பாலிவுட் கனவுக் கன்னியாக திகழ்ந்த ஹேமமாலினியின் இரண்டாம் மகளான அஹானா தியோலின் திருமண வரவேற்பிற்கு ஐஸ்வர்யா ராய் பச்சன் உட்பட பல பாலிவுட் முன்னணி பிரபலங்கள் அட்டகாசமான உடையில் வந்து, திருமண வரவேற்பில் கலக்கினர். இங்கு இந்த திருமண வரவேற்பிற்கு வந்த பிரபலங்களின் படங்கள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது.
திருமண வரவேற்பில் அசத்தலான உடையில் அஹானா தியோல்
இவர் தான் ஹேமமாலினியின் மகள் அஹானா தியோல். அவருக்கு அருகில் இருப்பவர் தான் மணமகன் வைபவ். திருமண வரவேற்பின் போது மணமகளான அஹானா மனீஷ் மல்ஹொத்ரா வடிவமைத்த அனார்கலி உடையில் மிகவும் க்யூட்டாக இருந்தார்.
மகளின் திருமண வரவேற்பில் ஜொலிக்கும் ஹேமமாலினி
நடிகை ஹேமமாலினி தனது மகளின் திருமண வரவேற்பில் வெளிர் பச்சை நிற எம்பிராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்பட்ட புடவையில் ஜொலித்தார்.
திருமண வரவேற்பில் ஐஸ்வர்யா ராய் பச்சன்
ஐஸ்வர்யா ராய் நியான் பிங்க் நிற சுடிதார் சூட்டில் வந்திருந்தார். மேலும் அபிஷேக் பச்சன் கருப்பு நிற கோட் சூட்டில் வந்திருந்தார்.
புடவையில் தீபிகா படுகோனே
தீபிகா படுகோனே கரீஷ்மா மற்றும் மோனிகா வடிவமைத்த ஆரஞ்சு மற்றும் பவள நிறம் கலந்த எம்பிராய்டரி செய்யப்பட்ட புடவையில் வந்திருந்தார்.
நீல நிற புடவையில் சோனாக்ஷி சின்ஹா
நடிகை சோனாக்ஷி சின்ஹா அடர் நீல நிற லெஹெங்கா புடவையில் டக்கராக வந்திருந்தார்.
அனார்கலியில் ஜூஹி சாவ்லா
ஜூஹி சாவ்லா குங்குமப்பூ மற்றும் பிங்க் நிறம் கலந்த அனார்கலியில் வந்திருந்தார்.
திருமண வரவேற்பில் ரேகா
நடிகை ரேகா காஞ்சிபுர பட்டுப்புடவையில் வந்திருந்தார்.
தியா மிர்சா
தியா மிர்சா கோல்டன் எம்பிராய்டரி செய்யப்பட்ட சிவப்பு நிற புடவையில் வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications