பாலிவுட்டில் தமன்னா நடித்து வெளிவரவிருக்கும் 'ஹம்சகல்ஸ்' என்னும் திரைப்படத்தினை மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்துவதற்கு தமன்னா பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அழகான தோற்றத்தில் சென்று கலந்து கொண்டு வருகிறார். அதிலும் சமீபத்தில் ஜீ டிவியில் நடைபெறும் லிட்டில் மாஸ்டர் சீசனில் கலந்து கொண்டு வருகிறார். இங்கு ஜீ டிவியில் ஒளிப்பரப்பாகும் லிட்டில் மாஸ்டர் நிகழ்ச்சிக்கு தமன்னா மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
கருப்பு மற்றும் வெள்ளை நிற உடை
தமன்னா ஜீ டிவியில் ஒளிப்பரப்பாகும் லிட்டில் மாஸ்டர் நிகழ்ச்சிக்கு ஃபரா சஞ்சனா என்னும் டிசைனர் வடிவமைத்த கருப்பு நிற கோடு போட்ட வெள்ளை நிற குட்டையான உடையில் அழகாக வந்திருந்தார்.
லைட் மேக்கப்பில் தமன்னா
தமன்னா நல்ல நிறம் என்பதால், அவர் கண்களுக்கு காஜல் மற்றும் லைட்டாக ரோஸ் பவுடர் போட்டிருப்பதே, அவரின் தோற்றத்தை இன்னும் அழகாக காட்டியது.
சைடு-ஸ்வெப்ட் ஹேர் ஸ்டைல்
தமன்னா இந்த குட்டையான உடைக்கு, சைடு-ஸ்வெப்ட் கர்ல்ஸ் ஹேர் ஸ்டைலை பின்பற்றியிருந்தார்.
நீளமான கம்மல்
இந்த உடைக்கு தமன்னா நீளமான வல்லியன் காதணியை அணிந்து வந்திருந்தார்.
கருப்பு நிற ஹீல்ஸ்
தமன்னா உடைக்கு மேட்ச்சாக கருப்பு நிற ஹீல்ஸ் அணிந்து வந்திருந்தார்.
பிங்க் நிற நெயில் பாலிஷ்
தமன்னா விரல் நகங்களுக்கு பேபி பிங்க் நிற நெயில் பாலிஷ் போட்டு வந்திருந்தது, அவரது கைகளின் அழகை வித்தியாசப்படுத்தி காட்டியது.



Click it and Unblock the Notifications