தற்போது பாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை ஸ்ருதிஹாசன், பல்வேறு விழாக்களில் அசத்தலான உடையில் வந்து கலக்குகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றிற்கு நடிகை ஸ்ருதிஹாசன், அல்பனா நீராஜ் என்னும் டிசைனர் வடிவமைத்த கருப்பு நிற உடையில் வந்திருந்தார். மேலும் அந்த உடைக்கு அவர் போட்டிருந்த மேக் அப்பை பார்த்தால் அசந்துவிடுவீர்கள். இங்கு அந்த விழாவிற்கு ஸ்ருதிஹாசன் மேற்கொண்ட ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
அல்பனா நீராஜ் கவுனில் ஸ்ருதிஹாசன்
நடிகை ஸ்ருதிஹாசன் அணிந்திருக்கும் இந்த கருப்பு நிற உடை தான் அல்பான நீராஜ் என்னும் டிசைனர் வடிவமைத்தது.
ஸ்ருதிஹாசனின் மேக் அப்
ஸ்ருதிஹாசன் இந்த கருப்பு நிற உடைக்கு போட்டிருந்த மேக் அப்பானது அவரது அழகை வித்தியாசமாக வெளிப்படுத்தியது. அதிலும் அவர் போட்டிருந்த லிப்ஸ்டிக் நிறமானது சற்று தூக்கலாக இருந்தது என்று சொல்லலாம்.
ஸ்ருதிஹாசனின் ஹேர் ஸ்டைல்
ஸ்ருதிஹாசன் இந்த உடைக்கு ஏற்றவாறு மிகவும் அழகாக உச்சந்தலையில் போனிடைல் போட்டு வந்திருந்தார்.
வேலைப்பாடுகள் செய்யப்பட்ட உடை
ஸ்ருதி அணிந்திருந்த கருப்பு நிற உடையின் மேலே ஜொலிக்குமாறான சிறு வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருப்பது, இந்த உடைக்கு இன்னும் அழகு சேர்க்கிறது.
விழாவில் ஸ்ருதி
இது விருது விழாவின் போது, தெரிந்த ஒருவருடன் ஸ்ருதி சேர்ந்து கொடுத்த போஸ்.
ஃபர்ஹான் அக்தருடன் ஸ்ருதிஹாசன்
இது ஃபர்ஹான் அக்தருடன் ஸ்ருதிஹாசன் சேர்ந்து கொடுத்த போஸ்.



Click it and Unblock the Notifications