2014 ஆம் ஆண்டின் மிர்ச்சி மியூசிக் விருது விழாவிற்கு இசைக் கலைஞர்கள் மட்டுமின்றி, பல்வேறு பிரபலங்களும் தான் கலக்கலான உடையில் வந்திருந்தனர். அதிலும் கவுன், ஜம்ப்சூட், புடவை என பல உடைகளில், மிகவும் ஸ்டைலாக வந்திருந்தனர். இங்கு அந்த மிர்ச்சி மியூசிக் விருது விழாவிற்கு வந்திருந்த பிரபலங்களின் படங்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
மிர்ச்சி மியூசிக் விருது விழாவில் இலியானா
நடிகை இலியானா கருப்பு நிற ஜம்ப்சூட்டில் வந்திருந்தார்.
மிர்ச்சி மியூசிக் விருது விழாவில் மாதுரி தீட்சித்
இது நடிகை மாதுரி தீட்சித் மிகவும் அழகான பிங்க் நிற ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் வந்த போது எடுத்தது.
கருப்பு நிற உடையில் நர்கிஸ் பக்ரி
நர்கிஸ் பக்ரி கருப்பு நிற ஜம்ப்சூட்டில் சிம்பிளாகவும், ஸ்டைலாகவும் வந்திருந்தார்.
மிர்ச்சி மியூசிக் விருது விழாவில் சோஃபி சௌத்ரி
சோஃபி சௌத்ரி டீப் நெக் கொண்ட நியான் பிங்க் நிற கவுனில் வந்திருந்தார்.
மிர்ச்சி மியூசிக் விருது விழாவில் திவ்யா கோஸ்லா குமார்
திவ்யா கோஸ்லா குமார் சோனாக்ஷி புடவை மற்றும் கவுன் கலந்த ஆடையை அணிந்து படு அட்டகாசமாக வந்திருந்தார்.
மிர்ச்சி மியூசிக் விருது விழாவில் ஷில்பா சுக்லா
ஷில்பா சுக்லா ஒற்றை தோள்பட்டை கொண்ட பெப்லம் ஸ்டைல் கவுனை அணிந்து வந்திருந்தார்.
மிர்ச்சி மியூசிக் விருது விழாவில் அனுஷ்கா மன்சண்ந்தா
அனுஷ்கா சிவப்பு மற்றும் வெள்ளை கோடுகள் போடப்பட்ட கவுரி மற்றும் நைனிகா உடையில் வந்திருந்தார்.
ஸ்வரா பாஸ்கர்
ஸ்வரா இந்த முறை புடவை அல்லது கவுனில் வராமல், கருப்பு நிற ஷீத் உடையில் வித்தியாசமாக வந்திருந்தார்.
தனிஷா முகர்ஜி
தனிஷா பிங்க் நிற மெர்மெய்டு கவுன் அணிந்து, முத்து பதித்த நெக்லேஸ் போட்டு வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications