியாமல் முதிர் கன்னியாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் நம்ம ஊர் நடிகைகள் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டுமா...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நக்மா

நக்மா

பாட்ஷாவின் நாயகியாக தொண்ணூறுகளில் உச்சத்தில் இருந்தார் நக்மா. கங்குலியின் காதலி என சில காலம் பு(இ)கழாரமும் சூடிக்கொண்டார். ஜோதிகாவின் அக்காவான இவர் இன்று வரை திருமணம் செய்துக் கொள்ளவில்லை.

கௌசல்யா

கௌசல்யா

"ஒரு மணி அடித்தால் பெண்ணே உன் ஞாபகம்" என்ற முரளியை பித்து பிடிக்க வைத்தவருக்கு, இன்று வரை யார் மேலும் பித்து பிடிக்கவில்லையாம். நாற்பதை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷோபனா

ஷோபனா

உண்மையில் இவருக்கு திருமணத்தில் விருப்பம் இல்லையாம். நாட்டிய பேரொளி பத்மினிக்கு இவர் மகள் முறை. ஆனால் எத்தனை முறை சொல்லியும் தனது முடிவை மட்டும் இவர் மாற்றிக் கொள்ளவே இல்லை.

நமீதா

நமீதா

இன்றும் தான் பதினாறு தான் என்று பீலாய் விட்டுக் கொண்டிருக்கும் இந்த பீப்பாய்க்கு வயது முப்பதை தாண்டிவிட்டது. திருமணம் செய்துக் கொள்ள கூறினால், இல்லை... இல்லை... நான் அரசியலில் தான் குளிப்பேன், மன்னிக்கவும் குதிப்பேன் என்று புதிதாய் அடம் பிடிக்கிறார். (உன் வெயிட்ட இந்த நாடு தாங்காது தாயி)

சதா

சதா

ஜெயம், அந்நியன் காலகட்டத்தில் எப்போதும் இந்த சதா பேச்சாக தான் இருந்தது. ஆனால், மிக விரைவிலேயே சதா சாதா ஆகிவிட்டார். இப்போது வடிவேலுடன் எலி பிடித்துக் கொண்டிருக்கிறார்.

ஸ்ரேயா

ஸ்ரேயா

இவர் மட்டும் சிவாஜியில் ரஜினியுடன் நடிக்காமல் இருந்திருந்தால், கோலிவுட் ரசிகர்கள் மறந்துப் போயிருப்பார்கள். எந்த காலத்து புண்ணியமோ நடித்துவிட்டார். இவர்கள் எல்லாம் பெண்ணுக்கு திருமண வயது 18 என்பதை தெரிந்துக் கொள்ள மறந்துவிட்டனர் போல.

சங்கவி

சங்கவி

இவர் சென்ற நூற்றாண்டு நடிகை, எனவே இந்த தலைமுறையினர் இவரை நினைவில் வைத்திருக்க வாய்ப்பில்லை. விஜய்யின் ஆரம்பப் படங்களில் வேறு நடிகை கிடைக்கவில்லையோ என்னவோ இவர் மட்டும் தான் ஜோடி சேர்ந்து நடித்தார். இப்போது கொஞ்சம் பேருக்கு இவர் நினைவுக்கு வர வாய்ப்புகள் இருக்கிறது. ஐவரும் இன்று வரை திருமணம் செய்துக் கொள்ளவில்லை.

நயன்தாரா

நயன்தாரா

நயன்தாரா!!! இந்த பெயர் சொன்னாலே பல இளவட்ட இதயங்கள் "கிர்ர்" என்று ஆகிவிடும். முப்பது வயது என்பது முதிர் கன்னி வயது தான் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள். ஆனால், இன்னும் சிலர் இவரை கனவுக்கன்னி என்று நினைத்து வருகிறார்கள்.

அனுஷ்கா

அனுஷ்கா

ஆண்டி வயதை எட்டியும், இன்று வரை ஆடி பாடி திரிந்து வருகிறார். இவருக்கு வயது 33 ஆகிவிட்டது என்பது எத்தனை பேருக்கு தெரியும்???

தபு

தபு

கண்டுகொண்டேன்... கண்டுகொண்டேனில் மட்டும் காதலை கண்டுகொண்டவர், வேறு எங்கும் காதலை கண்டுக் கொள்ளவில்லை போல, திருமணமும் செய்துக் கொள்ளவில்லை.

சுஷ்மிதாசென்

சுஷ்மிதாசென்

பலர் நெஞ்சங்களை ஆட்டிப்படைத்த பிரபஞ்ச அழகி, நாற்பதை தாண்டிவிட்ட இவர் இனி திருமணம் செய்தால் என்ன செய்யாவிட்டால் என்ன என்றாகிவிட்டது. ஆனாலும், சொல்லு வேண்டியது நமது கடமை அல்லவா!!!

ப்ரீத்தி ஜிந்தா

ப்ரீத்தி ஜிந்தா

இவரும் நாற்பதை எட்டிப்பிடிக்க காத்திருக்கும் முதிர்கன்னி தான். இவரது காதல் வலையில் அவ்வப்போது விழும் ஓட்டைகள் இவரது திருமணத்தை பகல் கனவாக்கிவிட்டது.

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

மேரி கோம்மாக நடித்தவருக்கு இன்னும் "மேரீ"(Marry) பண்ணிக்க மட்டும் தோணவே இல்லை.

 மல்லிகா ஷெராவத்

மல்லிகா ஷெராவத்

இவர் திருமணம் செய்துக் கொள்வார் என்று நீங்கள் நினைத்தால், அது உங்கள் தவறு மல்லிகாவுடையது அல்ல.

பிபாசா பாசு

பிபாசா பாசு

ஜான் ஆபிரகாம் உடன் காதலில் திளைத்துக் கொண்டிருந்த இவர், திடீரென காதலை முறித்துக் கொண்டார். அதன் வருத்தமோ என்னவோ 36 ஆகியும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை இந்த முதிர்ந்து போன கன்னி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Happily Unmarried Bollywood Divas Who are Above Thirty

How said marriage is the only thing to realize the true happy. These bollywood divas still unmarried and lives happily even after thrity.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter