பாலிவுட்டில் உள்ள பிரபல நடிகைகளில் ஒருவர் தான் வித்யா பாலன். இவருக்கு என்ன தான் ஃபேஷன் சென்ஸ் குறைவாக இருந்தாலும், சமீபத்தில் துபாயில் தான் நடித்த படத்தினை விளம்பரப்படுத்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கு கொள்ளும் போது, மிகவும் அழகான அனார்கலியில் வந்திருந்தார். இங்கு துபாய் நிகழ்ச்சியில் வித்யா பாலன் பங்கு கொள்ளும் போது மேற்கொண்ட ஸ்டைல் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்த்து எப்படி இருந்தார் என்று சொல்லுங்கள்.
அனிதா டாங்ரே அனார்கலியில் வித்யா பாலன்
வித்யா பாலன் துபாய் நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் போது, டிசைனர் அனிதா டாங்ரே வடிவமைத்த சந்தன நிற அனார்கலி உடையை அணிந்து சென்றார். இந்த உடை அவருக்கு மிகவும் அழகாக இருந்தது.
வித்யா பாலனின் மேக்கப்
வித்யா பாலன் உடைக்கு பொருத்தமாக மேக்கப் போட்டு வந்திருந்தார். அதிலும் அவர் உதட்டிற்கு போட்டு வந்த மெரூன் நிற லிப்ஸ்டிக் அவரது அழகை அதிகரித்து காட்டியது.
வித்யா பாலனின் காலணி
வித்யா பாலன் உடைக்கு பொருத்தமான சந்தன நிற ஹீல்ஸ் கொண்ட காலணி அணிந்து வந்திருந்தார்.
வித்யா பாலனின் ஆபரணங்கள்
வித்யா பாலன் அனார்கலி உடையில் பளிச்சென்று தெரிய காதுகளுக்கு நீளமான மற்றும் பெரிய காதணியையும், கை விரலில் பெரிய மோதிரமும் அணிந்து வந்திருந்தார்.
நடனம் ஆடிய வித்யா பாலன்
இது வித்யா பாலன் அந்நிகழ்ச்சியில் நடனம் ஆடிய போது எடுத்தது.



Click it and Unblock the Notifications