லாக்மி ஃபேஷன் வீக்கின் இரண்டாம் நாளில் ஏஸ் டிசைனரான தருண் தஹிலியானியின் உடை வெளிவந்தது. இந்த டிசைனர் தான் வடிவமைத்த உடைக்கு ஷோஸ்டாப்பராக ஜாக்குலின் பெர்னாண்டஸைக் கொண்டு வந்தார். ஜாக்குலின் மிகவும் அழகான சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிற அனார்கலியில் ராம்ப் வாக் நடந்தார். இங்கு தருண் தஹிலியானி வடிவமைத்த உடைகள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
மணப்பெண் உடையில் ஜாக்குலின்
இது ஜாக்குலின் சிவப்பு மற்றும் ஆரஞ்சு கலந்த நீளமான அனார்கலி கவுனில் ராம்ப் வாக் நடந்த போது எடுத்தது.
ரிலையன்ஸ் நகைகள்
இந்த அனார்கலி கவுனுக்கு ஜாக்குலின் அதிக லேயர்கள் கொண்ட நெக்லேஸ் அணிந்து வந்திருந்தார்.
பூப்போட்ட பிரிண்ட்
இந்த பூ பிரிண்ட் போட்ட லெஹெங்கா மற்றும் துப்பட்டாவும் தருண் தஹிலியானி வடிவமைத்தது.
சில்க்
தருண் தஹிலியானி காட்டன் மற்றும் லேஸ் மட்டுமின்றி, சில்க்கிலும் ஆடையை வடிவமைத்து வெளியிட்டார்.
கோல்டன்
இந்த எம்பிராய்டரி செய்யப்பட்ட கோல்டன் நிற புடவையும் தருண் வடிவமைத்ததே.
லெஹெங்கா புடவை
இந்த அழகான நெட்டட் ப்ரில் லெஹெங்கா புடவையை வடிவமைத்ததும் தருண் தஹிலியானி தான்.
பந்த்கலா குர்தா
தருண் அனார்கலி மற்றும் லெஹெங்காவை தவிர, குர்தாவையும் வடிவமைத்து வெளியிட்டார்.
புடவைகள்
தருண் வித்தியாசமான வெள்ளை நிற புடவைக்கு கருப்பு நிற பைப்பிங் பார்டர் கொண்ட ரெட்ரோ ஸ்டைல் புடவையையும் வெளியிட்டிருந்தார்.
ப்ரில் கொண்ட குர்தா
ப்ளைன் வெள்ளை நிற ப்ரில் கொண்ட அனார்கலி குர்தா மற்றும் அதற்கு ஏற்றவாறான பைஜாமை வடிவமைத்து தருண் வெளியிட்டிருப்பது, சம்மர் கலெக்ஷன்களிலேயே சிறப்பான உடைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.



Click it and Unblock the Notifications