சமீபத்தில் நடந்த PETA என்னும் விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளுக்கு எதிராகப் போராடும் அமைப்பு நடந்திய நிகழ்ச்சி ஒன்றிற்கு இலியானா அட்டகாசமான ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட்டில் வந்திருந்தார். அதில் ஒரு ஹைலைட் என்னவென்றால், அவர் அணிந்து வந்த டி-சர்ட் தான். இங்கு PETA நிகழ்ச்சிக்கு இலியானா மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இலியானாவின் உடை
இது தான் இலியானா அணிந்து வந்த கருப்பு நிற டி-சர்ட் மற்றும் நீல நிற ஜீன்ஸ். இதில் உள்ள ஹை-லைட் நிகழ்ச்சிக்கு ஏற்றவாறு 'FUR' என்னும் வார்த்தையை அடித்தவாறான பிரிண்ட் செய்யப்பட்ட டி-சர்ட் அணிந்து வந்தது தான்.
இலியானாவின் மேக்கப்
இலியானா ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட்டிற்கு பொருத்தமாக மேக்கப் போட்டு வந்திருந்தார். அதிலும் அவர் போட்டு வந்த லிப்ஸ்டிக் மற்றும் கண்களுக்கான காஜல் தான் சூப்பர்.
இலியானாவின் ஆபரணங்கள்
இலியானா உடைக்கு ஏற்றவாறு காதுகளுக்கு குட்டியான தங்க காதணியையும், விரலில் வைர மோதிரமும் அணிந்து வந்திருந்தார்.
இலியானாவின் காலணி
இலியானா ஹை-ஹீல்ஸ் கொண்ட காலணி அணிந்து வந்ததுடன், கால்களுக்கு தங்க கொலுசு போட்டு வந்திருந்தார்.
இலியானாவின் ஹேர் ஸ்டைல்
இலியானா ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட்டிற்கு ஏற்றவாறு நேர் உச்சி எடுத்து ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தது, அவரை அழகாக வெளிக்காட்டியது.



Click it and Unblock the Notifications