சமீபத்தில் ஸ்காட்லாந்திற்கு இங்கிலாந்து இளவரசர் தனது மனைவி கேட் மிடில்டனுடன் கோடை சுற்றுலாவை மேற்கொண்டார். அப்போது இளவரசி கேட் மிடில்டன் மிகவும் அழகான ஹாட் நிறமான சிவப்பு நிற உடையில் காணப்பட்டார். பொதுவாக திரையுலக நடிகைகள் தான் அனைவராலும் பேசப்படுவார்கள். அதுமட்டுமின்றி சினிமாவில் நடித்தால் தான் யாராக இருந்தாலும் பிரபலமாக முடியும். ஆனால் திரையில் காணப்படாமல், சாதாரண பெண்ணாக இருந்து இளவரசரை மணந்து, பல்வேறு அழகான மற்றும் ஃபேஷனான ஆடைகளை அணிந்து பிரபலமானவர் தான் இளவரசி கேட். இங்கு இவர் கணவருடன் ஸ்காட்லாந்து செல்லும் போது மேற்கொண்ட ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
சிவப்பு உடையில் கேட்
இது தான் கேட் மிடில்டன் ஸ்காட்லாந்தில் அணிந்திருந்த சிவப்பு நிற காலர் கொண்ட கோட் உடை.
ஜோனதன் சாண்டர்ஸ் உடையில்...
கேட் மிடில்டன் அணிந்திருந்த உடையானது ஜோனதன் சாண்டர்ஸ் என்னும் டிசைனரால் வடிவமைக்கப்பட்டது.
மேக்கப் இல்லை
கேட் மிடில்டன் மேக்கப் போடவே இல்லை. இவரிடம் பலருக்கு பிடித்ததே இந்த சிம்பிளான தோற்றம் தான்.
குட்டி பை
கேட் மிடில்டன் சிவப்பு நிற உடைக்கு ஏற்றவாறு, கோல்டன் நிற க்ளட்ச் வைத்திருந்தார்.
ஷூ
கேட் மிடில்டன் சிவப்பு நிற உடைக்கு ஏற்றவாறு நியூட் நிற ஹீல்ஸ் அணிநுது வந்தது உண்மையிலேயே சூப்பர்.
கேட் மிடில்டனின் ஹேர் ஸ்டைல்
கேட் மிடில்டன் நேர் உச்சி எடுத்து ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.
கணவருடன் கேட்
இது கேட் மிடில்டன் இங்கிலாந்து இளவரசரும், தனது கணவருமான வில்லியம்ஸ் உடன் லோக்கல் வின்டேஜ் விஸ்கி குடிக்கும் போது எடுத்தது.



Click it and Unblock the Notifications