மணப்பெண் உடையில் ஆடி அசைந்து ராம்ப் வாக் வந்த கங்கனா ரனாவத்!

By Babu

இந்தியா கவுச்சர் வீக்கின் இரண்டாம் நாளில் பிரபல டிசைனர் அஞ்சு மோடி 'மணிகர்ணிக்கா' என்னும் பெயரில் தனது கலெக்ஷன்களை வெளியிட்டார். இவரது கலெக்ஷன்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருக்குமே பலவிதமான உடைகள் டிசைன் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. மேலும் டிசைன் அஞ்சு மோடி தனது உடைக்கு ஷோஸ்டாப்பராக நடிகை கங்கனா ரனாவத்தை கொண்டு வந்தார். இங்கு அஞ்சு மோடியின் கலெக்ஷன்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு இந்தியா கவுச்சர் வீக்கின் முதல் நாளில் வெளிவந்த டிசைனர் சப்யசாச்சியின் ஆடைகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஷீர் ஊதா நிற புடவை

ஷீர் ஊதா நிற புடவை

இது தான் அஞ்சு மோடி வடிவமைத்த ஷீர் ஊதா நிற புடவை. இதனை குஜராத்தி ஸ்டைலில் மாடல் அழகி உடுத்தி வந்திருந்தார்.

வெண்மை கலந்த பழுப்பு நிற பந்த்கலா மற்றும் வேஷ்டி

வெண்மை கலந்த பழுப்பு நிற பந்த்கலா மற்றும் வேஷ்டி

இது ஆண்களுக்காக அஞ்சு மோடி வடிவமைத்த வெண்மை கலந்த பழுப்பு நிற பந்த்கலா மற்றும் வேஷ்டி. இந்த பந்த்கலா கோட்டின் மேல் வெள்ளை நிற காஷ்மீரி எம்பிராய்டரி செய்யப்பட்டிருந்தது.

பவள நிற புடவை மற்றும் மெஷ் ஜாக்கெட்

பவள நிற புடவை மற்றும் மெஷ் ஜாக்கெட்

இந்த பவள நிற பூப்போட்ட புடவைக்கு, ஷீர் ஃபுல் ஸ்லீவ் ஜாக்கெட்டும் அஞ்சு மோடி வடிவமைத்ததே.

கோல்டன் நிற சில்ஹோட்டே

கோல்டன் நிற சில்ஹோட்டே

இந்த கோல்டன நிற சில்ஹோட்டேவும் அஞ்சு மோடி கலெக்ஷன்களில் ஒன்று.

வெள்ளை நிற சில்ஹோட்டே

வெள்ளை நிற சில்ஹோட்டே

அஞ்சு மோடி வடிவமைத்ததில் ஒரு வித்தியாசம் என்னவென்றால், அவர் வடிவமைத்த இந்த வெள்ளை நிற சில்ஹோட்டேவிற்கு கீழே வேஷ்டி அணிவது போன்றதாகும்.

வெள்ளை நிற புடவைக்கு நீல நிற பந்த்கலா ஜாக்கெட்

வெள்ளை நிற புடவைக்கு நீல நிற பந்த்கலா ஜாக்கெட்

அஞ்சு மோடி வெள்ளை நிற புடவைக்கு நீல நிற பந்த்கலா ஜாக்கெட்டினை வடிவமைத்து வெளியிட்டது, அருமையாக இருந்தது.

வேஷ்டி சூட்

வேஷ்டி சூட்

பொதுவாக கோட் அணிந்தால் கீழே பேண்ட் போடுவோம். ஆனால் அஞ்சு மோடி சற்று வித்தியாசமாக கோட்டிற்கு வேஷ்டியை டிசைன் செய்து வெளியிட்டுள்ளார்.

கோல்டன் வேஷ்டி மற்றும் பந்த்கலா ஜாக்கெட்

கோல்டன் வேஷ்டி மற்றும் பந்த்கலா ஜாக்கெட்

இந்த மாடல் அணிந்து வரும் கோல்டன் நிற வேஷ்டியும், அதற்கு மேலே பந்த்கலா ஜாக்கெட்டும் அஞ்சு மோடி டிசைன் செய்ததே.

வெளிர் நீல சில்ஹோட்டே

வெளிர் நீல சில்ஹோட்டே

இது அஞ்சு வடிவமைத்த வெளிர் நீல நிற ஷீர் சில்ஹோட்டே மற்றும் கோல்டன் நிற வேஷ்டி.

தங்க நிற முகல் குர்தா மற்றம் வெல்வெட் துப்பட்டா

தங்க நிற முகல் குர்தா மற்றம் வெல்வெட் துப்பட்டா

இது ஆண்களுக்கான அஞ்சு மோடி வடிவமைத்த தங்க நிற முகல் குர்தா மற்றும் வெல்வெட் துப்பட்டா.

ஷோஸ்டாப்பர்

ஷோஸ்டாப்பர்

அஞ்சு மோடி தான் வடிவமைத்த உடைக்கு ஷோஸ்டாப்பராக நடிகை கங்கனா ரனாவத்தை கொண்டு வந்தார்.

நீலம் கலந்த கருப்பு நிற லெஹெங்கா

நீலம் கலந்த கருப்பு நிற லெஹெங்கா

ஷோஸ்டாப்பராக வந்த கங்கனா ரனாவத் அடர் நீலம் கலந்த கருப்பு நிற ஃபுல் ஸ்லீவ் க்ராப் டாப் கொண்ட லெஹெங்காவில், ஆடி அசைந்து ராம்ப் வாக் நடந்து வந்தார். மேலும் இவர் அணிந்து வந்த உடையும் அஞ்சு மோடி வடிவமைத்ததே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

மணப்பெண் உடையில் ஆடி அசைந்து ராம்ப் வாக் வந்த கங்கனா ரனாவத்!

ICW 2014 is in its second day today. Anju Modi presented her bridal collection at ICW 2014. Kangana Ranaut walked the ramp at ICW 2014 for Anju Modi.
Story first published: Thursday, July 17, 2014, 10:59 [IST]
Desktop Bottom Promotion