Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
2014 ஆம் ஆண்டின் வி4 எண்டர்டெயினர் திரைப்பட விருது விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள்!!!
ஒவ்வொரு வருடமும் வி4 எண்டர்டெயினர் சார்பில் திரைப்பட விருது விழாவானது நடைபெறும். அந்த வகையில் இந்த வருடமும் வி4 எண்டர்டெயினர் திரைப்பட விருது விழாவானது இன்று (ஜனவரி 2) நடைபெற்றது. இதில் பல்வேறு கோலிவுட் நடிகர், நடிகைகள் கலக்கலாக வந்து, விழாவினை சிறப்பாக கொண்டு சென்றனர்.
அதில் நடிகர்களில் அர்ஜூன், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி மற்றும் பலரும், நடிகைகளில் லட்சுமி மேனன், ப்ரியா ஆனந்த், தன்சிகா மற்றும் பலரும் குறிப்பிடத்தக்கவர்கள். இங்கு 2014 ஆம் ஆண்டின் வி4 எண்டர்டெயினர் திரைப்பட விருது விழாவிற்கு வந்த நடிகர், நடிகைகளின் படங்கள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

ப்ரியா ஆனந்த்
வி4 எண்டர்டெயினர் திரைப்பட விருது விழாவிற்கு நடிகை ப்ரியா ஆனந்த் சிவப்பு நிற அனார்கலியில் அசத்தலாக வந்திருந்தார்.

லட்சுமி மேனன்
நடிகை லட்சுமி மேனன் மயில் நிற லேஸ் கொண்ட சுடிதாரில் வந்திருந்தார்.

தன்சிகா
இந்த விழாவிற்கு நடிகை தன்சிகா ஒற்றை தோள்பட்டை கொண்ட நீல நிற கவுனில் சூப்பராக வந்திருந்தார்.

பிந்து மாதவி
நடிகை பிந்து மாதவி சிவப்பு நிற புடவைக்கு வித்தியாசமான ஸ்டைலில் காலர் கொண்ட ஜாக்கெட் அணிந்து கலக்கலாக வந்திருந்தார்.

ஐஸ்வர்யா அர்ஜூன்
மிகவும் பிரபலமான நடிகரான அர்ஜூனின் மகள் தான் ஐஸ்வர்யா அர்ஜூன். இவரும் இந்த விழாவில் கலந்து கொண்டார். அதிலும் நெக்லைன் கொண்ட வெள்ளை நிற குட்டையான உடையில் கலந்து கொண்டார்.

அர்ஜூன்
எவ்வளவு வயதானாலும் இன்னும் இளமையாக காட்சியளிக்கும் நடிகர்களில் ஒருவர் தான் அர்ஜூன். இவர் இந்த விழாவிற்கு கருப்பு நிற உடையில் இளமை மாறாத தோற்றத்தில் வந்திருந்தார்.

ஷாம்
நடிகர் ஷாம் கருப்பு நிற ஜாக்கெட் கோட் மற்றும் நீல நிற ஜீன்ஸ் அணிந்து வந்திருந்தார்.

சிவகார்த்திகேயன்
இன்றைய முன்னணி ஹீரோக்களில் ஒருவர் தான் சிவகார்த்திகேயன். இவர் நீல நிற சட்டையில் சூப்பராக வந்திருந்தார்.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதியை திரையில் பார்த்தாலே போதும் அவ்வளவு விசில் பறக்கும். அந்த அளவில் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள நடிகர்களில் ஒருவர் தான் விஜய் சேதுபதி. இவரும் இவ்விழாவிற்கு வந்திருந்தார்.

கௌதம் கார்த்திக்
கடல் படத்தின் மூலம் பிரபலமானவர் தான் கௌதம் கார்த்திக். இவர் கூட இவ்விழாவில் கலந்து கொண்டார்.

விக்ரம் பிரபு
பிரபலமான நடிகரான பிரபுவின் மகன் தான் விக்ரம் பிரபு. இவர் தனது முதல் படத்திலேயே அசத்தலாக நடித்து நல்ல பெயரைப் பெற்றவர். இவரும் இந்த வி4 எண்டர்டெயினர் திரைப்பட விருது விழாவிற்கு வந்திருந்தார்.

சூரி
காமெடி நடிகரான சூரியும், இந்த திரைப்பட விருது விழாவில் பங்கு கொண்டார்.

சதீஷ்
இவர் மற்றொரு காமெடி நடிகர். இவரும் இவ்விழாவில் ஸ்மார்ட்டாக வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications