தந்தையர் தினமானது ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்று கிழமையில் கொண்டாடப்படும். இந்நாளில் அனைவரும் தங்களது தந்தையை மகிழ்விக்கும் வகையில் அவர்களுக்கு பிடித்த விஷயங்களை செய்வார்கள். தற்போது ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்து நடைபெற்று கொண்டிருப்பதால், பிரபல கால்பந்து வீரர்களையும், அவர்களின் குழந்தைகளையும் உங்கள் பார்வைக்கு கொடுத்துள்ளோம். அதைப் பார்ப்போமா!!!
லியோனல் மெஸ்ஸி
படத்தில் இருப்பது பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியும், அவரது குழந்தையும்.
நேமர் டா சில்வா சாண்டோஸ் ஜூனியர்
இது நேமர் மற்றம் மெஸ்ஸி தங்களது குழந்தைகளுடன் கொடுத்த போஸ். இவர்கள் இருவரும் பார்சிலோனா கிளப்பிற்காக விளையாடுபவர்கள்.
டேவிட் லுக்கா டா சில்வா
நேமர் 19 வயதிலேயே டேவிட் லுக்கா டா சில்வாவிற்கு தந்தையானவர். தற்போது அவர் தனது காதலியுடன் ஒன்றாக இல்லை.
இளம் வயது தந்தை
பிரேசிலிய கால்பந்து வீரரான நேமர் தனது காதலியுடன் நீண்ட நாட்கள் ஒன்றாக இல்லாவிட்டாலும், தற்போது அவரும், அவரது மகன் டேவிட்டும் பார்சிலோனா கிளப்பில் நிரந்தரமாக இணைந்துவிட்டனர்.
பெர்னாண்டோ டோரஸ்
இது பெர்னாண்டோ டோரஸ் மற்றும் அவரது மகன் லியோ சிறுவயதில் மைதானத்தில் ஒன்றாக இருக்கும் போது எடுத்தது.
கிறிஸ்டியானோ ரொனால்டோ
பிரபல கால்பந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது மகனுக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ ஜூனியர் என்ற பெயரிட்டுள்ளார். இது அவர்கள் இருவரும் ஆனந்தத்தில் கட்டிப்பிடிக்கும் போது எடுத்தது.
ஜூனியர் ரொனால்டோ
முக்கியமான ஒன்று ஜூனியர் ரொனால்டோவின் தாய் யாரென்று இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
கெவின் பிரின்ஸ் போடங்க்
கெவின் பிரின்ஸ் தனது மனைவியுடன் உள்ள தகராறில், தன் மகனை தினமும் காண முடியாத நிலையில் உள்ளார். மேலும் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை மட்டும் தான் தன் மகனை காணும் அனுமதி அவருக்கு கிடைத்துள்ளது.
மெசுட் ஓசில்
ஜெர்மன் வீரரான மெசுட் ஓசில் தனது சொந்த வாழ்க்கையைப் பற்றி அதிகம் பேசியதில்லை. இருப்பினும் அவரும் தனது தந்தைப்பருவத்தை சந்தோஷமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.
ஜெரார்டு பிக்
ஸ்பெயின் வீரரான ஜெரார்டு பிக் மற்றும் பிரபல பாடகி ஷகிராவிற்கு பிறந்த ஆண் குழந்தை தான் மிலன். இது ஜெரார்டு தனது மகனை மைதானத்தல் அன்புடன் தூக்கிய போது எடுத்தது.



Click it and Unblock the Notifications