சமீபத்தில் காஜல் அகர்வால் நடித்த தெலுங்கு படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு காஜல் அகர்வால் ஹாட்டான அடர் சிவப்பு நிற நெட்டட் புடவையில் வந்திருந்தார். மேலும் அந்த புடவைக்கு காஜல் மேற்கொண்டு வந்த ஸ்டைல் அவரது தோற்றத்தை சிறப்பாக வெளிக்காட்டியது. இங்கு அந்த இசை வெளியீட்டிற்கு வந்த காஜல் அகர்வாலின் ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
எல்லோரையும் "குனிந்து" பார்க்க வைத்த நிக்கி மினாஜ்!
சிவப்பு நிற புடவையில் காஜல்
இது தான் காஜல் அகர்வால் அணிந்து வந்த அம்ரிதா தக்குர் என்னும் டிசைனர் டிசைன் செய்த அடர் சிவப்பு நிற நெட்டட் புடவை.
கற்கள் பதித்த காதணி
காஜல் சிவப்பு நிற புடவைக்கு கற்கள் பதித்த பெரிய காதணியை அணிந்தது, அவரது முகத்தை பிரகாசமாகக் காட்டியது.
காஜலின் மேக்கப்
காஜல் அடர் சிவப்பு நிற புடவைக்கு ஏற்றவாறு முகத்திற்கு சிவப்பு நிற பிளஷ் அடித்திருப்பதுடன், உதடுகளுக்கு அளவாக சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டு வந்திருந்தது இன்னும் சிறப்பாக வெளிக்காட்டியது.
காஜலின் ஹேர் ஸ்டைல்
காஜல் தலைக்கு லேசாக ப்ரௌன் நிறத்தில் கலரிங் செய்து, கொண்டை போட்டு வந்திருந்தார்.
காஜலின் ஜாக்கெட்
முக்கியமாக காஜல் சிவப்பு நிற நெட்டட் புடவைக்கு பூ எம்பிராய்டரி போடப்பட்ட ஸ்லீவ்லெஸ் ஷீர் ஜாக்கெட் அணிந்து வந்திருந்தது, அந்த சிவப்பு நிற புடவையை அட்டகாசமாக வெளிக்காட்டியது.



Click it and Unblock the Notifications