For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அக்ஷய திருதியையின் மகத்துவமும் முக்கியத்துவமும்..!

By Srinivasan P M
|

"ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு" என்றார் திருவள்ளுவர். இது எந்த காலத்திற்கும் பொருந்தும். அண்ட சராசரங்களும் ஒர் மர்ம்மானவை என்பதோடு மட்டுமல்லாமல் தமக்கென ரகசியமான விதிகளைக் கொண்டவை. இதில் வெற்றியளிக்கக் கூடிய ஒரு முக்கியமான ரகசியம் மனமுவந்து பிறருக்கு உதவுதல் ஆகும்.

இதில் மிக உன்னத நிலையை அடைந்தவர்கள் தூய மனதுடன் பிறர்க்கு கொடுத்து உதவுதலின் சக்தியை நன்கு உணர்ந்திருக்கின்றனர். அவ்வாறு செய்வதால் நீங்கள் அளித்தது நீங்கள் எதிர்ப்பார்த்த்தை விட பன்மடங்காகத் திரும்ப வரும் என்று நம் முன்னோர் அறிந்திருந்தனர். நீங்கள் இந்த பழமை வாய்ந்த புகழ்மிக்கப் கொடுத்து உதவும் பழக்கத்தை புனிதமான தங்கமான "அக்ஷய திருதியை" நாளன்று மேற்கொண்டால் அதன் மூலம் உன்னத பலன்களை அடைய முடியும். தங்கமான நாளென்றால் தங்கம் வாங்கும் நாள் என்று பொருள் கொள்ளக் கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மிகவும் சிறப்பான நாள்

மிகவும் சிறப்பான நாள்

இந்த நாள் கொடுத்து உதவுதலுக்கு மிகவும் பலன் தரக்கூடிய சக்தி வாய்ந்த நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் சூரியனும் சந்திரனும் மிகவும் பிரகாசமாகத் தோன்றும் என்பதும் அன்று தானம் செய்வது மிகவும் புன்னியத்தைத் தரக்கூடியது எனவும் கருதப்படுகிறது. நீங்கள் கொடுக்கும் பணம் அல்லது பொருளை இந்த நாளில் வணங்கிக் கொடுப்பதன் மூலம் அது பன்மடங்காகப் பெருகுவதை நீங்கள் கண்கூடாகப் பார்க்கலாம். "பசித்திருக்கும் ஒரு மனிதனுக்கு உணவளிப்பதும் ஏழைகளுக்கு அவர்களுக்குத் தேவையான பொருட்களை கொடுத்து உதவுவதும் ஆன்மீக ஆசியையும் விரும்பிய பொருட்களைப் பெறுவதற்கும் உகந்த வழியாகும்.எனவே இந்த நாளில் கொடுப்பது உங்களுக்குப் பன்மடங்காகத் திரும்பக் கிடைக்கும் (நீங்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை என்றாலும்). நீங்கள் எதாவது தானம் செய்யத் திட்டமிட்டிருந்தால், அதற்கு உகந்த தினம் இதுதான்.

தங்கத்தை ஏன் வாங்க வேண்டும்?

தங்கத்தை ஏன் வாங்க வேண்டும்?

கடவுள் இந்த உலகத்தைப் படைக்கும் போது முதலில் உச்சரித்த வாசகம் இந்த குறைவில்லாத என்ற பொருளுடைய "அக்ஷ்ய" என்ற வார்த்தையைத் தான் என்று நம்பப்படுகிறது. எனவே சொத்தைச் சேர்ப்பதற்கு உகந்த ஒரே நாள் இது. தங்கம் நல்ல அதிர்ஷ்டத்திற்கும், வளர்ச்சிக்கும் அடையாளமாக இருப்பதால் பலர் இந்த நாளில் தங்கத்தை வாங்குகின்றனர்.

செல்வ தொடர்பான பாவம் நீங்க...

செல்வ தொடர்பான பாவம் நீங்க...

நம்பிக்கைகளின் படி, சொர்க்கத்தின் பொருளானாகிய குபேரன் இந்த நாளில் தான் அனைத்து செல்வங்களையும் சிவபெருமானிடமிருந்து பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த நாளில் தான் சிவபெருமான் லக்ஷ்மி தேவியை செல்வத்தின் கடவுளாக ஆசிர்வதித்து அருளினார். சிவபுரம் என்ற கோவிலில், குபேரன் சிவபெருமானை வழிபட்டார். இந்தக் கோவிலின் சுற்றியுள்ள நிலப்பகுதிகளின் கீழே பல்லாயிரக்கணக்கான சிவலிங்கங்கள் புதைந்து கிடக்கிறது. இங்கு வேண்டுவதன் மூலமோ அல்லது உங்கள் காலடி இங்கு படுவதன் மூலமோ உங்கள் செல்வத் தொடர்பான பாவங்கள் நீங்கும் என்கிறார்கள்.

ஏழைகளுக்கு உதவுவது நல்லது

ஏழைகளுக்கு உதவுவது நல்லது

ஏழைகளுக்கு உதவுவது மிகவும் முக்கியமாகக் கருதப்படும் ஒரு அறச்செயலாகும். மேலும் குடைகள் மற்றும் காலனிகளை ஏழைக் குழந்தைகளுக்குக் கொடுப்பது நல்லது என சிலர் கூறுகிறார்கள். மூன்றாம் பிறையன்று செய்யப்படும் பூஜை மற்றும் நற்காரியங்கள் நல்ல பலனைத் தரும் என நம்பப்படுகிறது.

தங்கம் மற்றும் நகைகள் வாங்குதல் நிச்சயமாக வேதங்களில் குறிப்பிடப்படவில்லை. இவையெல்லாம் குறுகிய எண்ணம் கொண்டவர்களால் மத நம்பிக்கையுள்ளவர்களைக் கவரவும், வியாபாரத்தைப் பெருக்கவும் செய்யப்பட்டத் தந்திரங்கள்.

நற்காரியங்கள் செய்தால் கிடைக்கும் பலன்கள்

நற்காரியங்கள் செய்தால் கிடைக்கும் பலன்கள்

1. நீங்கள் கொடுத்து உதவுதல் மூலம் மரணத்தை வெல்லலாம்

2. ஏழை எளியோர்க்கு உதவினால் உங்கள் அடுத்தப் பிறவியில் நன்கு ஆசிர்வதிக்கப்படுவீர்கள்.

3. ஏழைகளுக்குத் துணிகள் அளித்தால், உங்கள் நோய்கள் நீங்கும்

4. பழங்களை நீங்கள் தானமாக அளித்தால், வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவீர்கள்

5. நீங்கள் தயிர் அல்லது மோர் ஆகியவற்றை வழங்கினால் கல்வியறிவு உயரும்

6. தானியங்களைத் தானமாக வழங்கினால், அகால மரணத்தைத் தவிர்க்கலாம்.

7. அன்று நீங்கள் தர்ப்பணம் என்னும் எள் மற்றும் நீர் விட்டால் உங்கள் ஏழ்மை நீங்கும்

8. அன்று தயிர் சாதம் தானமாக வழங்கினால், உங்கள் வாழ்கையில் உள்ள எதிர்ப்புகள் நீங்கி நன்கு முன்னேறுவீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Significance & Importance of Akshaya Tritiya

You can practice this ancient science of giving to get supreme benefits on the sacred "Akshaya Trtiya" or "Day of Gold". No, this doesn't mean gold buying day. This day is the 3rd moon that falls during Mid-April and Mid May every year, is considered to be the single most powerful day for charities.
 
Desktop Bottom Promotion