2014 ஆம் ஆண்டின் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதின் பத்திரிக்கையாளர் மாநாட்டிற்கு பாலிவுட் நடிகையான பிபாசா பாசு வந்திருந்தார். இவர் மிகவும் அழகாக பச்சை நிற நெட்டட் புடவையில் வந்து, அங்குள்ளோர் அனைவரது பார்வையும் அவர் மீது படுமாறு க்யூட்டாக வந்திருந்தார். இங்கு பத்திரிக்கையாளர் மாநாட்டிற்கு பிபாசா பாசு மேற்கொண்ட ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
மனீஷ் மல்ஹொத்ரா உடையில் பிபாசா பாசு
பிபாசா பாசு 2014 ஆம் ஆண்டின் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதின் பத்திரிக்கையாளர் மாநாட்டிற்கு, மனீஷ் மல்ஹொத்ராவின் அடர் பச்சை நிற நெட் புடவையில் வந்திருந்தார்.
பிபாசா பாசுவின் அழகான கண்கள்
பிபாசா பாசு பச்சை நிற புடவைக்கு ஏற்றவாறு கண்களுக்கு ஸ்மோக்கி மேக் அப் போட்டு வந்திருந்தார்.
பிபாசாவின் அட்டகாசமான நகைகள்
பிபாசா பாசு மனீஷ் மல்ஹொத்ராவின் புடவைக்கு அட்டகாசமான நகைகளை அணிந்து வந்திருந்தார். அவரது அழகை அந்த நகைகள் தான் அதிகரித்து வெளிப்படுத்தியது.
பிபாசாவின் மேக் அப்
பிபாசா பாசு இவ்விழாவிற்கு சிம்பிளாக மேக் அப் போட்டு வந்திருந்தார்.
பிபாசா பாசுவின் ஹேர் ஸ்டைல்
பிபாசா பாசு மனீஷ் மல்ஹொத்ராவின் நெட்டட் புடவைக்கு ஏற்றவாறு கொண்டை ஹேர் ஸ்டைலை பின்பற்றி வந்திருந்தார். இது அவருக்கு பாரம்பரிய தோற்றத்தை அள்ளிக் கொடுத்தது.
பிபாசாவின் தங்க வளையல்கள்
பெண்களுக்கு தங்க நிற ஆபரணங்கள் எப்போதுமே அழகை அதிகரித்து வெளிப்படுத்தும். அந்த வகையில் பிபாசா அணிந்துள்ள தங்க வளையல்கள் அவருக்கு அழகை அதிகரித்து காட்டியது.
ஹாட் நிற நெயில் பாலிஷ்
பிபாசா பாசு அவரது அழகான நகங்களுக்கு சிவப்பு நிற நெயில் பாலிஷ் போட்டு வந்திருந்தது, அவரது தோற்றத்தை கிளாமராகவும், அதே சமயம் அழகாகவும் வெளிப்படுத்தியது.



Click it and Unblock the Notifications