For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Raksha Bandhan 2020: ரக்ஷா பந்தன் ஏன் இவ்வளவு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது?

அனைத்து சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கும், ரக்ஷாபந்தன் என்பது மிகவும் விசேஷமான நிகழ்வாக உள்ளது. இந்து மாதமான ஆடி மாதத்தில் பௌர்ணமி தினத்தன்று இந்த ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

By Ashok CR
|

ரக்ஷா பந்தன் என்பது மிகவும் பிரபலாமான இந்து பண்டிகையாகும். சகோதரனுக்கும் சகோதரிக்கும் இடையேயான பந்தத்தை கொண்டாடும் பண்டிகையே இது. இந்தியாவில் உள்ள பழமையான பண்டிகைகளில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது. அதனால் இதனுடன் பல புராணங்களும் வரலாறுகளும் இணைந்துள்ளது. ரத்த சம்பந்தம் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அனைத்து சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கும், ரக்ஷாபந்தன் என்பது மிகவும் விசேஷமான நிகழ்வாக உள்ளது. இந்து மாதமான ஆடி மாதத்தில் பௌர்ணமி தினத்தன்று இந்த ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளை ராக்கி பூர்ணிமா என்றும் அழைக்கின்றனர்.

Why Is Rakshabandhan Celebrated?

மரபு படி, சகோதரர்களின் கை மணிக்கட்டில் ராக்கி என்ற நூலை சகோதரிகள் கட்டுவார்கள். தீயவைகளில் இருந்து அவர்களை காக்கும் அடையாளத்தை அது குறிக்கும். அதற்கு கைமாறாக, அனைத்து விதமான துன்பங்களில் இருந்து தன் சகோதரியை காத்து அவர்களின் வாழ்நாள் முதுவதும் அவர்களை பார்த்து கொள்வதாக சகோதரர்கள் சத்தியம் செய்வார்கள்.

MOST READ: ரக்ஷா பந்தனுக்கு பின்னணியில் உள்ள புராண கதைகள்!!!

அதனால் தான் ரக்ஷா பந்தன் என்பது சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு இடையேயான பந்தத்தை குறிக்கும் பண்டிகை என கூறினோம். அந்த வார்த்தையே பாதுகாப்பதற்கான பந்தம் என பொருள் தரும். பாதுகாப்பது என்பது சகோதரன் மற்றும் சகோதரி என இரண்டு பேர்களுக்கும் பொருந்தும். இது ஒரு சமுதாய பிணைப்பாகவும் திகழ்கிறது.

இது சகோதர சகோதரிகளுக்கான புகழ்பெற்ற பண்டிகை என்றாலும் கூட, பாதுகாப்பின் அடையாளமாக ராக்கியை மனைவி தன் கணவனுக்கு கட்டலாம் அல்லது தாய் மகனுக்கு கட்டலாம். பெண்கள் பெரிய மனிதர்களுக்கு ராக்கி கட்டிய பிணைப்பின் அடையாளமாக எப்படி பல பேரழிவுகள் தடுக்கப்பட்டது என்பதற்கு இந்திய வரலாறுகள் முழுவதும் பல உதாரணங்கள் நிறைந்துள்ளது.

சரி, இது எங்கே தொடங்கியது என உங்களுக்கு தெரியுமா? ஏன் ரக்ஷா பந்தன் இவ்வளவு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ராக்கி பற்றிய இதிகாசங்களும்... புராணங்களும்...

ராக்கி பற்றிய இதிகாசங்களும்... புராணங்களும்...

ரக்ஷா பந்தன் பண்டிகையைச் சுற்றி பல விதமான இதிகாசங்களும் புராணங்களும் சூழ்ந்துள்ளது. அதில் ஒன்று இப்படி கூறுகிறது - இந்திரனை ஒரு அசுரன் தாக்கி, இந்திரனின் இருப்பிடமான அமராவதியை கைப்பற்றினான். அப்போது இந்திரனின் மனைவியான சச்சி விஷ்ணு பகவானிடம் சென்று உதவி கோரினார். சச்சியை துன்பம் வரும் வேளையில் அவர் காத்திட, புனிதமான ஒரு பருத்தி நூலை சச்சியின் கையில் கொடுத்த விஷ்ணு பகவான், அதனை அவர் கை மணிக்கட்டில் கட்ட சொன்னார். அதனை விஷ்ணு பகவானின் கையில் கட்டினார் சச்சி. அதனால் அந்த அசுரனை விஷ்ணு பகவானால் வீழ்த்த முடிந்தது. அதில் இருந்து வந்தது தான் ராக்கி எனப்படும் பாதுகாப்பு நூல்.

ராக்கி பற்றிய இதிகாசங்களும்... புராணங்களும்...

ராக்கி பற்றிய இதிகாசங்களும்... புராணங்களும்...

கிருஷ்ண பரமாத்மா கையில் திரௌபதி ராக்கி கட்டியதை போல் பல இதிகாசங்கள் உள்ளது. பார்வதி தேவி விஷ்ணு பகவானின் கை மணிக்கட்டில் ராக்கி கட்டினார் என சமயத் திரு நூல்கள் கூட கூறுகிறது. அதற்கு கைம்மாறாகா, ஆபத்து வரும் நேரத்தில் பார்வதி தேவியை காப்பதாக விஷ்ணு பகவான் சத்தியம் செய்து கொடுத்தார்.

