2014 ஆம் ஆண்டு கேன்ஸ் விழாவின் ஐந்தாம் நாளன்று இந்திய பிரபலங்களான சோனம் கபூர், ஃபிரிடா பின்டோ மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் போன்றோர் வந்திருந்தனர். இதில் ஒரு ஹைலைட் என்னவென்றால், இந்திய பிரபலங்களான சோனம் கபூர் மற்றும் ஃபிரிடா பின்டோ ஓல்டு கெட்டப்பில் வந்திருந்தனர். இங்கு 2014 ஆம் ஆண்டு கேன்ஸ் விழாவின் ஐந்தாம் நாளன்று வந்த பிரபலங்களின் போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
ஹிலாரி ஸ்வாங்க்
ஹிலாரி ஸ்வாங்க் வெள்ளை நிற ஒற்றைத் தோள்பட்டை கொண்ட கவுனில் வந்திருந்தார்.
ஃபிரிடா பின்டோ
ஃபிரிடா பின்டோ பவள நிற ஸ்ட்ராப்லெஸ் கவுனில், பழங்கால நடிகை தோற்றத்தில் வந்திருந்தார்.
அட்ரியானா லிமா
அட்ரியானா லிமா செக்ஸியான ஸ்ட்ராப்லெஸ் கவுனில் வந்திருந்தார்.
ராபர்ட் பாட்டின்சன்
ராபர்ட் பாட்டின்சன் பச்சை நிற கோட் மற்றும் போலோ நெக் டி-சர்ட் அணிந்து வந்திருந்தார்.
சோனம் கபூர்
சோனம் கபூர் 60-களில் இருந்த ஹாலிவுட் ஹீரோயின் போன்று கருப்பு நிற எலீசாப் பால்ரூம் கவுனில் வந்திருந்தார்.
மோனிகா பெல்லுகி
மோனிகா இரண்டு தோற்றத்தில் காணப்பட்டார். அதில் சிவப்பு கம்பளத்தில் நடக்கும் போது, கருப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் கவுனும், நடப்பதற்கு முன்பு சிவப்பு நிற போல்கா டாட்ஸ் கொண்ட கவுனும் அணிந்திருந்தார்.
ஜேசன் சத்தம்
2014 ஆம் ஆண்டு கேன்ஸ் விழாவிற்கு ஜேசன் சத்தம் கருப்பு நிற டாக்ஷிடோ சூட்டில் வந்திருந்தார்.
சில்வஸ்டர் ஸ்டலோன்
சில்வஸ்டர் ஸ்டலோன் வெள்ளை நிற சட்டை அணிந்து, மேலே ஊதா நிற கோட் போட்டு வந்திருந்தார்.
மெல் கிப்சன்
மெல் கிப்சன் தாடி வைத்துக் கொண்டு, அடர் நீல நிற கோட் சூட்டில் வந்திருந்தார்.
ஐஸ்வர்யா ராய் பச்சன்
ஐஸ்வர்யா ராய் பச்சன் சிவப்பு கம்பளத்தில் நடக்காவிட்டாலும், கேன்ஸ் நகரில் லோரியல் பெண்களான ஃபிரிடா பின்டோ, ஈவா லங்கோரியா போன்றோருடன் சேர்ந்து வெள்ளை நிற உடையில் போட்டோ எடுத்துக் கொண்டார்.



Click it and Unblock the Notifications