வித்யா பாலன் சமீபத்தில் தான் நடித்த படங்களை விளம்பரப்படுத்தும் போது மிகவும் கேவலமான ஸ்டைலை பின்பற்றி வந்திருந்தார். பொதுவாக வித்யா பாலனுக்கு புடவை தான் சூப்பராக இருக்கும். ஆனால் அவருக்கு அது போர் அடித்துவிட்டது போல் தெரிகிறது. அதனால் தான், அவர் சமீபத்தில் பல்வேறு ஃபேஷனான உடைகளை அவரது படங்களை விளம்பரப்படுத்தும் போது அணிந்து வந்தார். இங்கு அப்படி வித்யா பாலன் மேற்கொண்ட கேவலமான ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
மெரூன் நிற உடையில் வித்யா பாலன்
இது வித்யா பாலன் முழுங்கால் அளவுள்ள மெரூன் நிற உடைக்கு கொஞ்சம் கூட பொருத்தமில்லாத ஹேர் ஸ்டைல் மற்றும் க்ரே நிற ஹீல்ஸ் போட்டு படு கேவலமாக வந்த போது எடுத்தது.
எலுமிச்சை பச்சை நிற உடையில் வித்யா பாலன்
வித்யா பாலன் இந்த போல்கா டாட்ஸ் கொண்ட எலுமிச்சை பச்சை நிற மேக்ஸி உடைக்கு, சம்பந்தமே இல்லாமல் லெதர் பெல்ட் போட்டு வந்திருந்த போது எடுத்தது.
அனுபமா குர்தாவில் வித்யா பாலன்
வித்யா பாலன் மேற்கொண்ட ஸ்டைலிலேயே மிகவும் கேவலமானது என்றால் அது இது தான்.
சாம்பல் நிற மேக்ஸியில் வித்யா பாலன்
வித்யா பாலன் இந்த உடைக்கு மேற்கொண்ட ஹேர் ஸ்டைல் மற்றும் கைகளுக்கு போட்டுள்ள பலவண்ண வளையல்கள் அவரது அழகையே கெடுக்கிறது.
கட்டம் போட்ட குர்தாவில் வித்யா
வித்யா பாலன் சற்று வித்தியாசமாக ஏதோ முயற்சித்துள்ளார். என்ன புரியவில்லையா? ஆம், இவர் கட்டம் போட்ட குர்தாவிற்கு பிரிண்ட்டட் ஸ்கர்ட் போட்டு வந்திருப்பதைத் தான் சொல்கிறோம்.
பங்கஜ் மற்றும் நிதி உடையில் வித்யா
வித்யா பாலன் இந்த உடையில் செய்த தவறு என்னெவென்று கேட்டால், இந்த பிரிண்ட்டட் ஸ்கர்ட்டிற்கு கருப்பு நிற லெக்கின்ஸ் போட்டு வந்து அந்த உடையின் அழகையே கெடுத்துவிட்டார்.
நீல நிற உடையில் வித்யா பாலன்
வித்யா பாலன் இதில் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தாலும், இப்படி லோ நெக் கொண்டவாறான உடையை அணிந்து வர வேண்டுமா என்ன...?
கட்டம் போட்ட பிரிண்ட்டட் உடையில் வித்யா பாலன்
இதுவரை மேற்கொண்ட ஸ்டைலிலேயே வித்யா பாலன் இந்த உடையில் தான் அழகாக உள்ளார் என்று சொல்லலாம்.



Click it and Unblock the Notifications