2014 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது விழாவிற்கு மிகவும் மோசமாக உடையணிந்து வந்த பிரபலங்கள்!!!

By Babu

உயரிய விருதான ஆஸ்கர் விருது விழாவில் பங்கு கொள்ளும் போது அழகாக வருகிறேன் என்று நினைத்து, பல ஹாலிவுட் பிரபலங்கள் மோசமான ஸ்டைலை பின்பற்றி வந்திருந்தனர். அதிலும் அவர்கள் அணிந்து வந்த உடை ஆபாசமாக இருந்தது என்று சொல்வதை விட, போராக இருந்தது என்று சொல்லலாம்.

2014 ஆஸ்கர் விருது விழாவிற்கு கலக்கலான உடையில் வந்த ஹாலிவுட் நடிகைகள்!!!

இங்கு அப்படி 2014 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது விழாவிற்கு மிகவும் மோசமாக உடையணிந்து வந்த பிரபலங்களின் படங்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லிசா மின்னலி

லிசா மின்னலி

லிசா மின்னலிக்கு இந்த நீல நிற உடை நன்றாக இருந்தாலும், உள்ளாடை அணியாமல், மார்பக நுனி தெரிவது போல் அணிந்து வந்திருந்தது, மோசமாக உள்ளது.

அயர்லாந்து பால்ட்வின்

அயர்லாந்து பால்ட்வின்

ஆஸ்கருக்கு மோசமான உடையணிந்து வந்த பிரபலங்களில் ஒருவர் தான் அயர்லாந்து பால்ட்வின். இவருக்கு இந்த நிறம் நன்றாக இருந்தாலும், இந்த கவுன் ஆஸ்கருக்கு போட்டு வருமாறு இல்லை.

ஜெனிபர் கார்னர்

ஜெனிபர் கார்னர்

ஜெனிபருக்கு இந்த உடையை எப்படி தான் உடுத்த வேண்டுமென்று தோன்றியது என்று தெரியவில்லை. ஏதோ பார்ட்டிக்கு வருவது போலான உடையை அணிந்து வந்துள்ளார்.

சாலி ஹாக்கின்ஸ்

சாலி ஹாக்கின்ஸ்

சாலி ஹாக்கின்ஸ் ஏதோ குழந்தைகள் அணிவது போல், முழு கை மற்றும் கழுத்து கொண்ட உடையை அணிந்து போரடித்துவிட்டார்.

ஜேதா பின்கட் ஸ்மித்

ஜேதா பின்கட் ஸ்மித்

ஜேதா பின்கட் ஸ்மித் தேர்ந்தெடுத்த உடையின் நிறம் நன்றாக உள்ளதே தவிர, அவர் உடுத்திய அந்த கவுன் போராகவும், அதே சமயம் ஆஸ்கர் விழாவிற்கு வருவது போன்று வரவில்லை.

காமிளா ஆல்வெஸ்

காமிளா ஆல்வெஸ்

காமிளா ஆல்வெஸ் கூட முழுக்கை கொண்ட பிங்க் நிற கவுன் அணிந்து, மோசமான உடையணிந்து வந்த பிரபலங்களில் ஒருவராகிவிட்டார்.

ஜாரெட் லெடோ

ஜாரெட் லெடோ

சிறந்த துணை நடிகருக்கான விருதைப் பெற்ற ஜாரெட் லெடோ கூட மோசமான டேஸ்ட். ஏனெனில் கருப்பு நிற பேண்ட், வெள்ளை நிற டாக்ஷிடோ அணிந்து மோசமான உடையில் வந்து, விருதைப் பெற்றுள்ளார்.

கோல்டி ஹான்

கோல்டி ஹான்

கோல்டி ஹான் நைட் ட்ரெஸ்ஸிலேயே வந்துவிட்டார் போல் தெரிகிறது. ஆம், இந்த உடையைப் பார்க்கும் போது அப்படி தானே தெரிகிறது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

2014 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது விழாவிற்கு மிகவும் மோசமாக உடையணிந்து வந்த பிரபலங்கள்!!!

Oscars 2014 did have a hand full of worst dressed celebrities. Although we have seen nothing totally bizarre on the red carpet so far, there are some celebrities whose fashion sense we do not agree with. Check out the fashion sinners on the Oscars 2014 red carpet.
Story first published: Monday, March 3, 2014, 12:22 [IST]
Desktop Bottom Promotion