சமீபத்தில் மலேசியாவில் இருக்கும் கோலாலம்பூரில் 2014 ஆம் ஆண்டிற்கான சிமா விருது விழாவின் பிரஸ் மீட்டானது நடைபெற்றது. இந்த பிரஸ் மீட்டிற்கு நடிகை ஸ்ரேயா, சூர்யா, ராணா டகுபதி மற்றும் வித்யூத் ஜம்வால் போன்றோர் வந்திருந்தனர். இதில் நடிகை ஸ்ரேயா எப்போதும் போல சிக்கென்ற உடையில் அசத்தலாக வந்திருந்தார். இங்கு மலேசியாவில் நடந்த 2014 சிமா பிரஸ் மீட்டிற்கு வந்த ஸ்ரேயா மேற்கொண்ட ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
ரஜத் டாங்ரி உடையில் ஸ்ரேயா
ஸ்ரேயா ரஜத் டாங்ரி என்னும் டிசைனர் வடிவமைத்த மஞ்சள் நிற லேஸ் நெக்லைன் கொண்ட முழங்கால் அளவுள்ள உடையில் வந்திருந்தார்.
ஸ்ரேயாவின் மேக்கப்
ஸ்ரேயா அளவான மேக்கப் மேற்கொண்டிருப்பதோடு, உதடுகளுக்கு வெளிர் ஆரஞ்சு நிற லிப்ஸ்டிக் போட்டு வந்தது அவரது தோற்றத்தை அழகாக வெளிப்படுத்தியது.
ஸ்ரேயாவின் ஹேர் ஸ்டைல்
ஸ்ரேயா மஞ்சள் நிற டாங்ரி உடைக்கு சைடு ஸ்வெப்ட் எடுத்து, குதிரைவால் போட்டு வந்திருந்தது, உடைக்கு பொருத்தமாக இருந்தது.
ஸ்ரேயாவின் ஆபரணங்கள்
ஸ்ரேயா காதுகளுக்கு கல் பதித்த கம்மலும், கைக்கு கைக்கடிகாரம் தவிர, வேறு எந்த ஒரு ஆபரணமும் அணியாமல் சிம்பிளாக வந்திருந்தார்.
கோட்சூட்டில் சூர்யா
நடிகர் சூர்யா கருப்பு நிற கோட்சூட் அணிந்து வந்திருந்தார். இது அவரை 'குரங்கு பொம்மை' கொடுத்து வரவேற்ற போது எடுத்தது.
சூர்யா, ராணா மற்றும் வித்யூத் ஜம்வால்
இது நடிகர்களான சூர்யா, ராணா டகுபதி மற்றும் வித்யூத் ஜம்வால் அருகருகில் அமர்ந்திருந்த போது எடுத்தது.



Click it and Unblock the Notifications