ராக்கி பற்றிய வரலாற்று குறிப்பீடுகள்

ராக்கி பற்றிய வரலாற்று குறிப்பீடுகள்

ஒரு கதையின் படி, மாவீரர் அலெக்சாண்டர் இந்தியாவை தாக்கிய போது, போரஸ் மன்னரால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். போரும் நடந்தது. இந்த நேரத்தில், அலெக்சாண்டரின் மனைவியான ரோக்சானா புனித கயிறு (ராக்கி) ஒன்றினை போரசிற்கு அனுப்பி வைத்தார். அதனுடன் சேர்த்து போரில் தன் கணவனை கொள்ள கூடாது என்ற கோரிக்கை கடிதம் ஒன்றினையும் அனுப்பி வைத்திருந்தார். அதனால், போரின் போது, தன் கையில் இருந்து ராக்கி கயிறுக்காக, அலெக்சாண்டரின் உயிரை எடுக்காமல் விட்டார் போரஸ்.

ராக்கி பற்றிய வரலாற்று குறிப்பீடுகள்

ராக்கி பற்றிய வரலாற்று குறிப்பீடுகள்

மற்றொரு உதாரணமாக, விதவையான சித்தூரின் ராணி கர்ணாவதி ஹுமாயுன் பேரரசருக்கு ராக்கி கயிறு ஒன்றை அனுப்பி வைத்தார். பகதூர் ஷா சுல்தான் படையெடுத்து வந்தால் தன் அரசாட்சியை காக்க முடியாது என அறிந்த கர்ணாவதி, ஒரு கடிதத்துடன் ராக்கி கயிறு ஒன்றையும் சேர்த்து அனுப்பி பேரரசர் ஹுமாயுனிடம் உதவி கோரினார். இதை பார்த்து மனம் இளகி போன ஹுமாயுன், உதவிக்காக தன் படையை அனுப்பி வைத்தார். ஆனால் துரதிஷ்டவசமாக அவர் படை தாமதமாக வந்ததால், அதற்குள் விதவை ராணியும் மற்ற பெண்களும் தங்கள் கண்ணியத்தை காத்துக் கொள்ள தற்கொலை செய்து கொண்டனர். அதன் பின் பகதூர் ஷாவை வெளியேற்றி அந்த அரசாட்சியை கர்ணாவதியின் மகனான விக்ரம்ஜித்திடம் ஒப்படைத்தார் ஹுமாயுன்.

இந்திய முழுவதும் ரக்ஷாபந்தன்

இந்திய முழுவதும் ரக்ஷாபந்தன்

ராக்கி பூர்ணிமா தினம் மிகவும் புனிதமான தினமாக கருதப்படுகிறது. ராக்கி கட்டும் சடங்கு போக, இந்த பண்டிகையின் போது, இந்திய முழுவதும் இன்னும் பல சடங்குகளும் பின்பற்றப்படுகிறது. வட இந்தியாவில், கோதுமை மற்றும் பார்லி போன்ற பயிர்கள் நடப்படும்போது, பகவதி தேவியை வணங்கும் போது, ராக்கி பூர்ணிமாவை கஜரி பூர்ணிமா என்றும் அழைக்கின்றனர். மேற்கு இந்தியாவில், இதனை நாரியல் பூர்ணிமா என அழைக்கின்றனர். அன்று வருண பகவானான கடல் பகவானுக்கு தேங்காய் வைத்து படைப்பார்கள். தென் மாநிலங்களில் இதனை ஷ்ரவன் பூர்ணிமா என அழைக்கின்றனர். இதனை மிகவும் புனிதமான நாளாக கருதுகின்றனர்.

ரக்ஷா பந்தனின் முக்கியத்துவம்

ரக்ஷா பந்தனின் முக்கியத்துவம்

ரக்ஷா பந்தன் பண்டிகை என்பது சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு இடையேயான அன்பு பந்தத்தை வலுப்படுத்துவதாகும். மேலும் தூரத்து குடும்ப உறுப்பினர்களை ஒன்றாக இணைக்கவும் இது உதவுகிறது. ஆன்மீக நோக்கில் இந்த பண்டிகையை பார்க்கையில், எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்களில் புனிதத்துடன் வாழ்வதாக, இந்த தினத்தன்று ஒருவர் சத்தியம் செய்வார். வலது கையில் கட்டப்படும் ராக்கி என்ற இந்த புனிதமான கயிறு ஒரு அடையாளமாகும். உலகத்தில் உள்ள தீமைகளில் இருந்தும் பொருள் முதல்வாத பிடியில் இருந்தும் ஆன்மிகம் மூலமாக நம்மை பாதுகாத்த கொள்ள இது ஒரு மென்மையான நினைவூட்டலாகும். பாசமிகு சகோதரியால் தன் சகோதரனின் கை மணிக்கட்டில் கட்டப்படும் இந்த புனிதமான ராக்கி என்பது அவளின் நம்பிக்கை என்ற உணர்ச்சியை வெளிப்படுத்தும் சடங்காகும். மேலும் ஆன்மீக பார்வையில் தன் சகோதரன் வழிநடத்தப்பட வேண்டும் எனவும் அவர் விரும்புவார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Raksha Bandhan 2020: Why Is Rakshabandhan Celebrated?

Rakshabandhan is a mark of bonding between brothers and sisters. The word itself means a bond of protection which implies protection from both sides. Do you know how did it all start and why is Rakshabandhan celebrated with such huge enthusiasm? Read on to find out.
Desktop Bottom Promotion