கோலிவுட்டில் தனது நடிப்பை ஆரம்பித்தவர் தான் தமன்னா. இவர் தற்போது பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். அதிலும் இவர் பாலிவுட்டில் வெளியாக இருக்கும் 'ஹம்சகல்ஸ்' என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தினை பல்வேறு இடங்களில் விளம்பரப்படுத்தும் போது பல்வேறு அழகான தோற்றத்தினை மேற்கொண்டார். அந்த வகையில் பிங்க் நிற உடையில் பொம்மை போன்று மிகவும் க்யூட்டாக சமீபத்தில் வந்திருந்தார். இங்கு பிங்க் நிற உடையில் எடுத்த சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
பிங்க் நிற உடையில் தமன்னா
இது தான் தமன்னா அணிந்து வந்த பூப்போட்ட பிங்க் நிற உடை.
தமன்னாவின் மேக்கப்
தமன்னா பால போன்ற நிறம் என்பதால், இவர் லைட் மேக்கப் போட்டாலே, ஃபுல் மேக்கப் போட்டது போல் காணப்படுகிறார். அதுவும் இவர் வெறும் ரோஸ் பவுடர் தான் போட்டுள்ளார். மேலும் உதடுகளுக்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டுள்ளார்.
தமன்னாவின் நெக்லேஸ்
தமன்னா இந்த பிங்க் நிற உடைக்கு நீல நிற மணிகள் தொங்கும் நெக்லேஸ் அணிந்து வந்திருந்தார்.
காலணி
தமன்னா பிங்க் நிற உடைக்கு நியூட் நிற ஹீல்ஸ் கொண்ட ஷூ அணிந்து வந்திருந்தார்.
இஷா குப்தாவுடன் தமன்னா
இது இஷா குப்தாவுடன் தமன்னா சேர்ந்து கொடுத்த போஸ்.
படக்குழுவினருடன் தமன்னா
இது 'ஹம்சகல்ஸ்' என்னும் திரைப்படத்தில் நடித்தோருடன் சேர்ந்து கொடுத்த போஸ்.
மஞ்சள் நிற உடையில் தமன்னா
இது வேறொரு இடத்தில் 'ஹம்சகல்ஸ்' திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் போது தமன்னா அணிந்து வந்த மஞ்சள் நிற குட்டையான உடை.
மேக்கப் இல்லாமல் தமன்னா
இந்த மஞ்சள் நிற உடைக்கு தமன்னா மேக்கப் எதுவும் போடாமல் சிம்பிளாக வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications