Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
2014 ஆம் ஆண்டு கிராமி விருது விழாவின் சில சிறந்த தருணங்கள்!!!
ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் நடக்கும் கிராமி விருது விழாவானது, ஒவ்வொரு இசைக் கலைஞர்களுக்கும் மறக்க முடியாத விருது விழாக்களில் ஒன்றாகும். ஏனெனில் இசைக்கலைஞர்களுக்காக நடத்தப்படும் ஒரே விருது விழா தான் இது. இந்த வருடம் நடந்த விருது விழாவில் மறக்க முடியாதவாறான சில தருணங்கள் நிகழ்ந்தன.
கிராமி விருது விழாவிற்கு அபத்தமான உடையில் வந்த பிரபலங்கள்!!!
அதில் முக்கியமான ஒன்று பிரபல பாடகியான பியான்ஸ் மேடையில் அருமையாக நடனமாடி பாடிக் கொண்டிருக்கும் போது, அவரது காதலர் ஜே Z மேடைக்கு வந்து, பியான்ஸ் உடன் சேர்ந்து ரொமான்ஸாக பாடியது மட்டுமின்றி, பாடல் பாடி முடித்த பின்னர், இருவரும் மேடையிலேயே முத்தம் கொடுத்துக் கொண்டனர். இங்கு அந்த தருணங்கள் மற்றும் அதுப் போன்ற வேறு சில தருணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பியான்ஸ்
கிராமி விருது விழாவின் போது மேடையில் பிரபல பாப் பாடகி பியான்ஸ் மிகவும் அருமையாக நாற்காலியைக் கொண்டு நடனமாடியவாறே பாடலைப் பாடினார்.

ஜே Z
பியான்ஸ் அருமையாக பாடிக் கொண்டிருக்கும் போதே, அவரது காதலர் ஜே Z-ம் மேடையில் வந்து அவருடன் சேர்ந்து, மனம் உருக பாடலைப் பாடினார்.

கேட்டி பெர்ரி
இது பாடகி கேட்டி பெர்ரி வித்தியாசமாக குச்சியை வைத்து நடனமாடிக் கொண்டே பாடும் போது எடுத்தது. இந்த நிகழ்வும் மறக்க முடியாத ஒரு தருணங்களுள் ஒன்றாகும்.

சிகாரா
கர்ப்பமாக இருக்கும் சிகாரா மிகவும் அழகான மின்னும் எமிலியோ கவுனில் வந்து அசத்தியதும் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றே.

சிறந்த புதுமுக கலைஞர்
மேக்கிள்மோர் & ரியான் லீவிஸ் என்னும் புதிய கலைஞர் கிராமி விருது விழாவில் சிறந்த புதுமுக கலைஞருக்கான விருதை பெற்றதோடு, கலந்து கொண்ட முதல் கிராமி விருது விழாவிலேயே 4 கிராமி விருதுகளைப் பெற்றுள்ளார். இதுவும் மிகவும் சிறந்த தருணங்களில் ஒன்றே.

ஜூலியா ராபர்ட்ஸ்
46 வயதான மிகவும் அட்டகாசமான நடிகையான ஜூலியா ராபர்ட்ஸ் திடீரென்று கருப்பு நிற லேஸ் எலீசாப் உடையில் வருகை தந்து, கிராமி விழாவின் மேடைக்கு வந்து பால் மெக்கார்ட்னி மற்றும் ரிங்கோ ஸ்டார் போன்றோரை அறிமுகப்படுத்தினார்.

டெய்லர் ஸ்விஃப்ட்
டெய்லர் ஸ்விஃப்ட் கிராமி விழாவின் மேடையில் மிகவும் உணர்ச்சிவசமான மற்றும் மனதைக் கவரும் படியான பாடலைப் பாடி அசத்திவிட்டார்.

போஸ்
இது பியானஸ், ஜே Z, ராபின் திக், பவுலா பாட்டன் ஆகியோர் சேர்ந்து ஒன்றாக போஸ் கொடுத்தனர்.

பிங்க்
பிங்க் மிகவும் அசத்தலாக கிராமி மேடையில் பெர்ஃபார்ம் செய்து அங்குள்ளோரை ஆச்சரியத்தில் மூழ்கச் செய்ததும் சிறந்த தருணங்களில் ஒன்றாகும்.

முத்தம்
கிராமி விழாவில் அசத்தலாக பியான்ஸ் மற்றும் ஜே Z பாடலைப் பாடி முடித்த பின்னர், மேடையிலேயே முத்தம் கொடுத்துக் கொண்டனர்.



Click it and Unblock the Notifications