கண்களால் பலரைக் கவர்ந்தவர் தான் நடிகை கஜோல். எவ்வளவு தான் வயதானாலும், அவர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது, அட்டகாசமாக வந்து கலக்குவார். அப்படி சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு கஜோல் வந்திருந்தார். அப்போது அவர் பூப்பிரிண்ட் போடப்பட்ட புடவையை அணிந்திருந்தார். அதில் ஒரு ஹைலைட்டே அவர் அணிந்து வந்த ஜாக்கெட் தான். இங்கு கஜோலின் அந்த லுக்கைப் பார்ப்போம்.
பூப்பிரிண்ட் போடப்பட்ட புடவை
இது தான் சமீபத்திய நிகழ்ச்சிக்கு கஜோல் அணிந்து வந்த பூப்பிரிண்ட் போடப்பட்ட, அதே சமயம் சில்வர் பார்டர் கொண்ட புடவை. மேலும் இந்த புடவைக்கு இவர் முத்துக்கள் பதிக்கப்பட்ட ஜாக்கெட்டை அணிந்து வந்தார்.
கஜோலின் ஹேர் ஸ்டைல்
கஜோல் இந்த புடவைக்கு அழகாக கொண்டை போட்டு வந்தார்.
கஜோலின் ஆபரணங்கள்
கஜோல் கழுத்திற்கு எதுவும் அணியாமல், காதுகளுக்கு காதணி மட்டும் அணிந்து வந்தார்.
கஜோலின் மேக்கப்
கஜோல் கண்களுக்கு அழகாக கண் மை தீட்டி, உதடுகளுக்கு மின்னும் லிப்ஸ் கிளாஸ் போட்டு வந்திருந்தார்.
ஏற்கனவே அணிந்ததே!
கஜோல் ஏற்கனவே இதே மாதிரியான புடவையை சில்வர் பார்டர் இல்லாமல் அணிந்து வந்ததுடன், அப்போது காலர் கொண்ட பேக்லெஸ் ஜாக்கெட் அணிந்து வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications