'ஹாட்' நிற உடையில் 'குட்டி குஷ்பு' ஹன்சிகா!

By: Babu
Subscribe to Boldsky

நடிகை ஹன்சிகா தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் பல வெற்றிப் படங்களைக் குவித்து, தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார். சமீபத்தில் இவர் ஐதராபாத்தில் நடந்த 'பவர்' என்னும் தெலுங்கு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அழகான கருப்பு நிற லேஸ் உடையில் வந்திருந்தார். இந்த உடையில் இவர் மிகவும் க்யூட்டாக இருந்தார். இங்கு அந்த 'பவர்' படத்தின் இசை வெளியீட்டிற்கு ஹன்சிகா மேற்கொண்ட ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருப்பு நிற லேஸ் உடையில் ஹன்சிகா
  

கருப்பு நிற லேஸ் உடையில் ஹன்சிகா

ஹன்சிகா கருப்பு நிற கிராப்டாப் மற்றும் நீளமான பாவாடை அணிந்து, அதற்கு மேலே கருப்பு நிற லேஸ் டாப் அணிந்து வந்திருந்தார். ஏற்கனவே இவர் பால் வெள்ளை என்பதால், இந்த கருப்பு நிற உடை அவரது அழகை அதிகரித்து வெளிக்காட்டியது.

 

 

ஹன்சிகாவின் மேக்கப்
  

ஹன்சிகாவின் மேக்கப்

ஹன்சிகா மேக்கப் போட வேண்டிய அவசியமே இல்லை. அதற்கு ஏற்றாற் போல், இவர் டச்சப் செய்து கொண்டு, கண்களுக்கு மின்னும் சில்வர் நிற மேக்கப் போட்டு வந்திருந்தார்.

ஹன்சிகாவின் ஆபரணங்கள்
  

ஹன்சிகாவின் ஆபரணங்கள்

ஹன்சிகா கருப்பு நிற உடைக்கு கைகளில் சிவப்பு கற்கள் பதித்த பிரேஸ்லெட் மற்றும் அதற்கு மேட்ச்சான மோதிரம் அணிந்து, காதுகளுக்கு வைர கற்கள் பதித்த காதணி அணிந்து வந்திருந்தார்.

'ஹாட்' நிற நெயில்பாலிஷ்
  

'ஹாட்' நிற நெயில்பாலிஷ்

ஹன்சிகா தன் விரல்களுக்கு ஹாட் நிறங்களுள் ஒன்றான சிவப்பு நிற நெயில்பாலிஷ் போட்டு வந்திருந்தது பிரமாதமாக இருந்தது.

ஹன்சிகாவின் ஹேர் ஸ்டைல்
  

ஹன்சிகாவின் ஹேர் ஸ்டைல்

ஹன்சிகா சைடு ஸ்வெப்ட் ப்ரீ ஹேர் ஸ்டைலை மேற்கொண்டு வந்திருந்தார்.

 

 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

'ஹாட்' நிற உடையில் 'குட்டி குஷ்பு' ஹன்சிகா!

Actress Hansika Motwani wore black color lace dress at power audio launch. Take a look at her fabulous style.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter